சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

Posted by vedaprakash மேல் திசெம்பர் 16, 2022

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

15-12-2022: தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது[1]: சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிச.15) தொடங்கியது[2]. தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மருத்துவ வல்லுநா்கள் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்றனா்[3]. 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமார், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்குநா் கணேஷ், பல்கலைக்கழகப் பதிவாளா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்[4]. இதில், துணை வேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது[5]: “அதிகரித்து வரும் புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த, சித்த மருத்துவம் தன் பங்களிப்பை அளிக்கும். சித்த மருத்துவத்துடன் பல்கலை இணைந்து செயல்படும்……இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் சமூகத்துக்கு ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது[6]. நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா, கரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் அதிமுக்கிய பங்கு வகித்ததை எவரும் மறுக்க இயலாது. அதேபோன்று, இந்தியாவைக் கடந்து பிற நாடுகளிலும் அந்த மருத்துவம் வியாபித்துள்ளது[7]. அதை உலகெங்கும் முன்னெடுத்து செல்வது அவசியம். அதன் பொருட்டு, கால சூழலுக்குத் தக்கவாறு சில விஷயங்களை அதில் மேம்படுத்துவது அவசியம். குறிப்பாக, சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். அதனுடன் அந்த மருத்துவ முறையை தரப்படுத்துதலும் இன்றியமையாத் தேவையாக உள்ளது. சித்தா்கள் அருளிய அந்த மருத்துவ முறையில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளின் அளவுகள், குணங்கள் தற்போது எவ்வாறு பயன்பாட்டில் உள்ளன என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால், பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் குணத்துக்கும், அதே மூலிகைகள் வேறு மண் பரப்பில் வளரும் போது ஏற்படும் மாற்றத்துக்கும் வேறுபாடு உள்ளது. அவற்றை பகுப்பாய்ந்து நோய்களின் தன்மைக்கேற்ப சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதே தற்போதைய தலையாய தேவை ….,”. இவ்வாறு அவர் பேசினார்.

16-12-2022 அன்று முடிவடைந்தது: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் பேசியதாவது: “தற்போது, அரசு சித்தா டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கான தனி பல்கலை விரைவில் துவங்க உள்ளது. மேலும், 25 கோடி ரூபாய் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். ஆய்வு கட்டுரைகள் [சுருக்கம்] அடங்கிய புத்தகம் வெளியிடப் பட்டது.

  1. வரவேற்க்கப் பட்டவர்களின் கட்டுரைகள் -12
  2. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவர்கள்] – 50
  3. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை வகுப்பினர்] –  157
  4. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [இயற்கை விஞ்ஞானம்] – 13
  5. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [பட்டப் படிப்பினர்] – 450

இப்படி 607 ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கம், 360 பக்கங்களில் அடக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டுரையின் ஆசிரியர் ஒன்றிற்கும் மேலாக, ஏன் 2, 3, 4 என்று நீள்கிறது. பிறகு, இரண்டு என்றாலே 1200, மூன்று என்றால் 1800 என்று கணக்கு வருகிறது. பொறுமையாக அந்த சுருக்கங்களைப் படித்துப் பார்த்தால், 60% அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். Introduction, aim, methodology, result, conclusion, keywords என்றெல்லாம் போட்டு கட்டுரை தயாரித்தாலும், அதில் செயற்கையான முறை தான் தெரிகிறதே தவிர, புதியதாக எதையும் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. தமிழில் உள்ள சில கட்டுரைகளில் ஒன்றும் புதியதாக இல்லை. சோதனைக் கூடங்கள் மூலமாக நடத்தப் பட்ட மருத்துவ ஆய்வுகள் [clinical studies] என்று கூறிக் கொண்டாலும்ண் அத்தகைய முறைகள் கையாளப் பட்டதாகத் தெரியவில்லை. எந்திரத்தனமான, வழக்கமான மற்றும் சடங்குப் போன்ற முறையில் எழுதப் பட்ட தோற்றம் தான் புலப்படுகிறது. அந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2022ல் வந்த செய்தியை கவனிக்க வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் 2022 – சென்னை சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி செய்து கொண்ட ஒப்பந்தம்: சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு மையமாக  சென்னை சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்) விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழிநுட்ப பாடப்பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக சென்னை ஐஐடி விளங்குகிறது. இந்நிலையில், சித்த மருத்துவம் கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, என்.ஐ.எஸ். இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் கையெழுத்தானது. இது தொடர்பாக, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதிய பாடத் திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல்வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை உதவும்,” என்று தெரிவிக்கப்பட்டது[8].

சித்த மருத்துவத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது: இந்த கூட்டுமுயற்சியின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி,”இந்திய மருத்துவத்தில் சித்தா மிக முக்கிய புள்ளியாகும். சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்,” எனக் குறிப்பிட்டார்[9]. கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், வெப்மினார்கள், மாநாடுகள், பாடத் திட்டங்களைத் தொடருதல் [தொடர் மருத்துவக் கல்வி (CME) உள்பட], கல்வித் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும். கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

சித்தமருத்துவ ஆராய்ச்சி இன்றியமையாதது: இவ்வாறு சென்னையிலேயே, சித்த மருத்துவம், சித்த மருத்துவமனை, என்றெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிர்வகித்து வருகின்ற நிலையுள்ளது. ஆனால், சித்த மருத்துவ சோதனை, சித்த மருத்துவ பரிசோதனை, சித்த மருத்துவ சோதனைக் கூடம், சித்த மருந்துகளை உபயோகித்து அதற்றின் நோய் தீர்க்கும் முறை கண்டறிதல், மெய்ப்பித்தல், போன்றவை நடத்தப் பட்டனவா, விலைவுகள் என்ன, முடிவுகள் என்ன, வெற்றி சதவீதம் என்ன போன்றவைப் பற்றி தெரியாமல் இருக்கின்றன. சர்வரோக நிவாரிணி ரீதியில் விளம்பரங்கள், யூ-டியூப் போன்றவற்றை வைத்துக் கொண்டு அதிரடி பேச்சுகள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், என்பவை இருக்கத் தான் செய்கின்றன. ஆகவே, அவை தொடர்ந்து நடக்க வேண்டும், ஆராய்ச்சிகளும் செயல்பட வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-12-2022.


[1] டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேசிய சித்த மருத்துவ மாநாடு, TNPSCPortal.In, December 15, 2022.

https://www.tnpscportal.in/2022/12/blog-post_72.html

[2] தினமணி, தேசிய சித்த மருத்துவ மாநாடு இன்று தொடக்கம், By DIN  |   Published On : 15th December 2022 12:15 AM  |   Last Updated : 15th December 2022 12:15 AM.

[3]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3967052.html

[4] தினமலர், சித்த மருத்துவ ஆராய்ச்சி ரூ.25 கோடி ஒதுக்கீடு, Added : டிச 16, 2022  08:23.

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3195609

[6] தினமணி, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன், By DIN  |   Published On : 16th December 2022 06:35 AM  |   Last Updated : 16th December 2022 06:35 AM

[7]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3967837.html

[8] நியூஸ்.18.தமிழ், சித்த மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடி: சித்த மருத்துவ நிறுவனத்துடன் ஒப்பந்தம், NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 08, 2022, 14:21 IST

[9] https://tamil.news18.com/news/education/chennai-iit-is-partnering-with-chennai-national-institute-of-siddha-on-research-and-clinical-studies-781927.html

பின்னூட்டமொன்றை இடுக