சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘லெட்டினென்ட் எச். பவர்’ Category

பாரத–பழங்கால இந்தியாவின் சித்தர்கள் ஆரியர்களா-திராவிடர்களா-வந்தேறிகளா?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 6, 2012

பாரதபழங்கால இந்தியாவின் சித்தர்கள் ஆரியர்களாதிராவிடர்களாவந்தேறிகளா?

இந்தியாவின் மருத்து வத் தொன்மை: நிச்சயமாக இந்தியா மிகத்தொன்மையான நாகரிகத்தை இடையில்லாமல், தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது. ஆகவே இந்திய மக்களின் தொன்மையும் அவ்வாறே கணக்கிடப்படுகிறது. அத்தொன்மை அம்மக்களின் ஆரோக்யம், மருத்துவமுறை, நோய் தீர்க்கும் முறைகள், குழந்தைகளைப் பெற்றெடுக்கும்-வளர்க்கும் முறைகள், ஆரோக்யமான ஆயுளை நீட்டிக்கும் முறை, முதலியவற்றின் மீது ஆதாரமான உள்ளன.  இவற்றிற்கு மக்களே அத்தாட்சியாக இருக்கிறார்கள். ஏனெனில் உலகத்திலேயே, இரண்டே இரண்டு நாகரிகங்கள் தாம், அதிகமான மக்கட்தொகையுடன், தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னபடி, ஐரோப்பியர்கள் தங்கள் உடல்களில் காட்டுமிராண்டிகள் போல வண்ணங்களைப் பூசிக்கொண்டு, காடுகளில் திரிந்து, குகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தலைசிறந்த நாகரிகம் இருந்தது. அந்நிலையில் இந்திய மருத்துவத் தொன்மையினைப் பற்றி ஆராய்வோம்.

இந்திய எலும்பியல் புத்தகம் (4-5ம்நுற்றாண்டைச்சேர்ந்தது): பவர் ஓலைச்சுவடி (Bower manuscript[1]) என்பது சுமார் நான்காம் நூற்றாண்டு வாக்கில் ஒரு மாணவன் வைத்திருந்த புத்தகம் அல்லது கையெழுத்துப் பிரதி கையேடு ஆகும். மரப்பட்டையில் எழுதப்பட்டு 51 சுவடிகள் கிடைத்தன. அப்படியென்றால் எத்தனை சுவடிகள்-பக்கங்கள் காணாமல் போயின என்று தெரியவில்லை[2]. லெட்டினென்ட் எச். பவர் (Lieutenant Hamilton Bower) என்பவரால் மத்திய ஆசியாவில் 1890ல் கஷ்ச்கர் என்ற இடத்தில் ஒரு பழைய பௌத்த ஸ்தூபியின் அடியில் கண்டெடுத்ததால், அவர் பெயரில் அழைக்கப் படுகிறது[3]. ஆனால் அந்த மருத்துவப் புத்தகம் அல்லது கையேடு யாருடையது என்று தெரிவிக்கப்படவில்லை. கையெழுத்து – வரிவடிவம் அமைப்பு முறையில் அது சுமார் நான்காம் நூற்றாண்டு என்று தேதியிடப்பட்டுள்ளது. ஆனால், அதிலுள்ளவை (மருத்துவ விஷயங்கள்) அந்த நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல. இந்திய மருத்துவத்தின் தொன்மைக்கு ஆதாரமாக இது எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால் அவற்றில் எழுதப்பட்டவை சுமார் 600 BCE காலத்தில் சுஷ்ருதர் மற்றும் சரகர் எழுதிய மருத்துவ நூல்களில் உள்ளவற்றை உறுதிப்படுத்துகின்றது[4]. அதாவது சுமார் 1000 வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த எலும்பியல் மருத்துவமுறை அப்புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தது.

Contents

Parts I to III, the three medical treatises of the collection, comprise a total of 1,323 verses and some prose; … It is evident from this familiarity with metrical writing that the author of the three medical treatises was well versed in Sanskrit composition. … The author of parts IV-VII was not conversant with scholarly Sanskrit; these treatises are written, in a mixed type of language.

Part I opens with a flowery description of the Himalayas, where a group of mu­nis reside, interested in the names and properties of medicinal plants. Mentioned by name are the following sages: Ātreya, Hārīta, Parāśara, Bhela, Garga, Śāmbavya, SuśrutaVasiṣṭha, Karāla, and Kāpya. Suśruta, whose curiosity is aroused by a particular plant, approaches muni Kāśirāja, enquiring about the nature of this plant. Kāśīrāja, granting his request, tells him about the origin of the plant, which proves to be garlic (laśuna), its properties and uses …. A small tract on miscellaneous [medical] subjects follows.

Part II, which opens with a salutation addressed to the Tathāgatas, contains, as stated by the author, the Navanītaka, a standard manual (siddhasaṃkarṣa), containing the foremost formulae of the great sages, made up by them of old ….

Part III is a fragment of a formulary, the contents of which correspond to chapters one to three of part II.

Parts IV and V contain two short manuals of Pāśakakevalī, or cubomancy, i.e., the art of foretelling a person’s future by means of the cast of dice. …

Parts VI and VII contain two different portions of the same text, the Mahāmāyurī, Vidyārājñī, a Buddhist dhāraṇī that protects against snake-bite and other evils. …

ருடால்ப் ஹார்னெல் (August Rudolf Frederich Hoernle 1841-1918) என்பவர் இதைப் பதிப்பித்துள்ளார்[5]. இவர் எழுதியுள்ள எலும்பியல் (Osteology or the bones of the human body) புத்தகத்தில் இந்தியர்களின் எலும்பியர் அறிவை எடுத்துக் காட்டியுள்ளர்[6]. ஆனால், அதற்கு முன்னிருந்த ஆரோக்யமான இந்திய மனித வாழ்க்கைக்கு எதுவும் ஆதாரம் இல்லை என்பதாகாது. சுமார் 9000 YBP / 7000 BCE ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு பற்களிலுள்ள உபாதைகளைப் போக்க மிகநுண்ணிய 06-0.7 mm துளைப்போடும் கடைசல் ஊசி (drill bit) கொண்டு ஓட்டைப்போட்டு[7] அறுவைசிகிச்சை (dental surgery) செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன[8]. காஷ்மீரில் கிடைத்துள்ள சுமார் 3000 BCE ஆண்டுகள் காலத்தைய பழங்கற்கால மனிதனின் மண்டையோடுகளில் மிகநுண்ணிய துளைப்போடும் கடைசல் ஊசி மூலம் போடப்பட்ட துளைகள் காணப்படுகின்றன. இதற்கு ட்ரெபினேஷன் (Trepenation) என்று பெயர் அதாவது ஒருவிதமான மண்டையோட்டு (Cranial surgery) ரணச்சிகிச்சை / ஆபரேஷன் ஆகும்[9]. புத்தர் பிறந்ததும், இறந்ததும்[10] அறுவைசிகிச்சையினால்தான்[11]. இதையெல்லாம் சித்தர்கள் செய்தார்களா அல்லது கைதேர்ந்த ரணசிகிச்சை வல்லுனர்கள் செய்தார்களா என்று பார்க்கவேண்டும்.

ஐரோப்பிய இனவாதமாயைகள் இந்தியாவில் வேரூன்றி வேற்றுமையை வளர்த்தவிதம்: 19-20 நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் தங்களது ஆளுமையினை நிலைநிறுத்துக் கொள்ள இனம், ஜாதி, மக்கட்பிரிவு போன்ற பிரிவுமுறைகளை பொய்ஞானத்துடன் (Pseudo-science) விஞ்ஞானம் (Science) என்று வெளியிட்டுப் பரப்பினர். குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தமது காலனிய குற்றங்களை (Colonial atrocities and lootings) மறைக்க அத்தகைய இனவாத சித்தாந்தங்களை (Racial hypotheses and theories) வைத்தது. ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் அரசியல்வாதிகளை அச்சிந்தனையால் ஊக்குவித்து பிரிவினையை உண்டாக்கி வெளியேறினர். அதனால், அப்பிரிவினை எண்ணங்கள் இன்றும் அத்தகைய உள்ளூர் சித்தாந்திகளால் சமூகம் பாதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்திலும் அப்பிரச்சினை வருகிறது.

சித்தர்கள் இந்தியர்கள் தாம், இந்துக்கள்தாம்: இதெல்லாம் ஆரியர்கள் செய்தார்களா-திராவிடர்கள் செய்தார்களா என்று விவாதிப்பது சரியாகாது. ஆனால் திராவிடர்கள்தான் செய்தார்கள் என்று ஆதாரங்கள் இல்லாமல் எழுதுவதுதான் சரியில்லை. அப்படியென்றால் பவர் ஓலைச்சுவடியின் அம்மாணவன் அல்லது நூலாரிசியர் தமிழில் எழுதியிருக்கலாம். ஆனால், சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பதால், சாதாரண மக்களின் போதனாமொழி சமஸ்கிருதம் என்றாகிறது. மத்திய ஆசியாவில் கிடைத்தது என்பதனால் ஆரியர்கள் என்று கூறுவதும் தவறாகும். அதனால் ஆரியர்கள் தாம் எழுதினார்கள் என்று சொல்வதும் சரியாகாது. ஏனெனில் இனரீதியில் ஆரியர்கள்-திராவிடர்கள் என்று இந்தியர்களைப் பிரித்துப் பார்ப்பது சரித்திர ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் தவறானது[12]. இதே போலத்தான் சித்தர்களின் விவாதமும்.

சித்தமருத்துவத்தின் தொன்மைக்கான ஆதாரங்கள்: இக்கால சரித்திராசிரியர்கள் எழுதப்பட்டுள்ள ஆவணங்கள் (written documents, records) இருந்தால் தான், குறிப்பிட்ட காலத்தின் சரித்திரத்தை ஒப்புக்கொள்வார்கள். அதாவது, எல்லாவற்றிற்கும்– அகழ்வாய்வு (archaeological), கல்வெட்டு (epigraphical), நாணயவியல் (numismatic), சமகால (contemporary) மற்றும் இலக்கிய (literary) ஆதாரங்கள், அத்தாட்சிகள், சான்றுகள் இருந்தால்தான் ஒப்புக்கொள்வார்கள். ஆகவே சித்தர்களைப் பற்றி எழுதினால் அத்தகைய ஆதாரங்கள் இருக்க வேண்டும். சித்தமருத்துவமுறையைப் பற்றி எழுதினால் அவ்வாறான பழமையான ஓலைச்சுவடிப் புத்தகங்களைக் காட்டவேண்டும். சித்தமருத்துவம், மருத்துவமுறை, மருந்துகள், உபகரணங்கள் முதலியவற்றைப் பற்றிய அத்தகைய ஆதாரங்கள் எல்லாமே 19-20 நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாக இருக்கின்றன. பெரும்பலான சித்தர்-சித்தமருத்துவ எழுத்தாளர்கள் உணர்ச்சிப்பூவமான கருத்துகளையே கொடுத்து வருகிறார்கள்.

சித்தர்களை தமிழுக்குள் அடக்கமுடியாது: சித்தர்களின் இலக்கியங்களிலேயே “சித்த மருத்துவம்” அல்லது “சித்த வைத்தியம்” போன்ற சொற்றொடர்கள் காணப்படவில்லை. மற்ற இடைக்கால அல்லது முந்தகால தமிழ் இலக்கியங்களிலும் இல்லை. ஆனால் “ஆயுள்வேதம்” அல்லது “ஆயுர்வேதம்”, சல்லியதந்திரம் போன்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன. யூகிமுனி தனது “சிகிட்ச சார சங்கிரம்” என்ற நூலில் தான் சமஸ்கிருத நூல்களில் உள்ளவற்றை தமிழில் எளிதாக அளிப்பதாகக் குறிப்பிடுகிறார்[13]. அகஸ்தியரோ “பரிபூர்ணம்” என்ற நூலில் “ஆயுர்வேதமிது தோற்றம் காண்டம் நான்கு” எனக்குறிப்பிடுகிறார்[14]. தெலுங்கிலும் அகஸ்தியர் பெயரில் மருத்துவ நூல்கள் உள்ளன. ஆகவே இந்தியாவில் “சித்தர்கள்” என்று தனியாக தமிழகத்தில் இருந்தார்கள், ஆந்திரத்தில் இருந்தார்கள், தென்னிந்தியாவில் இருந்தார்கள், வடவிந்தியாவில் இருந்தார்கள், குமரிக்கண்டத்தில் இருந்தார்கள், சிந்துசமவெளியில் இருந்தார்கள், இருந்தார்கள், என்றெல்லாம் எழுதிவருவது அதைவிட அபத்தமானதாகும். அகத்தியரை புராண ரீதியில் கேவலப்படுத்திவிட்டு, “சங்கங்கள்” என்பது பார்ப்பன சதி என்று ஒதுக்கிவிட்டு[15], பிறகு அவர் முதல் சங்ககாலத்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார். அதே அகத்தியர் தாம் 19-20 நூற்றாண்டி எழுதப் பட்ட பாடல்களுக்கும் ஆசிரியர் என்று எழுதுவது, பேசுவது மற்றும் அத்தகைய பொய்மையை “சித்தர்கள்” என்றோ “சித்தமருத்துவம்” என்றோ குறிப்பிட்டு, தெய்வீகத்தை, புனிததன்மையை நுழைத்து அதே பழிப்பாளர்கள், தூஷித்தவர்கள், மற்றும் பகுத்தறிவாளிகள் தம்பட்டம் அடித்துக் கொள்வதும் கேவலமானதாகும்.

ஆகவே இங்கு வேதமதத்தில் “சித்தர்கள்”, ஜைனத்தில் “சித்தர்கள்”, பௌத்தத்தில் “சித்தர்கள்” என்றதும் அவ்வாறு தனித்தனியாக இருந்தார்கள் என்பதாகாது. அதேபோல அக்காலத்தில் இருந்த மக்கள் “இந்துக்கள்” என்பதும் நிதர்சனமான உண்மையாகும். அதனால் மதரீதியில் விளக்கம் கொடுக்கப்படுகிறது என்பதாகாது. இனி “சித்தர்கள்” எனப்பட்டவர்கள் வேதகாலத்தில் அல்லது வேதங்களில் சொல்லியவண்ணம் எப்படியிருந்தார்கள் என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

05-09-2012


[1] The Bower Manuscript is named after Hamilton Bower who, being then a lieutenant, obtained it early in the year 1890, in Kucā, from a local inhabitant during a confidential mission from the Government of India. Kucā is the name of one of the principal oases and settlements of Eastern Turkestan (part of China), on the ancient great caravan route to China. The MS was found by native treasure- seekers in a stūpa close to the Ming­ Öi (the “Thousand Houses”, a system of rock-cut grottos with Buddhist shrines) of Qum Turā about 13 (or 16) miles from Kucā, in February 1890. On his return to In­dia, Lieutenant Bower took the MS to Simla, whence it was forwarded to Colonel J. Waterhouse, who was then the President of the Asiatic Society of Bengal. Colonel Wa­terhouse exhibited the MS at the monthly meeting of the Society on November 5, 1890, when also a note from Lieutenant Bower was read, explaining the circumstances of the discovery. After the meeting some attempts were made to decipher the MS, but they proved unsuccessful. However, a GermanIndologistG. Bühler, succeeded in reading and translating two leaves of the MS, reproduced in the form of heliogravures in the Proceedings of the Asiatic Society of Bengal. Immediately after his return to India in February 1891, A. F. R. Hoernle began to study the MS. At the meeting of the Society in April 1891, he was able to communicate the first decipherment. The Government of India sanctioned, in 1892, Hoernle’s proposal to prepare a complete edition of the text, illustrated with facsimile plates, and accompanied by an annotated English trans­lation. The first part of the edition appeared in 1893, the second part (in two fasciculi) in 1894-95, and the remaining parts in 1897.

G. J. Meulenbeld, A History of Indian Medical Literature, Groningen: Forsten, (1999–2002), vol. IIa, pp. 3–12. an edited extract from the above book. http://en.wikipedia.org/wiki/Bower_Manuscript

[2] In 1889 local treasure hunters found a cache of manuscripts in a site south of Kucha on the northern Silk Road and subsequently sold some to a local scholar, Haji Ghulam Qadir. In turn, one was purchased from him by an Indian Army intelligence officer, Lieutenant Bower, who sent the fifty-one folios of birch bark in an unknown language to the Asiatic Society of Bengal. Here it was studied by A. F. R. (Rudolph) Hoernle, Principal of Calcutta Madrassah and a respected scholar of Indo-Aryan languages. Hoernle soon realised the importance of this manuscript, which contained several Buddhist texts in Sanskrit, and he subsequently wrote that its discovery and publication ‘started the whole modern movement of the archaeological exploration of Eastern Turkestan.’

http://idp.bl.uk/pages/collections_en.a4d

[3] சோழர்களின் செப்பேடுகளை லேடன் என்பவர் ஆராய்ந்ததால், அவை லேடன் பட்டயங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை எப்படி லேடனுக்கு சம்பந்தம் இல்லையோ, இதுவும் அதேப்போலத்தான். இந்தியர்களின் மனங்களையும் அடிமையாக்க இத்தகைய யுக்திகளைக் கையாண்டுள்ளார்கள். போகப்போக உண்மையினை மறந்து, அவ்வாறே திரிபு விளக்கம் கொடுத்து சரித்திரமும் எழுதலாம்.

[4] Rudold Hoernle, The Bower Manuscript, Fascimile Leaves, Nagaru Transactions, Romanised Tranaliteration and English translation with notes, Royal Asiatic Society, Calcutta, 1907. ஜூலை 1907 ஆக்ஸ்போர்டில் எழுதிய முன்னுரையில் காண்க.

[5] Rudold Hoernle, The Bower Manuscript, Fascimile Leaves, Nagari Transactions, Romanised Tranaliteration and English translation with notes, Royal Asiatic Society, Calcutta, 1907.

[6] Rudold Hoernle, Osteology or the bones of the human body, Clarendon Press, Oxford, London, 1907.

[8] Coppa, A., et al. 2006. Early Neolithic tradition of dentistry. Nature 440(6 April 2006):755-756.

[9] Maria Mednikova, Post-mortem Trepenations in Central Asia: Types and Trends, in Kurgans, Ritual sites and Settlements: Eurasian Bronze and Iron Age, pp.269-279.

[10] Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s image, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.343-354 (as accessed on August 21, 2006 at http://ccbs.ntu.edu.tw.FULTEXT/JR-MEL/waley.htm

[11] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

[12] இப்பொழுது மரபணு ஆய்வுகள் இந்தியர்கள் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளன. மனிதவியல் கருத்துகளை சித்தாந்தரீதியில், அரசியல் அல்லது சமூகங்களைப் பிரிப்பதற்காக உபயோகப்படுத்துவது, பெரிய குற்றமாகும். ஆரிய-திராவிட இனவாதம் அப்படித்தான் ஆங்கிலேயர் மற்ரும் கிருத்துவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது.

[13] கந்தசாமி முதலியார், யூகிமுனி சிகிட்ச சார சங்கிரம், 1897.

[14] அகத்தியர், அகஸ்தியர் பரிபூர்ணம் அல்லது அகத்தியர் பெருநூல், நாலுகண்ட வைத்திய காவியம், பக்கம்.2

[15] திராவிட சித்தாந்திகள் இறையனார் அகப்பொருள், நக்கீரன் என்ற பார்ப்பனரால் எழுதப்பட்டது. அவையெல்லாம் பொய், பித்தலாட்டம், ஆரியர்களின் புனைக்கதை, பார்ப்பனர்களின் சதி என்று ஒதுக்கினர்.

Posted in அகத்தியர், அகஸ்தியர், அபின், அறுத்தல், அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், எலும்பியல், கஞ்சா, கடைசல் ஊசி, கத்தி, சரகர், சல்ய, சல்லிய, சிகிச்சை, சிந்து சமவெளி நாகரிகம், சுவாமி, சுவாமி விவேகானந்தர், சுஷ்ருதர், தேரையர், நூல், நோய், பிணம், புலஸ்தியர், மயக்கம், மருந்து, யூகிமுனி, ரணச்சிகிச்சை, ருடால்ப் ஹார்னெல், லெட்டினென்ட் எச். பவர், விவேகானந்தர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »