சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘பித்தம்’ Category

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

Posted by vedaprakash மேல் திசெம்பர் 16, 2022

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

15-12-2022: தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது[1]: சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிச.15) தொடங்கியது[2]. தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மருத்துவ வல்லுநா்கள் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்றனா்[3]. 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமார், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்குநா் கணேஷ், பல்கலைக்கழகப் பதிவாளா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்[4]. இதில், துணை வேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது[5]: “அதிகரித்து வரும் புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த, சித்த மருத்துவம் தன் பங்களிப்பை அளிக்கும். சித்த மருத்துவத்துடன் பல்கலை இணைந்து செயல்படும்……இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் சமூகத்துக்கு ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது[6]. நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா, கரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் அதிமுக்கிய பங்கு வகித்ததை எவரும் மறுக்க இயலாது. அதேபோன்று, இந்தியாவைக் கடந்து பிற நாடுகளிலும் அந்த மருத்துவம் வியாபித்துள்ளது[7]. அதை உலகெங்கும் முன்னெடுத்து செல்வது அவசியம். அதன் பொருட்டு, கால சூழலுக்குத் தக்கவாறு சில விஷயங்களை அதில் மேம்படுத்துவது அவசியம். குறிப்பாக, சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். அதனுடன் அந்த மருத்துவ முறையை தரப்படுத்துதலும் இன்றியமையாத் தேவையாக உள்ளது. சித்தா்கள் அருளிய அந்த மருத்துவ முறையில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளின் அளவுகள், குணங்கள் தற்போது எவ்வாறு பயன்பாட்டில் உள்ளன என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால், பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் குணத்துக்கும், அதே மூலிகைகள் வேறு மண் பரப்பில் வளரும் போது ஏற்படும் மாற்றத்துக்கும் வேறுபாடு உள்ளது. அவற்றை பகுப்பாய்ந்து நோய்களின் தன்மைக்கேற்ப சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதே தற்போதைய தலையாய தேவை ….,”. இவ்வாறு அவர் பேசினார்.

16-12-2022 அன்று முடிவடைந்தது: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் பேசியதாவது: “தற்போது, அரசு சித்தா டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கான தனி பல்கலை விரைவில் துவங்க உள்ளது. மேலும், 25 கோடி ரூபாய் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். ஆய்வு கட்டுரைகள் [சுருக்கம்] அடங்கிய புத்தகம் வெளியிடப் பட்டது.

  1. வரவேற்க்கப் பட்டவர்களின் கட்டுரைகள் -12
  2. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவர்கள்] – 50
  3. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை வகுப்பினர்] –  157
  4. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [இயற்கை விஞ்ஞானம்] – 13
  5. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [பட்டப் படிப்பினர்] – 450

இப்படி 607 ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கம், 360 பக்கங்களில் அடக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டுரையின் ஆசிரியர் ஒன்றிற்கும் மேலாக, ஏன் 2, 3, 4 என்று நீள்கிறது. பிறகு, இரண்டு என்றாலே 1200, மூன்று என்றால் 1800 என்று கணக்கு வருகிறது. பொறுமையாக அந்த சுருக்கங்களைப் படித்துப் பார்த்தால், 60% அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். Introduction, aim, methodology, result, conclusion, keywords என்றெல்லாம் போட்டு கட்டுரை தயாரித்தாலும், அதில் செயற்கையான முறை தான் தெரிகிறதே தவிர, புதியதாக எதையும் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. தமிழில் உள்ள சில கட்டுரைகளில் ஒன்றும் புதியதாக இல்லை. சோதனைக் கூடங்கள் மூலமாக நடத்தப் பட்ட மருத்துவ ஆய்வுகள் [clinical studies] என்று கூறிக் கொண்டாலும்ண் அத்தகைய முறைகள் கையாளப் பட்டதாகத் தெரியவில்லை. எந்திரத்தனமான, வழக்கமான மற்றும் சடங்குப் போன்ற முறையில் எழுதப் பட்ட தோற்றம் தான் புலப்படுகிறது. அந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2022ல் வந்த செய்தியை கவனிக்க வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் 2022 – சென்னை சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி செய்து கொண்ட ஒப்பந்தம்: சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு மையமாக  சென்னை சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்) விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழிநுட்ப பாடப்பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக சென்னை ஐஐடி விளங்குகிறது. இந்நிலையில், சித்த மருத்துவம் கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, என்.ஐ.எஸ். இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் கையெழுத்தானது. இது தொடர்பாக, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதிய பாடத் திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல்வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை உதவும்,” என்று தெரிவிக்கப்பட்டது[8].

சித்த மருத்துவத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது: இந்த கூட்டுமுயற்சியின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி,”இந்திய மருத்துவத்தில் சித்தா மிக முக்கிய புள்ளியாகும். சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்,” எனக் குறிப்பிட்டார்[9]. கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், வெப்மினார்கள், மாநாடுகள், பாடத் திட்டங்களைத் தொடருதல் [தொடர் மருத்துவக் கல்வி (CME) உள்பட], கல்வித் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும். கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

சித்தமருத்துவ ஆராய்ச்சி இன்றியமையாதது: இவ்வாறு சென்னையிலேயே, சித்த மருத்துவம், சித்த மருத்துவமனை, என்றெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிர்வகித்து வருகின்ற நிலையுள்ளது. ஆனால், சித்த மருத்துவ சோதனை, சித்த மருத்துவ பரிசோதனை, சித்த மருத்துவ சோதனைக் கூடம், சித்த மருந்துகளை உபயோகித்து அதற்றின் நோய் தீர்க்கும் முறை கண்டறிதல், மெய்ப்பித்தல், போன்றவை நடத்தப் பட்டனவா, விலைவுகள் என்ன, முடிவுகள் என்ன, வெற்றி சதவீதம் என்ன போன்றவைப் பற்றி தெரியாமல் இருக்கின்றன. சர்வரோக நிவாரிணி ரீதியில் விளம்பரங்கள், யூ-டியூப் போன்றவற்றை வைத்துக் கொண்டு அதிரடி பேச்சுகள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், என்பவை இருக்கத் தான் செய்கின்றன. ஆகவே, அவை தொடர்ந்து நடக்க வேண்டும், ஆராய்ச்சிகளும் செயல்பட வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-12-2022.


[1] டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேசிய சித்த மருத்துவ மாநாடு, TNPSCPortal.In, December 15, 2022.

https://www.tnpscportal.in/2022/12/blog-post_72.html

[2] தினமணி, தேசிய சித்த மருத்துவ மாநாடு இன்று தொடக்கம், By DIN  |   Published On : 15th December 2022 12:15 AM  |   Last Updated : 15th December 2022 12:15 AM.

[3]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3967052.html

[4] தினமலர், சித்த மருத்துவ ஆராய்ச்சி ரூ.25 கோடி ஒதுக்கீடு, Added : டிச 16, 2022  08:23.

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3195609

[6] தினமணி, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன், By DIN  |   Published On : 16th December 2022 06:35 AM  |   Last Updated : 16th December 2022 06:35 AM

[7]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3967837.html

[8] நியூஸ்.18.தமிழ், சித்த மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடி: சித்த மருத்துவ நிறுவனத்துடன் ஒப்பந்தம், NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 08, 2022, 14:21 IST

[9] https://tamil.news18.com/news/education/chennai-iit-is-partnering-with-chennai-national-institute-of-siddha-on-research-and-clinical-studies-781927.html

Posted in அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், உடல், உயிர், எலும்பியல், ஒத்தடம், கந்தகம், கரைசல், கற்பம், சர்க்கரைநோய், சிகிச்சை, சித்தம், சித்தர், சிந்தனை, சிராய்ப்பு, தீக்காயங்கள், நரம்பு, நாடி, நாட்டு மருத்துவம், நினைவு, நோய், பாரம்பரியம், பிணம், பித்தம், பித்து, மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மயக்கம், மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோசனை, ரணச்சிகிச்சை, வர்மம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.

முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.

அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.

மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].

பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.

இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2012


[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.

[8] Strabo, XV, I, p.59.

[9] Pseudo-Origen, Philosophia, p.24.

[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.

[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27

[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.

[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Posted in அகத்தியர், அரேபியா, அறிவு ஜீவி, அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், எலும்பியல், ஓலை, கடைசல் ஊசி, கத்தி, கந்தகம், கரைசல், காபாலிகம், காயம், சக்தி, சல்ய, சல்லிய, சிகிச்சை, சித்தார்த், சித்த்ஞானம், சிந்தனை, சீனா, திகம்பர, திகம்பரம், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், நரம்பு, பாதரசம், பாரதம், பிணம், பிண்டம், பித், பித்தம், மந்திரம், மனச்சிதைவு, மூச்சு, மூளை, மேரு, வில்லியம் ஜோன்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

ஜைனமத அல்லது ஜைனகாலத்தில் இருந்த சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 9, 2012

ஜைனமத அல்லது ஜைனகாலத்தில் இருந்த சித்தர்கள்

 

ஜைனமதம், தோற்றம், காலம்: ஜைனமத்தைத் தோற்றுவித்த மஹாவீரர், ஒரு அரசர் / க்ஷத்திரியர். அவருடைய காலம் சுமார் 599-527 BCE என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், உண்மையான தேதி குறிப்பிடப்படாமல் உள்ளது[1]. 23வது தீர்த்தங்கரான பாஸ்வநாதருடைய காலம் c.872-772 BCE என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற ஜீனர்களின் காலம் கிருஷ்ணர் காலம் c.3100 BCE வரைச் செல்கிறது. இந்தியாவில் ஜைனர்களின் ஆளுமை, அரசாட்சி மற்றும் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. பெரும்பாலான வீரர்கள் / க்ஷத்திரியர்கள் மற்றும் வணிகர்கள் / வைசியர்கள் ஜைனமதத்தினராக இருந்ததினால், அவர்கள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆளமுடிந்தது. பாரதத்தின் (இக்கால இந்தியாவின் வடமேற்கு-மேற்குப்பகுதிகள்) மேற்குப்பகுதியில் ராஜஸ்தானை மையமாக வைத்துத் தோன்றிய ஜைன மதம், ஒரு க்ஷத்திரிய (வீரர்களின்) மதமாகும். வீரம்தான் பிரதானம் என்றதால் அவர்கள் அடிக்கடி வீரதீர செயல்களில் ஈடுபட்டிருந்தனர். மற்ற அரசர்களை வெல்வதில் ஈடுபட்டிருந்தனர். வென்ற நாடுகளில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, வியாபாரம் மூலம் செல்வாக்குப் பெற்றனர். இதனால் க்ஷத்திரிய-வைசியகூட்டு/கூட்டணி ஜைனத்தில் பிரதானமாக இருந்தது. இது, பிறகு வந்த பௌத்தத்திலும் பெரும் பங்கு வகித்தது[2]. அடிக்கடி சண்டை-போர்கள் என்றாலே அடிப்பட்டவர்களுக்கு, கை-கால் இழந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளின் அவசியம் தேவையாகிறது.

ஜைனமதம் பேரரசர்களின் / சக்கரவர்த்திகளின் மதம்: பெரிய அரசர்கள் – சந்திரகுப்த மௌரியர், பிம்பிசாரர், அசோகன்[3], காரவேலன் எல்லோருமே ஜைனர்கள் தாம். 63 மிகப்பெரிய மனிதர்கள் என்ற பாடியலிலும் க்ஷத்தியர்களே வருகின்றனர்:

  1. தீர்த்தங்கரர்   – 24
  2. சக்கரவர்த்தி  – 12
  3. பலதேவர்     – 9
  4. வாசுதேவர்     – 9
  5. பிரதிவாசுதேவர் – 9

ஜெகோபி என்ற ஆராய்ச்சியாளர்கள், கிருஷ்ணரின் கதைகளை வைத்துக் கொண்டுதான், 24ஐ 63 என்று பெருக்கியிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட் டியுள்ளார்[4]. ஏனெனில் அந்த ஜைனகதைகள் கிருஷ்ண-பலராமர் கதைகளைப் போன்றேயுள்ளன. ஜைனர்கள் மக்களிடையே பிரபலமாகயிருந்த இதிகாச-புராணங்களை ஜைனமதரீதியில் மாற்றியெழுதினர். அதுமட்டுமல்லாது, ஜைனர்கள் கல்வித்துறையிலும் அதிக ஆதிக்கம் செல்லுத்தினர். மடாலயங்களில் நூலகங்களை உருவாக்கி பற்பலத்துறை நூல்கள் சேகரிக்கப்பட்டன. திகம்பர ஜைனர்கள் தனியாக, தூரத்தில் வசித்து வந்ததால், அவர்கள் தங்களது நேரத்தை இதில் செலவழித்தனர். இதனால், அவர்காலத்தில், பிரபலமாக இருந்த இலக்கியங்கள் திருத்தம் செய்யப்பட்டன. பெரும்பாலான மக்களின் இலக்கியங்களான ராமாயணம்-மஹாபாரதம் போன்றவை இருந்ததால், அவற்றிற்கு இணையான இலக்கியங்களை உருவாக்க முயன்றன. மஹாபாரத்திலும் இடைசெருகல்கள் செய்தனர். இராமாயணத்திற்கு எதிராக, அவர்களே ஒரு இராமாயணத்தை உருவாக்கினர். அதுதான் இப்பொழுது “ஜைன இராமாயணம்” என்று வழங்கிவருகிறது[5]. அதனால்தான், இதிகாசங்களில் ஜைனர்களின் பெயர்கள் வருகின்றன. தசாவதாரத்திற்கு இணையாக தமது தீர்த்தங்கர்களின் புராணங்களை உருவாக்கினர் (விவரங்களுக்குக் கிழே பார்க்கவும்). தெற்கிலும் மேற்குக் கடற்கடற்கரை வழியாக அவர்களின் ஆதிக்கம் வளர்ந்தது. சுமார் 450 CE காலத்தில், தமிழகத்தில் மதுரையில் நாகநந்தி தலைமையில் தமிழ்சங்கம் இயங்கி வந்தது. இதனால், அவர்கள் தமிழ் இலக்கியங்களையும் திருத்தினர்[6]. இதனால் எல்லாமே ஜைனர்களின் நூல்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது[7].

ஜைனமதம்பாரத்தின்மேற்கில்பரவியவிதம்: திகம்பர-ஆடையணியாத மற்றும் ஸ்வேதாம்பர-வெண்ணிற ஆடையணிந்த ஜைனர்கள் ஆரம்பகாலத்திலேயே இந்தியாவிலிருந்து வெளியேற நேர்ந்தது. இதனால் அவர்கள் மேற்கில் சென்று, மத்தியத்தரைக்கடல் நாடுகளில் தங்கியபோது, எஸ்ஸென்ஸ் (Essences), கினாஸ்டிக் (Gnostic), அயோனியர் (Ionean), மணிக்கியர் (Manichean) என்று பற்பல பெயர்களில் அழைக்கப்பட்டனர்[8]. தாம் பிறகு கிரேக்கர்கள் ஆயினர். கிரேக்க சித்தாந்திகள், தத்துவஞானிகள் எல்லோருமே திகம்பரர்கள்தாம். அதாவது ஆடையணியமாட்டார்கள். சிம்போசியம் (Symposium) என்றாலே, ஆடையில்லாமல் வந்து தர்க்கிக்கும், வாதாடும் இடம் என்று பொருள்[9]. ஆரம்பகால ஒலிம்பிக் விளையாட்டுகளில் வீரர்கள் நிர்வாணமாகத்தான் பங்கேற்றனர்[10]. இவ்வாறு ஜைனர்கள் கிரேக்கர்கள் ஆனதை மறைக்கத்தான், ஆங்கிலேயர் அலெக்சாந்தர் கட்டுக்கதையை புனைந்து, அவர் இந்தியாவை வென்றார், அதனால்தான் இந்தியர்களுக்கு எழுத்துமுறை வந்தது, கல்லிலே சிற்பங்கள் வடிக்க-வீடுகளைக் கட்டிக் கொள்ள கற்றுக் கொண்டான், வானியலைக் காப்பியடித்தார்கள், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர். உண்மையில் அலெக்சாந்தர், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைந்தபோது, போரஸிடம் தோற்று ஓடிப்போனான். இதனை இப்பொழுது வெளிவந்த (2000) அலெக்சாந்தர் என்ற திரைப்படமும் எடுத்துக் காட்டுகிறது[11]. அப்பொழுது இந்திய ரிஷி-முனிகளை-தத்துவஞானிகளைக் வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போனான்[12].  அதாவது பாரத நிர்வாண (Gymnophists) சாமியார்களைத் தூக்கிக் கொண்டு போனான் என்று அவர்கள் எழுதிவைத்தனர். அவர்களே நிர்வாணத்தைக் கடைபிடித்தபோது, அவர்கள் தத்துவஞானிகள், அறிஞர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்தபோது, இவன் ஏன் நிர்வாண (Gymnophists) சாமியார்களைத் தூக்கிக் கொண்டு போனான் என்ற கேள்வி எழுகின்றது. மேலும் அவன் தனது நாட்டிற்குச் செல்லும் முன்னரே இறந்துவிடுவதால், யார் அவர்களை எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என்ற கேள்வியும் எழுகின்றது. ஒருவேளை முன்னர் பைதாகோரஸ், பிளாட்டோ முதலியோர் இந்தியாவிற்குச் சென்றனர் என்பதனை இப்படி மாற்றி எழுதினர் போலும். எல்லாவற்றையும் தலைகீழாக்குவது, மாற்றி-மாற்றி எழுதுவது அவர்கள் வழக்கம் என்பதனால் இவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் போலிருக்கிறது.

கிரேக்கர்களின்நுழைவுஅல்லதுவரவு (c.300-200 BCE): நாடுகடத்தப் பட்ட, பாரதத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத, இந்திய-கிரேக்கர்கள் மறுபடியும் இந்தியாவில் நுழைய முயற்சித்திருக்கலாம். அத்தகைய போராட்டங்கள் இந்தோ-கிரேக்கர்கள் என்ற கலப்பையுண்டாக்கியிருக்கலாம். ஆனால், போராட்டங்கள் இல்லாமலும் இந்திய-கிரேக்கர்கள் பாரத்தத்திற்கு வந்துள்ளனர். இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[13] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[14] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[15]. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[16].  எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். ஜைன-பௌத்தர்களுக்குப் பிறகு அரேபியர் மற்றும் முஸ்லீம்களான அரேபியர்களால்தான் அதிக தாக்கம், மாறுதல் மற்றும் அழிவுகள் ஏற்பட்டன.

சிந்துசமவெளிமற்றும்மௌரியஅரசுஇடைவெளிக்காலசரித்திரம்என்னவாயிற்று?: ஆங்கிலேய எழுத்தாளர்கள் (English historiographers) எழுதிவைத்ததைப் போல, இந்திய சரித்திரம் அலெக்சாந்தரின் படையெடுப்பிலிருந்து ஆரம்பிக்கிறது (Alexander’s invasion as the sheet anchor of Indian history) என்பது பொய்யான சரித்திரம் ஆகும். சிந்துசமவெளி மற்றும் மௌரிய அரசு இடைவெளிக்கால சரித்திரத்தை மறைக்க முடியாது. சிந்துசமவெளி நாகரிகத்தின் உச்சநிலை c.2250-1850 BCE (peak period of IVC) என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பின்னோக்கிச் செல்வதற்கு c.9500 BCE வரை அகழ்வாய்வு அத்தாட்சிகள் உள்ளன. ஆகவே திடீரென்று c.300 BCE வாக்கில் சந்திரகுப்தர் பேரரசராகத் தோன்ற முடியாது, அவரது பேரன் அசோகன் மிகப்பெரிய அரசனாக – சக்கரவர்த்தியாக, “தி கிரேட்” (Asoka, the Great) ஆகியிருக்க முடியாது. பெறுமையிலிருந்து ஒன்றும் வராது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், இந்தியர்களை அவ்வாறு ஏமாற்றியிருக்கிறார்கள். இன்றைக்கும் அதனை இந்தியர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே c.2250-1850 BCEலிருந்து c.300 BCE வரை பாரதத்தில் என்ன நடந்தது என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை? 1800 வருடங்களில் பாரத மக்கள் இல்லாமலேயிருந்தார்களா அல்லது மறுபடியும் பரிணாம வளர்ச்சியில், பழங்கற்காலம் (paleaolithic)-பெருங்கற்காலம் (megalithic), இடை-பழங்கற்காலம் (mesolithic), புதிய-பழங்கற்காலம் (neolithic), என்று வளர்ந்து மௌரியர்களாக மாறினார்களா?

சிந்துசமவெளி நாகரிகத்தின் மருத்துவ சரித்திரம் எழுதப்பட வேண்டும்: மூளை, பல் முதலிய அறுவைசிகிச்சைகள் நடந்திருக்கின்றன, உலோகவியலில் மிகச்சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர், ஆரோக்யமான வாழ்வு வாழ்ந்திருந்தனர். பிறகு அவர்களுடைய மருத்துவமுறை ஏன் ஆராய்ச்சி செய்யப்படவில்லை? 5000-10,000 வருட காலத்தைய வரலாற்றை மறைக்க முடியாது. அத்தனையாண்டு காலமக்கள் கற்கால மக்களாக்வே இருந்திருக்க மாட்டார்கள். நன்றாக நாகரிகமுள்ள, விஞ்ஞான-தொழிற்நுட்பமுள்ள நாகரிக மக்களாகத்தான் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் சிந்துசமவெளி நாகரிகமே பிறந்திருக்காது. அதுபோலவே அவகளின் ஆரோஜ்க்யமான வாழ்க்கைமுறை, மருத்துவமுறை, மருத்துவமனைகள் முதலியனவும் சிறந்திருக்கவேண்டும். அவரது எழுத்துமுறையை அறிந்து கொள்ளாமல், இக்காலத்தவர் அதனை படிக்க முடியாமல் இருப்பதனால், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அமைதியாக இருந்துவிட முடியாது.

ஏகப்பட்ட சங்குகள் கிடைத்துள்ளன. சங்கு மூலம் மருந்துகளை ஊட்டுவது பாரத மக்களின் வழக்கம்[17]. கருப்பு நிறத்தில் கரிபோல சிலாஜித் அல்லது சிலாஜாது என்ற மருந்து மருந்து சிந்துசமவெளி நாகரிகத்தின் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது[18]. இவ்வாறு இயற்கையில் கிடைக்கும் கனிமத்தை அதன் தன்மையையறிந்து மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டது 8000-9000 வருடங்களுக்கு முன்பு. இது ஹிமாலய-கற்களிலிருந்து வெளிவரும் கனிமப்பொருளாகும். ஆயுர்வேத மருந்துவர்கள் இதனை நன்றாக அறிந்திருந்தனர். சரகர், இதைப்பற்றி சொல்வதாவது, “இதனால்தீர்க்கப்படமுடியாதநோய்எதுவுமேஇல்லைஎன்றுசொல்லலாம்”. இதைத்தவிர பெருங்காயம் தயாரிக்க உபயோகப்படும் அஸப் / அஸபிடிடா (Asafetida = hing) என்ற கோந்து வகை இப்பிரதேசத்தில் (காந்தாரம் = தற்போதைய ஆப்கானிஸ்தானம்) கிடைக்கிறது[19]. ஹரப்பாவில் ஒரு அலங்கரிக்கப்பட்ட மட்பாத்திரத்தில் லெட்-கார்போனேட் = கரி-காரீய உலோகக்கலவை தூள் கிடைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சின்னபார் = பாதரச சல்பைடும் கிடைத்துள்ளது. இவை எதற்காக உபயோகப்பட்டது என்று தெரியவில்லை என்று சர் என்வின் பாஸ்கோவ் கருத்துத் தெரிவித்தார். அழகுசாதனப் பொருள் அல்லது மருந்தாக உபயோகப்பட்டிருக்கலாம் என்றும் தனது யூகத்தை வெளியிட்டார்[20]. மற்ற கனிமங்களின் பகுப்பாய்வு முடிவுகளைப் பட்டியலிட்டுள்ளபோது, இவற்றின் முடிவுகளை – அவற்றின் கனிமகலப்பு விகிதங்களை ஏன் வெளியிடவில்லை என்று தெரியவில்லை.

ஆரிய-திராவிட இனவாதங்களை செய்யும், காலத்தை விரயமாக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. படித்தும் இருக்க மாட்டார்கள். இனி இதைப் படித்துவிட்டு, தாமே அறிந்த மாதிரி, சிந்துசமவெளியிலேயே தமிழ் சித்தர்கள் ரசவாதம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் நம்மாட்கள் காப்பியடிப்பதில் வல்லவர்கள். அடுத்தவர்களின் ஆராய்ச்சியை, அறிவைத் திருட வல்லவர்கள். “சித்தர் பாடல்களையே” அவ்வாறு தயாரித்திருக்கும்போது, இதெல்லாம் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன?

© வேதபிரகாஷ்

07-09-2012


[1] The date of Pasvanatha, the 23rd Tirthankara is given as c.872-772 BCE. Kalanemi and other examples prove that Jaina-like creed was there during Krishna period (c.3100 BCE).

[2] ஐம்பெருங்காப்ப்பியங்களிலும் இந்த க்ஷத்திரிய-வைசியகூட்டு இணைப்பு செயல்பட்டதைக் காணலாம்.

K. V. Ramakrishna Rao, Hindu Dharma in the Five Great Epics, Hindu Dharma Sabha, Chennai – 600 031, January 2000. The author explains the prevalent of Indian religions in Tamizhagam as reflected in the literature and as well as the Buddhist and Jaina bias in the literature, particularly noted in the works of Manimekhalar by Sittalai Sattanar and Civaka Cintamani by Tiruttakka Thevar.

[3] அசோகன் என்ற பெயரில் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள் – ஒருவன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். கல்ஹணரால் குறிப்பிடப்பட்டவன். இன்னொருவன் சந்திரகுப்த மௌரியரின் மைந்தன், புத்தமதத்தைத் தழுவி, உலகம் முழுவதும் பரப்பியவன். வின்சென்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரித்தான், இருவரும் ஒன்று என்று இணைத்து, இருந்த கல்வெட்டுகளையும் அவ்வாறே படித்து திரித்து எழுதினார்.

Edward Thomas, Jainism or the Early Faith of Asoka, Asian Educational Services, New Delhi, 1995 (Reprint of 1877 edition, London: Trurner & Co., 57 and 59, Ludgate Hill).

[4] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Munshiram Manoharlal Publishers, New Delhi,  1984, p.444.

[5] இதைவைத்துதான், நாத்திகர்கள், இந்துவிரோதிகள் புரட்டுக் கதைகளையும், தூஷணங்களையும் செய்து வருகின்றனர். இதனால் “விடியவிடிய இராமாயணம் படித்துவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்”, என்ற பழமொழியே உண்டாயிற்று!

[6] Tirugnana Sambandar, Thevaram, Sri Kasi Madam, Tanjore, 1996. It gives ample evidences as to why even docile devotee should have gone to the extent of debating with Jains to contain their evil-propaganda against nourished tradition, heritage and culture of India. Moreover, the trend set by the Buddhists and Jains was to create and circulate literature as their own, but in fact to confuse the existing tradition, heritage and culture. In education and teaching, Indian system never faced such degradation carried on under the guise of “Sangha” purportedly to promote education. Ironically, the abusive Jains were producing many ethical books also, which are covered under “Padinen Kizh Kanakku”.

K. V. Ramakrishna Rao, Hindu Dharma in the Five Great Epics, Hindu Dharma Sabha, Chennai – 600 031, January 2000.  அடிக்குறிப்பு.29.

[7] இன்றைக்கும் இடைச்செருகல்களை வைத்துக் கொண்டு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்களுக்கு காலநிர்ணயம் செய்துவரும் அறிவுஜீவிகள், அவற்றை 7-8-9-10-11-12 நூற்றாண்டு என்று நீட்டிவருகின்றனர்.

[8] Edward Pockocke, Indian in Greece, entire book available in e-book form online.

Col. Tod, Annals and Antiquities of Rajasthan, Motilal Banarasidas, New Delhi.

[9] Jeffrey M. Hurwit, The Problem with Dexileos: Heroic and other Nudities in Greek Art, American Journal of Archaeology, Vol.111, No.1, January 2007, pp.35-60.

[10] John Mouratidis, The Orign of Nudity in Greek Athletics, Journal of Sport History, Vol.12, No.3 (Winter, 1983), pp.213-232.

[11] பலகோடிகள் செலவழிக்கப்பட்டு, பல சரித்திராசிரியர்களுடன் கலந்தோலாசிக்கப்பட்டு, அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சான்றுகளை அப்படியே புணர்நிர்மானம் செய்து காட்சிகளைப் படமாக்கியிருக்கின்றனர். அதில் அலெக்சாந்தரின் குதிரை போரஸின் யானையைப் பார்த்து பயந்து பின்வாங்குகிறது. அப்பொழுது, ஒருவன் எரிந்த ஈட்டி அலெக்சாந்தரின் மார்பில் பாய்ந்து பின்பக்கமாக விழுகிறான். பலத்த காயமடைகிறான். யானைப்படைக் கண்டு, கிரேக்கர்களின் குதிரைப்படை பயந்தோடுகிறது. செல்லும் வழியிலேயே அலெக்சாந்தர் இறக்கிறான். அதாவது, அலெக்சாந்தர், போரஸிடன் தோற்றுப் போகிறான், ஆனால் ஆங்கிலேய எழுத்தாளர்கள், இதனை தலைகீழாகப் புரட்டி, புரட்டு சரித்திரம் எழுதிவைத்துச் சென்றுள்ளனர்.

[12] இதேமுறைத்தான் பிறகு வந்த கோரிமுகமது, கஜினிமுகமது பொன்ற கொள்ளைக்காரர்கள் கையாண்டனர். அவர்கள் கூட்டமாக வந்தபோது மருத்துவர்கள் முதலியோரைக் கடத்திக் கொண்டு சென்றனர். இப்பொழுதும் சிறந்த விஞ்ஞானிகள் கடத்தப் படுகின்றனர் அல்லது பணம், பதவி ஆசைக்காட்டி இழுத்துக் கொள்கின்றனர். கடைப்பிடிக்கும் முறைகள் காலங்களில் மாறினாலும், குறிக்கோள் ஒன்றுதான்.

[13] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[14] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[15] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[16] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[17] Jonathan Mark Kenoyer, Ancient Cities of the Indus Valley Civilization, American Institute of Pakistan Studies, Oxaford University Press,  Pakistan, 2000, p.119. See also “Shell working industries of the Indus Civilization” by the same author.

[18] John Marshall (Ed.), Mohenjo-Daro and the Indus Civilization, Vol.II, Asian Educational Services (Reprint), New Delhi, 1996, p.689. See under Chapter XXXII – Minerals and Metals and Appendices.

[19] Jonathan Mark Kenoyer, Ancient Cities of the Indus Valley Civilization, American Institute of Pakistan Studies, Oxaford University Press,  Pakistan, 2000, pp.169-170.

[20] John Marshall (Ed.), Mohenjo-Daro and the Indus Civilization, Vol.II, Asian Educational Services (Reprint), New Delhi, 1996, pp.690-691.

Posted in சத், சித்தாந்திகள், ஞானி, தத்துவஞானிகள், திகம்பர, திகம்பரர், துறந்தவர், துறவி, நிர்வாணம், பித், பித்தம், பித்து, பிரமை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »