சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘உயிர்’ Category

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

Posted by vedaprakash மேல் திசெம்பர் 16, 2022

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (2)

15-12-2022: தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது[1]: சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிச.15) தொடங்கியது[2]. தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மருத்துவ வல்லுநா்கள் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்றனா்[3]. 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமார், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்குநா் கணேஷ், பல்கலைக்கழகப் பதிவாளா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்[4]. இதில், துணை வேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது[5]: “அதிகரித்து வரும் புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த, சித்த மருத்துவம் தன் பங்களிப்பை அளிக்கும். சித்த மருத்துவத்துடன் பல்கலை இணைந்து செயல்படும்……இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் சமூகத்துக்கு ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது[6]. நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா, கரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் அதிமுக்கிய பங்கு வகித்ததை எவரும் மறுக்க இயலாது. அதேபோன்று, இந்தியாவைக் கடந்து பிற நாடுகளிலும் அந்த மருத்துவம் வியாபித்துள்ளது[7]. அதை உலகெங்கும் முன்னெடுத்து செல்வது அவசியம். அதன் பொருட்டு, கால சூழலுக்குத் தக்கவாறு சில விஷயங்களை அதில் மேம்படுத்துவது அவசியம். குறிப்பாக, சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். அதனுடன் அந்த மருத்துவ முறையை தரப்படுத்துதலும் இன்றியமையாத் தேவையாக உள்ளது. சித்தா்கள் அருளிய அந்த மருத்துவ முறையில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளின் அளவுகள், குணங்கள் தற்போது எவ்வாறு பயன்பாட்டில் உள்ளன என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால், பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் குணத்துக்கும், அதே மூலிகைகள் வேறு மண் பரப்பில் வளரும் போது ஏற்படும் மாற்றத்துக்கும் வேறுபாடு உள்ளது. அவற்றை பகுப்பாய்ந்து நோய்களின் தன்மைக்கேற்ப சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதே தற்போதைய தலையாய தேவை ….,”. இவ்வாறு அவர் பேசினார்.

16-12-2022 அன்று முடிவடைந்தது: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் பேசியதாவது: “தற்போது, அரசு சித்தா டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கான தனி பல்கலை விரைவில் துவங்க உள்ளது. மேலும், 25 கோடி ரூபாய் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் பேசினார். ஆய்வு கட்டுரைகள் [சுருக்கம்] அடங்கிய புத்தகம் வெளியிடப் பட்டது.

  1. வரவேற்க்கப் பட்டவர்களின் கட்டுரைகள் -12
  2. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவர்கள்] – 50
  3. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை வகுப்பினர்] –  157
  4. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [இயற்கை விஞ்ஞானம்] – 13
  5. வாய்வழி மற்றும் போஸ்டர் மூலம் விளக்கம் [பட்டப் படிப்பினர்] – 450

இப்படி 607 ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கம், 360 பக்கங்களில் அடக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டுரையின் ஆசிரியர் ஒன்றிற்கும் மேலாக, ஏன் 2, 3, 4 என்று நீள்கிறது. பிறகு, இரண்டு என்றாலே 1200, மூன்று என்றால் 1800 என்று கணக்கு வருகிறது. பொறுமையாக அந்த சுருக்கங்களைப் படித்துப் பார்த்தால், 60% அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். Introduction, aim, methodology, result, conclusion, keywords என்றெல்லாம் போட்டு கட்டுரை தயாரித்தாலும், அதில் செயற்கையான முறை தான் தெரிகிறதே தவிர, புதியதாக எதையும் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. தமிழில் உள்ள சில கட்டுரைகளில் ஒன்றும் புதியதாக இல்லை. சோதனைக் கூடங்கள் மூலமாக நடத்தப் பட்ட மருத்துவ ஆய்வுகள் [clinical studies] என்று கூறிக் கொண்டாலும்ண் அத்தகைய முறைகள் கையாளப் பட்டதாகத் தெரியவில்லை. எந்திரத்தனமான, வழக்கமான மற்றும் சடங்குப் போன்ற முறையில் எழுதப் பட்ட தோற்றம் தான் புலப்படுகிறது. அந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2022ல் வந்த செய்தியை கவனிக்க வேண்டியுள்ளது.

ஆகஸ்ட் 2022 – சென்னை சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி செய்து கொண்ட ஒப்பந்தம்: சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு மையமாக  சென்னை சித்த மருத்துவ நிறுவனம் (என்.ஐ.எஸ்) விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழிநுட்ப பாடப்பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக சென்னை ஐஐடி விளங்குகிறது. இந்நிலையில், சித்த மருத்துவம் கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, என்.ஐ.எஸ். இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் கையெழுத்தானது. இது தொடர்பாக, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதிய பாடத் திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல்வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை உதவும்,” என்று தெரிவிக்கப்பட்டது[8].

சித்த மருத்துவத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது: இந்த கூட்டுமுயற்சியின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி,”இந்திய மருத்துவத்தில் சித்தா மிக முக்கிய புள்ளியாகும். சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த கூட்டாண்மை கவனம் செலுத்தும்,” எனக் குறிப்பிட்டார்[9]. கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், வெப்மினார்கள், மாநாடுகள், பாடத் திட்டங்களைத் தொடருதல் [தொடர் மருத்துவக் கல்வி (CME) உள்பட], கல்வித் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும். கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

சித்தமருத்துவ ஆராய்ச்சி இன்றியமையாதது: இவ்வாறு சென்னையிலேயே, சித்த மருத்துவம், சித்த மருத்துவமனை, என்றெல்லாம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிர்வகித்து வருகின்ற நிலையுள்ளது. ஆனால், சித்த மருத்துவ சோதனை, சித்த மருத்துவ பரிசோதனை, சித்த மருத்துவ சோதனைக் கூடம், சித்த மருந்துகளை உபயோகித்து அதற்றின் நோய் தீர்க்கும் முறை கண்டறிதல், மெய்ப்பித்தல், போன்றவை நடத்தப் பட்டனவா, விலைவுகள் என்ன, முடிவுகள் என்ன, வெற்றி சதவீதம் என்ன போன்றவைப் பற்றி தெரியாமல் இருக்கின்றன. சர்வரோக நிவாரிணி ரீதியில் விளம்பரங்கள், யூ-டியூப் போன்றவற்றை வைத்துக் கொண்டு அதிரடி பேச்சுகள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், என்பவை இருக்கத் தான் செய்கின்றன. ஆகவே, அவை தொடர்ந்து நடக்க வேண்டும், ஆராய்ச்சிகளும் செயல்பட வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-12-2022.


[1] டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேசிய சித்த மருத்துவ மாநாடு, TNPSCPortal.In, December 15, 2022.

https://www.tnpscportal.in/2022/12/blog-post_72.html

[2] தினமணி, தேசிய சித்த மருத்துவ மாநாடு இன்று தொடக்கம், By DIN  |   Published On : 15th December 2022 12:15 AM  |   Last Updated : 15th December 2022 12:15 AM.

[3]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3967052.html

[4] தினமலர், சித்த மருத்துவ ஆராய்ச்சி ரூ.25 கோடி ஒதுக்கீடு, Added : டிச 16, 2022  08:23.

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3195609

[6] தினமணி, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன், By DIN  |   Published On : 16th December 2022 06:35 AM  |   Last Updated : 16th December 2022 06:35 AM

[7]https://www.dinamani.com/tamilnadu/2022/dec/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3967837.html

[8] நியூஸ்.18.தமிழ், சித்த மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடி: சித்த மருத்துவ நிறுவனத்துடன் ஒப்பந்தம், NEWS18 TAMIL, LAST UPDATED : AUGUST 08, 2022, 14:21 IST

[9] https://tamil.news18.com/news/education/chennai-iit-is-partnering-with-chennai-national-institute-of-siddha-on-research-and-clinical-studies-781927.html

Posted in அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், உடல், உயிர், எலும்பியல், ஒத்தடம், கந்தகம், கரைசல், கற்பம், சர்க்கரைநோய், சிகிச்சை, சித்தம், சித்தர், சிந்தனை, சிராய்ப்பு, தீக்காயங்கள், நரம்பு, நாடி, நாட்டு மருத்துவம், நினைவு, நோய், பாரம்பரியம், பிணம், பித்தம், பித்து, மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மயக்கம், மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோசனை, ரணச்சிகிச்சை, வர்மம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (1)

Posted by vedaprakash மேல் திசெம்பர் 16, 2022

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (1)

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. இது சித்த மருத்துவத்திற்கான அரசு மருத்துவ மனை மற்றும்ஆராய்ச்சி நிறுவனம். இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. திராவிடத்துவ சித்தாந்திகள், எதை-எதையோ பேசுவார்கள், ஆனால், இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது: இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்த மருத்துவமனை 14.78 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நிசப்தம் நிலவும் மருத்துவமனை வளாகத்தில், 300 வகையான மூலிகைச் செடிகளையும் மரங்களையும் பார்க்கலாம். வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் துறை, கற்பித்தல் மற்றும் நிர்வாகத்துக்கென தனி தனி கட்டடங்களுடன் செயல்படுகிறது இந்த மருத்துவமனை. இங்கே சராசரியாக ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வருடத்தில் 365 நாள்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வெளி நோயாளிகளுக்கும், 24 மணி நேரமும் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது: வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு அந்தந்த நோய்களுக்கு ஏற்ப வர்மம், தொக்கணம், அட்டைவிடுதல், பற்று, ஒத்தடம், புகை, சுட்டிகை மற்றும் யோகம் ஆகிய சித்த மருத்துவமுறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சர்க்கரைநோய், இதயநோய், ஆஸ்துமா, மூலம், காயங்கள், சிராய்ப்பு, தீக்காயங்கள் போன்றவற்றுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கிறார்கள். முதியோர் நலம், மகளிர் மருத்துவம், யோகம் – காயகல்பம், உடல் பருமன், ஒப்பனையியல், மகப்பேறின்மை, ஆட்டிசம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.

குழந்தைகள் நோய் பிரிவு: குழந்தைகளை பாதிக்கும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பகுதியில், சரும நோய்கள், கரப்பான், சொறி சிரங்கு, பூச்சிக்கடியால் ஏற்படும் அலர்ஜி ஆகியவற்றுக்கு இங்கே சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை, மலச்சிக்கலுக்குச் சுக்கு, மிளகு போன்ற அஞ்சறைப் பெட்டி மருந்துகளை முறைப்படுத்தி, நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஓமத்தண்ணீர், மாதுளம்பழ சிரப் (syrup), தயிர்சுண்டி சூரணம் ஆகியவை குழந்தைகளின் உடல்நிலையை ஒரு நாளிலேயே சரிசெய்துவிடலாம் என்பது போன்ற எளிய முறைகளைச் சொல்லித் தருகின்றனர்.  மேலும், சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இயற்கையாக ஏற்படும் மூளை வாதம், குழந்தையின் ஒரு பக்க உறுப்புகளின் செயல்பாடு குறைவாக இருப்பதால் உண்டாகும் பால வாதத்துக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆட்டிசம், ஹைப்பர்ஆக்டிவ் டிஸ்ஆர்டர், ஏ.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder), கற்றல் கோளாறுகள் ஆகிய பிரச்னைகளுக்கும் இங்கே சிகிச்சை கொடுக்கிறார்கள். உடம்பில் முக்கியமான புள்ளிகளை அழுத்தி, மூளை அல்லது செயலிழந்த நரம்புகளை மீண்டும் செயல்படவைக்கும் வர்ம சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அதோடு பிசியோதெரபியும் தரப்படுகிறது. சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து கடந்த இரண்டரை மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தோம்… “முன்னாடில்லாம் பேச மாட்டான்; நடக்க மாட்டான். கை, கால் நேரா நிக்காது. இப்போ நல்லா நிக்குறான். சில வார்த்தைகளைப் பேசுறான். எவ்வளவு கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸே பண்ணாம இருந்தவன், இப்போ ரியாக்‌ஷன் கொடுக்குறான்’’ என்றார்.

பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுகள், சிகிச்சை முதலியன: பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, சூதகத்தடை (Absence of Menstruation), மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (Menorrhagia) ஆகியவற்றுக்கும், `கர்ப்பப்பைக் கட்டி’ (Fibroid) எனப்படும் நார்த்திசுக் கட்டிப் பிரச்னைக்கும் சிகிச்சை… மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் மனக்குழப்பங்களுக்கு நோயாளிக்குத் தேவையான கவுன்சலிங் (counselling) கொடுக்கிறார்கள். மகப்பேறின்மைக்காக ஆண்,பெண் இரு பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இதற்கெனச் சிறப்பு ஓ.பி (புறநோயாளிகள் பிரிவு) இயங்குகிறது. மார்பகங்களில் உண்டாகும் நீர்க்கட்டி, உடல் பருமன் ஆகியவற்றையும் கவனிக்கிறார்கள். பிரசவம் தவிர, கர்ப்பிணிகளுக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும், உதவிகளும் இங்கே வழங்கப்படுகின்றன.

பலவிதமானா நோய்கள், குறைபாடுகள் முதலியவற்றிற்கு சிகிச்சை: கழுத்துவலி, இடுப்புவலி, பக்கவாதம், தூக்கமின்மை, மனநிலை மாறுபாடுகள், தலைவலி ஆகியவற்றுக்கு வர்ம சிகிச்சை கொடுக்கிறார்கள். அங்கே வந்திருந்த 72 வயது ஜெயலட்சுமியிடம் பேசினோம்…”எனக்குப் பக்கவாதத்தால கை, கால் செயல்படாமப் போச்சு. ஆறு மாசமா சிகிச்சை எடுக்குறேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தைலம், லேகியம், மாத்திரைனு நிறைய மருந்துகள் தர்றாங்க,’’ என்றார். எலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்ணெய் தடவுதல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள், வயதானவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் முறிவு, அடிபடுவதால் ஏற்படும் முறிவு உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.

அட்டை வைத்து சிகிச்சைலீச் தெராபி: ‘அட்டைவிடுதல்’ (leech therapy) பகுதி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. `அட்டைவிடுதல்’ என்பது, உடலிலுள்ள அசுத்தமான ரத்தத்தை நீக்குவதற்கு அல்லது சுத்தப்படுத்துவதற்கு பாதிப்புக்குள்ளான இடத்தில் அட்டையைவிடும் முறை. அட்டையைக் குறிப்பிட்ட அந்த இடத்தில் கடிக்கவிட்டால், தேவையில்லாத ரத்தம் உறிஞ்சப்படும். காயம்பட்ட இடத்திலிருந்து அதிகபட்சமாக 120 மி.லி வரை ரத்தத்தை உறிஞ்சிவிடுமாம் அட்டை. ஒரு நோயாளிக்கு நான்கு அட்டைகளை கடிக்கவிடுகிறார்கள். `இந்த அட்டை கடிப்பதால் வலி இருக்காது; இதன் மூலம் கரப்பான், புழுவெட்டு, மூட்டு வீங்குதல், அடிபட்ட வீக்கம் போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்கிறார்கள். 

நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன: பெளத்திரம் பிரச்னைக்கு, `கார நூல்’ எனப்படும் மருந்து நூலைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் எளிய ஆசனப் பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன. நோய்களுக்கு ஏற்ப யோகா கற்றுத் தரப்படுகிறது. ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு யோக மருத்துவச் சிகிச்சையும் தருகிறார்கள். சித்த மருத்துவ அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இ.சி.ஜி, எக்ஸ்ரே, யு.எஸ்.ஜி (உயரிய ரத்த சோதனை), பயோ கெமிக்கல் டெஸ்ட் (Bio-chemical Test), நுண்ணுயிரியியல் சோதனை (Microbiological Test), நோய்க் குறியியல் சோதனை (Pathological Test), சித்தா நோய் கண்டறியும் சோதனை (Siddha diagnostic Test) மற்றும் மருந்தகம் (Pharmacology) ஆகிய நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன[1]. மொத்தத்தில் எளியோர் முதற்கொண்டு எல்லோரும் பயனடையும் வகையில் சிறப்பாகச் செயல்படுகிறது இந்தச் சித்த மருத்துவமனை[2].

டிசம்பர் 2022ல் கோவாவில் 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ்: இன்று கோவாவின் பனாஜியில் மத்திய சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக், முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ், உலக அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) துறையின் சந்தை அளவு 2014 இல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதிலிருந்து இப்போது 18 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது. 2014-2020 ஆம் ஆண்டில், ஆயுஷ் தொழில்துறை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் ஆயுர்வேத சந்தை 2021-2026 லிருந்து ஒட்டுமொத்த வருடாந்தர வளர்ச்சி 15 சதவிகிதம்  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சித்த மருத்துவ நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முயற்சியால் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் – AYUSH) துறைகளில் புதிய பல கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதற்காக தேசிய சித்த மருத்துவம் மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அண்மையில் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சித்த மருத்துவம் குறித்து ஆயுஷ் சாரா மருத்துவர்களுக்கான ஒருங் கிணைந்த பயிற்சி முகாம் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தது. ஒருவாரம் நடைபெறும் பயிற்சி முகாம், அது குறித்த கையேடும் வெளியிடப் பட்டது.

© வேதபிரகாஷ்

16-12-2022.


[1] விகடன், பாரம்பர்ய சிகிச்சை, நவீன வசதிகள்தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் ஒரு நாள்!, நான்சி மேரி, ஆர்.மகாலட்சுமி, Published:03 Jul 2018 5 PMUpdated:03 Jul 2018 5 PM

[2] https://www.vikatan.com/health/healthy/129633-traditional-treatment-modern-facilities-tambaram-national-siddha-hospital

Posted in அகத்தியர், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், இந்திரியம், உடல், உயிர், எலும்பியல், ஒத்தடம், கண், கரைசல், கல்பம், காது, கை, சர்க்கரைநோய், சிகிச்சை, சித்தர், சிராய்ப்பு, தமிழ்நாடு, திராவிடம், திருமூலர், தீக்காயங்கள், நாத்திகம், பதஞ்சலி, பரம்பரை, பற்று, மருந்து, வர்மம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

திகம்பர-நிர்வாண அரேபியர்கள்–வெள்ளையுடையணிந்தவராக – ஸ்வேதம்பரர்களானது எவ்வாறு?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

திகம்பரநிர்வாண அரேபியர்கள்வெள்ளையுடையணிந்தவராகஸ்வேதம்பரர்களானது எவ்வாறு?

திகம்பர அரேபியர்கள் ஸ்வேதம்பரர்களானது எவ்வாறு?: முஸ்லீம்கள் ஹஜ் பயணம் செய்வது இப்பொழுது, ஊடகங்களில் காட்டி வருவதால், ஓரளவிற்கு அவர்களது பழக்க-வழக்கங்கள் தெரிய வருகின்றன. இருப்பினும் பெரும்பான்மையான விவரங்கள் முஸ்லீம்களுக்குத்தான் தெரியும். அத்தகைய கிடைக்கும் விஷயங்களை ஓரளவிற்கு எடுத்துக்கொண்டு இங்கு அலசப்படுகின்றன. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை செல்லும் முஸ்லீம்கள் பிராமணர்களைப் போல தலையை மழித்துக் கொண்டு, ஒற்றை வெள்ளாடை அணிந்து, இக்கல்லை ஏழுமுறை சுற்றி வருகின்றனர் (தவஃப்). வித்தியாசம் என்னவென்றால் அப்பிரதக்ஷணமாக (இடப்பக்கமாக வலம் வருதல்) சுற்றுகின்றனர். உண்மையில் அவர்கள் நிர்வாணமாக சுற்றிவரவேண்டும்[1]. அதாவது மனிதர்கள் பிறக்கும் போது, நிர்வாணமாக பிறாப்பதால், ஆண்டவன் முன்பாக செல்லும்போது, அதே கோலத்தில் / நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான், ஆண்டவன் வேண்டியதைக் கொடுப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. பெண்களும் அவ்வாறே இரவு நேரத்தில் சுற்றி வந்தனர்.

அரேபியர் காபாவை நிர்வாணமாகச் சுற்ற வேண்டும், கூடாது என்பதற்கான வாதவிவாதங்கள்: அக்காலத்தில் காபா வளாகம் குரேஷி மக்கள் வசம் இருந்து, நிர்வாகிக்கப்பட்டு வந்தது. காபாவில் சென்று சுற்றுவதற்கு அவர்களிடம் துணி வாங்கிக் கொண்டு செல்லவேண்டும், ஆனால், அதற்கு பணம் இல்லாதவர்கள் நிர்வாணமாகச் சென்றார்கள் என்று சில இஸ்லாமிய பண்டிதர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். இருப்பினும், ஆடை அணிந்து கொண்டும், ஆடையில்லாமலும், ஒரே நேரத்தில் பக்தர்கள் காபாவைச் சுற்றிவர முடியாது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க அனைவருமே ஆடையணிந்து வரவேண்டும் என்ற முறை ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். இதனால், அவர்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டு சுற்றிவர ஆரம்பித்தனர். இப்பழக்கம் 630-631 (ஹிஜிரி 9) ஆண்டுகளின்று அமூலுக்கு வந்ததாகத் தெரிகிறது[2]. “யயூம்உன்நஹ்ர்” (Yeum-un-Nahr) என்ற பெரிய திருவிழாவின் போது, நபிகள் இனிமேல் விக்கிர ஆராதனையாளர்கள் யாரும் அங்கு வரக்கூடாது மற்றும் நிர்வாணமாக சுற்றிவரக்கூடாது, என்று ஆணையிட்டார்[3] (அலி மூலம் பிரகடனப்படுத்தப் பட்டது). முதலில் ஆண்கள்-பெண்கள் எல்லோருமே அங்கு சென்று வழிபட்டு வந்தனர். ஆகவே 630-631 CE வரை அரேபியர்கள் அத்தகைய நிர்வாண வழிபாட்டை தொடர்ந்து கடைபிடித்து வந்தனர். இதைத்தவிர பற்பல சடங்குமுறைகளை பின்பற்றிவந்தது, இன்றும் வருவது (இவற்றை ஆசார முஸ்லீம்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்[4]) கடந்தகாலத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது எனலாம்.

  1. சந்திரனைப் பார்ப்பது.
  2. நாற்பது நாட்கள் நோன்பு காப்பது.
  3. சூரியன் உதிப்பதிலிருந்து, மறையும் வரை உண்ணாமலிருப்பது.
  4. ஹஜ் யாத்திரைக்குச் செல்வது.
  5. ஆண்கள்-பெண்கள் சுத்தமாக இருப்பது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கக்கூடாது.
  6. அப்ரஹாமைப் போல பலியிடுவதற்குப் பதிலாக, தலையை வெட்டிக் கொள்வதற்கு பதிலாக, மொட்டை அடித்துக் கொள்வது.
  7. மொட்டையடித்துக் கொள்வது, நீராடுவது, ஒற்றையாடை அணிவது.
  8. பெண்கள் ஆண்களைப் போன்று ஆடையணியாமல் இருப்பது. பச்சைநிற ஆடைகள் கிடைக்கவில்லையென்றால், மற்ற நிற ஆடைகளை அணிவது.
  9. பெண்கள் முகத்தை மறைக்காமல் இருப்பது
  10. ஆண்கள் வலது தோள் தெரியும்படி இஹ்ரம் அணியவேண்டும், ஆனால், பெண்கள் அவ்வாறு செய்யக்கூடாது.
  11. இஹ்ரம் அணிந்த பிறகு சொரியாமல் இருப்பது.
  12. காபாவை ஏழுமுறை சுற்றி வருவது (தவாஃப்), ஆனால், பெண்கள் மறுக்கப்படுவது.
  13. முதல் மூன்று சுற்றுகளில் ஆண்கள் ஓடிவரவேண்டும், பெண்கள் ஓடவேண்டாம்.
  14. பெண்கள் காபாவிற்கு அருகில் செல்லாமல் இருப்பது, தவாஃப் இரவில் செய்வது.
  15. கருப்புக்கல்லை பெண்கள் முத்தமிடாமல், தூரத்திலிருந்து கையை ஆட்டுவது, சைகை செய்வது.
  16. மிருகத்தைப் பலியிடுவது, ஆனால், வேட்டையாடமல் இருப்பது.
  17. சஃபா மற்றும் மார்வா என்ற குன்றுகளிக்கிடையே ஓடுவது (ரமால்).
  18. புனிதமான அராஃபத் மலையை அடைவது.
  19. ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வது, பெண்கள் சிறிது முடியை வெட்டிக் கொள்வது.
  20. ஹஜ் முடியும்வரை தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்வது
  21. புனித பள்ளிவாசலுக்குச் சென்று (உம்ரா), ஹஜ்ஜை பூர்த்தி செய்து கொள்வது.

இதைத்தவிர குரானில் இல்லாதவற்றைப் பின்பற்றப்படுவதாக, கீழ்கண்ட சடங்குகள் சொல்லப்படுகின்றன[5]:

  1. எத்தகைய செருப்பை அணிவது
  2. இஹ்ரம் (ஒற்றை வெள்ளையாடை) கட்ட பின்னை உபயோகப்படுத்துவது.
  3. அராஃபத்தில் தொழுகை
  4. எவ்விதமான கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்வது
  5. ஹஜ் சென்றுவந்தால் செய்த பாவங்கள் போய்விடும் என்று நம்புவது.
  6. பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பது.
  7. காணிக்கைச் செல்லுத்துவது.

இவற்றைத் தவிர அதிகமான, சர்ச்சைக்குறியவைகள் பல இருப்பதால், அவை கொடுக்கப்படவில்லை.

இச்சடங்குகளை உன்னிப்பாகப் பார்க்கும்போது, மந்த்ரதந்தரயந்த்ர வழிபாடுகள், கிரியைகள், சடங்குகள் பின்பற்றப்பட்டு வந்தன, ஆனால், நபிக்குப் பிறகு அவை மாற்றப்பட்டன, மறைக்கப் பட்டன என்று தெரிகிறது. எது எப்படியாகிலும், இப்படி சரித்திரத்தை மறைப்பதனால் உண்மையினை அறியமுடியுமா? மெய்ஞானம், மெய்ஞானியர், சூபிக்கள், சித்தர்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, இவற்றை மறைத்து, மறந்து உண்மையினை புரிந்து கொள்ள முடியுமா?

வெள்ளைக் கருப்பானது, நிர்வாணம் மறைந்தது: ஜைனர்கள் மேற்குப் பக்கமாக சென்று பல பகுதிகளில் குடியேறினர் என்று முன்னமே சுட்டிக் காட்டப்ட்டது. அலெக்சாந்தர் எப்படி நிர்வாண சாமியார்களைக் கண்டு வாதத்தில் ஈடுபட்டு தோற்றானோ, அதேபோல, மற்றவர்களும் நிர்வாண சாமியார்களிடம் தோற்றிருப்பர். அதனால்தான் கிரேக்க சாமியார்கள் நிர்வாணமாக இருந்தனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதாவது நிர்வாணம் என்பது பழங்கால மதங்களில் புனிதமாகக் கருதப்பட்டது. ஆனால், அது சாதாரண மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. இக்காலத்தைய மொழியில் சொல்லவேண்டுமானால் கொச்சைப்படுத்தப்பட்டது. எதனால் அத்தகைய சடங்குகள் செய்யப்பட்டன என்று சொல்லப்படவில்லை. ஆனால், வெள்ளையுடை அணியலாம், பெண்கள் பங்குக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் ஏன் வந்தன என்று விளக்கப்படவில்லை.

முன்னர் அரேபியர் அறியாமையில் இருந்தனர், பின்னர் ஒளி (நூர்) வந்தது என்றால், இரண்டு முறைகளுக்கும் உள்ள வேற்றுமைகளை அடிப்படையில் விளக்க வேண்டும். வெள்ளையாடை அணிந்து கொண்டோ அல்லது நிர்வாணமாகவோ நட்டகல்லை சுற்றி வந்தால் என்ன பலன் ஏற்படும்? இருப்பினும் அரேபியப் பகுதிகளில் அவர்கள் நெடுங்காலமாக தமது நம்பிக்கைகளுடன் தொடர்ந்து வாழ்ந்திருப்பர். பெண்களை நடத்துவதில், அடக்கி வைப்பதில் ஜைனர்கள் மற்றும் அரேபியர்களிடம் ஒற்றுமையைக் காணலாம். பிறகு பௌத்தம் ஆதிக்கத்தில் வந்தபோதும், அதே நிலை தொடர்ந்தது. பௌத்தத்தில் திகம்பரகள் இல்லாவிட்டாலும், மற்ற கொள்கைகள், நம்பிக்கைகள் ஒரேமாதிரியாகத் தான் இருந்தன. ஆகவே இப்படி பல காலக்கட்டத்தில் அரேபியர்கள் மாறியபோது, பழைய பழக்க-வழக்கங்கள், நம்பிக்கைகள் தொடர்ந்தன. அதனால்தான், நபிகள் மெக்காவில் காபாவில் கல்லை விட்டுவைத்தார். வருடம் தோறும் நடைப்பெற்றுவ்வந்த யாத்திரை, சடங்குகள் முதலியவற்றை மாற்றியமைத்தார்.

அரேபியா முகமது நபிக்கு முன்னர் மற்றும் பின்னர்: மத்திய ஆசியாயைப் போல வளைகுடா (Gulf), செங்கடல் (Red Sea) மற்றும் மத்தியத்தரைக்கடல் (Mediterranean) நாடுகளிலேயும் வேத-ஜைன-பௌத்த மதங்கள் இருந்து, பிறகு அவை கிரேக்க-மணிக்கிய-கிருத்துவ-முகமதிய மதங்களாக அங்கங்கு உருமாறியுள்ளன. அசோகர் காலத்தில் புத்தமதம் எகிப்து வரை பரவியிருந்தது. எகிப்தில் லக்ஷார் (Luxor) என்ற இடத்தில் உள்ள புத்தர்சிலை இதற்கு சான்றாக உள்ளது. அலெக்ஸ்சாண்டிரியா, டமாஸ்கஸ், பாக்தாத், நிஷாபுரி, காந்தாரம், மூல்தான், கங்காபூர், இந்திரபிரஸ்தம் பாதையில் (traditional route) மக்கள் சென்று வந்துள்ளனர். முகமது நபி (570-632 CE) தோன்றுவதற்கு முன்பு அரேபியாவில் இருந்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் பல இருப்பினும் முகமதியர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. முஸ்லீம்களைப் பொறுத்தவரையில், முகமது நபிக்கு முந்தைய அரேபிய காலத்தை காஃபிர்கள் (நம்பிக்கையில்லாதர்கள் வாழ்ந்த) இருண்டகாலமாகவே (ஜஹல்லியா) கருதுகின்றனர். இஸ்லாமின் ஒளிபட்ட பிறகுதான் அங்கு, நம்பிக்கையுள்ளவர்களின் (மோமின்கள்) வாழ்க்கை மலர்ந்தது. ஆகையால் பழங்காலத்தை– 7ம் நூற்றாண்டிற்கு முந்தையதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவற்றை மறைக்க, மறக்க, மறுக்க முயல்கின்றனர்[6].

அரேபியாவில் ஹிந்துக்கள் / இந்தியர்கள்: அசோகனின் கல்வெட்டுகள் மேற்காசியாவில் இருந்தன என்பது, அவை அங்கிருக்கும் இந்தியர்களுக்குத் தான் என்று தெரிகிறது. அதாவது ஒரு பக்கம் பாரசீகர் மறுபக்கம் கிரேக்கர்கள் ஆதிக்கத்தில் இருந்தாலும் இந்தியர்களின் சமூக ஆதிக்கம் அவற்றைவிட உயர்ந்திருந்தது என்பதனை அது காட்டுகிறது. பாரசீகர் மற்றும் கிரேக்கர்கள் தமது சரித்திரத்தில் இந்தியாவை வென்றது மாதிரி எழுதி வைத்துக் கொண்டாலும், உண்மையில் அவ்வாறில்லை என்பது இக்கல்வெட்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இரண்டாம் நூற்றாண்டில் யூப்ரடீஸ் (Euphrates) நதிக்கு மேலே, வான் என்ற ஏரிக்கு மேற்கே டாரோன் (canton of Taron) என்ற பகுதியில் இந்தியர்களின் காலனி இருந்தது என்று ஜெனோப் (Zenob) என்ற சிரிய எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்[7]. இந்துக்கள் அங்கு இரண்டு கோவில்களைக்கட்டி அதில் 16 மற்றும் 22 அடி உயரமுள்ள விக்கிரங்களைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டனர்[8]. அரேபிய எழுத்தாளர்கள் அவர்களை ஜுத், மெய்த், சியபஜாப், அஹமிரா, அஸ்விர என்றழைத்தனர். இந்துக்கள் அந்தளவிற்கு பெருபான்மயினராகவும், செல்வாக்குடனும் இல்லாமலிருந்தால் தான், அவர்களால் அங்கு கோவில் கட்டிக் கொள்ள முடிந்தது.

இந்துக்கள் முக்கியமான வேலைகளில் அமர்த்தப்பட்டது எப்படி, ஏன்?: டபிள்யூ. எச். சித்திக்கி என்பவர் இந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று விளக்கியுள்ளார்[9].  இங்கு “அஸ்விரா” என்ற சொல்லிற்கான விளக்கம் முக்கியமாக உள்ளது.  இந்தியர்கள் ராணுவம், கருவூலம், ஜெயில்-பாதுகாப்பு, சமையல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள், ஏனெனில் அவர்கள் “மிக்க பலசாலிகள் மற்றும் வீரர்கள்”, “சிந்து பகுதிகளிலிருந்து வந்த சிவப்பானவர்கள்” மற்றும் “நம்பிக்கையுள்ள காப்பாளிகள்” என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறான இந்துக்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து அங்கு “நம்பிக்கையான—பாதுகாப்பு-கருவூலம்” போன்ற வேலைகளுக்கு அமர்த்தப்பட்டார்கள் என்பதைவிட, அவர்கள் அங்கேயே வாழ்ந்து வந்ததால், அக்காலம் வரை இந்துக்கள் அதிகமாக இருந்தார்கள் என்பதினால், அவர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு இந்துக்கள் சிறந்திருக்கும் போது, அவர்களது மதம் மற்றும் மதகுருக்கள் முதலியோர் அங்கு சிறந்திருந்தன என்பதில் வியப்பில்லை. அதனால்தான் 16 மற்றும் 22 அடி உயரமுள்ள விக்கிரங்களைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டனர் என்றுள்ளது.

ஹிந்த்ஹிந்த்ஸாஹிந்தானி: “அஸ்விரா” என்ற வார்த்தை “அஸ்வவரா” என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இந்தியாவில் செய்யப்பட்ட கத்திகள் மிகவும் சிறந்தவை, மெல்லியவை ஆனால் கெட்டியானவை, வளைக்கக்கூடியதாக உள்ளவை ஆனால் உடையாதவை என்று “சைஃப் அல்ஹிந்த்”, “ஹிந்தி”, “முஹான்னித்”, “ஹிந்தானி”, “ஹந்தவானி” அதாவது “ஹிந்தியாவிலிருந்து / இந்தியாவிலிருந்து” வந்தவை என்று பொருள். இந்தியப்பொருள்கள் எல்லாம் அரேபியமொழியாக்கம் பட்டு வழங்கி வந்தன. கபூர் (கற்பூர்=கற்பூரம்), ஜென்ஜ்பீல் (ஜெஞ்பீர்=இஞ்சி), ஃபுல்ஃபில் (பீபல்=அரசமரம்), சஜ் (சக்வான்), குஸ்த் (குஸ்தா), தாஜி (தரி), கரான்புல் (கரான்ஃபூல்) என்று சமஸ்கிருதச் சொற்கள் மாற்றப்பட்டவை என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதைத்தவிர அரிசி, தோகை போன்ற தமிழ்சொற்களும் காணப்படுகின்றன. ஆகவே, 1300 வருடங்களுக்கு முந்தைய அரேபிய வரலாற்றை மறந்து, மறுத்து, மறைத்து உண்மை வரலாறு படிப்பதாகாது. மூலங்களை மறைத்து, எந்த நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் உண்மையினை அறியமுடியாது. அப்படி மறைத்தால் புதியதாக வந்துள்ளது என்று பொருளாகிவிடும்.

இந்திய புத்தகங்கள் அரேபியமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது, பிறகு இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது, ஐரோப்பிய நாடுகளில் பரவியது: முகமது மறைந்து நூற்றாண்டுகளில் அப்பாஸித் காலத்தில் (8-9 நூற்றாண்டுகள்) பாரதத்திலிருந்து சமஸ்கிருதப் பண்டிதர்கள் வரவழைக்கப் பட்டு, இந்திய மருத்துவ, வானியல் முதலிய நூற்கள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.  அப்பாஸித் சுல்தான்கள் 750-1242 வரை பாக்தாத்லிருந்து ஆட்சி செய்து வந்தனர்[10]. பாக்தாத், கெய்ரோ, கர்டோவா முதலிய இடங்களில் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் அவர்கள் பெரும்பங்காற்றினர். “விஸ்வ-வித்தியாலயா” என்பவை அக்காலத்தில் பாரதத்தில் தான் பிரபலமாக இருந்தன. அதனால் தான், உலகம் முழுவதும் அறிஞர்களே அங்குச் சென்று படித்துச் சென்றனர். பைதாகோரஸ், பிளாட்டோ முதலியோர் வந்து சென்றது முன்னமே குறிப்பிடப்பட்டது.

அப்பாஸித் காலத்தில் இந்திய புத்தகங்கள் அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது: அப்பாஸித் காலத்தில் (8-9 நூற்றாண்டுகள்) பாரதத்திலிருந்து சமஸ்கிருதப் பண்டிதர்கள் அரேபியா சென்றுவரக்கூடிய நிலைமை இருந்தது. காலிப் அரூன் அல்-ரஷீத் (786-809 CE) மற்றும் அல்-மா’மூன் (813-33 CE) காலத்தில் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன[11]. அப்படியென்றால் அவர்களுக்கு சமஸ்கிருதம்-அரபி இரண்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்றாகிறது. பிறகு அரேபிய எழுத்தாளர்கள் மற்றும் உள்ளூர் மருத்துவர்கள் இந்தியமுறைகளை மாற்றி மற்றும் தங்களது சொற்களைச் சேர்ந்து எழுதினர். அமீர் பஹர் அல்-ஜாஹிஸ்[12] (பாஸ்ராவைச் சேர்ந்தவர், 869ல் இறந்தார்), அல்யாகுபி[13] (900ல் இறந்தார்), அபூ மஷார் அல்-பல்கி[14] (885ல் இறந்தார்), முதலியோர் அரேபிய மருத்துவ முறைகளில் இருக்கும் இந்திய தாக்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.  அரேபியர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்றால், அவர்கள் இந்திய பண்டிதர்களை அங்கு வரவழைத்திருக்க வேண்டாம். முன்னரிருந்தவர்கள் தங்களது பாரம்பரையத்தை படிப்பிலும் தொடர்ந்திருந்தால், அந்நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர்கள் தங்களது பாரம்பரியங்களை மறந்ததினாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சிகளில் மாற்றுமுறைகள் ஏற்படுத்தியதாலும், பழயவை மறக்கடிக்கப் பட்டிருக்கலாம். இதனால் தான், சரித்திரம் எழுதுவதில் பிரச்சினை வருகிறது.

அரேபியர் மூலம் இந்திய புத்தகங்கள் ஐரோப்பிய நாடுகளில் பரவியது: 9-11 நூற்றாண்டுகளில் அரேபிய மருத்துவர்கள், இந்தியமருத்துவ முறைகள் பலவற்றை தமது நூல்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர், தகவமைத்துக் கொண்டுள்ளனர். இவை 13ம் நூற்றாண்டில் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளில் பொதுப் புத்தகங்களாக உலா வந்தன. இந்தவிதமாக இந்திய மருத்துவமுறையைப் பற்றிய ஞானம் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் தெரியவந்தது. முதலில் அரேபியர்கள் மூலம் அறிந்தததால், அவை அரேபியர்கள் தான் கண்டுபிடித்தனர், உருவாக்கினர் என்று தவறாகப் புரிந்து கொண்டு “அரேபிய மருத்துவம்”, “அரேபிய எண்கள்”, “அரேபியப் பொருட்கள்” என்று ஐரோப்பியர் குறிப்பிட்டனர். ஆனால், பிறகு உண்மையறிந்துதான், இந்தியாவிற்கு வரத்துடித்தனர். யுனானி மருத்துவத்தை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், எதோ இந்தியமுறையில் உள்ளவற்றிற்கு முன் “அல்” என்ற வார்த்தையைச் சேர்ந்தால் யுனானியாகி விடுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவ முறைகள், நிச்சயமாக இடத்திற்கு இடம், சுற்றுச்சூழல், மக்களின் நிலை முதலியவற்றிற்கேற்றபடி மாற்றப்பட்டிருக்கும் அல்லது தகவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அடிப்படை சித்தாந்தங்கள் ஒன்றாக உள்ளது, மருத்துவமுறைகளில் உள்ள சம்பந்தத்தைக் காட்டுகிறது.

அரேபியாவில் அதர்வண வேதத்தைப் பின்பற்றியவர்கள் இருந்தார்களா?: குரேஷி மக்களுக்கும் முகமது நபியைப் பின்பற்றுபவர்களுக்கும் இருந்த சண்டைகளில் அவர்கள் மிகவும் களைத்து விட்டார்கள். அதாவது குரேஷிகள் அவர்களை எதிர்த்து கொல்லப்பட்டப்வர்களின் பிணங்களைச் சேதப்படுத்துவதில் மிகவும் களைத்து விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது[15]. ஹிந்த் என்பவள் ஓத்பா என்ற குரேஷியின பெண்ணின் மகள், அபு சுபியாவின் மனைவி. இப்பெண்கள் ஹம்ஜா / ஹம்ஸா என்ற பெண்ணின் இதயத்தைக் கிழித்து, பிணங்களின் காதுகள், மூக்குகள் அறுத்து அவற்றை கழுத்தணியாக செய்துகொண்டு அணிவித்துக் கொண்டனர். அதாவது அப்பெண்கள் அப்படி வஞ்சம் தீர்த்துக் கொண்டனர் என்பதைவிட, அத்தகைய முறைகள் இருந்துள்ளன என்று தெரிகிறது. இவை மறைமுகமாக மந்த்ர-தந்தர-யந்த்ர முறைகள் பின்பற்றியதாகக் கொள்ளலாம். இந்தியாவில் குற்றம் செய்த பெண்களைக் கொல்வதில்லை, மாறாக மூக்கு-காது இவற்றை அறுத்து உயிருடன் விட்டுவிடுவது வழக்கம். பிறகு அவர்கள் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம். இம்முறை மஹாரஷ்ட்ரத்தில் 19ம் நூற்றாண்டு வரை இருந்தது.

முஹம்மதுகாலத்திற்குமுந்தைய / இஸ்லாமியகாலத்திற்குமுந்தையஅரேபியாவில் இருந்த  இந்துக்களின் விக்கிரங்கள்: அரேபியாவில் சிவன், சிவசக்தி, மும்மூர்த்தி வழிபாடுகள் இருந்தன என்பதற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. நபி வீனஸை வழிபட்டுவந்தார் என்றுள்ளது. சந்திரன் அவகளுக்கு விருப்பமான கடவுளாக இருந்தது. குரானிலேயே “அல்லாவின் மூன்று மகள்கள்” என்று அல்-மனத், அல்-லத், அல்-உஜ்ஜா என்று மூன்று பெண்தேவதைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் முஹம்மது-காலத்திற்கு-முந்தைய-அரேபியாவில் / இஸ்லாமிய- காலத்திற்கு-முந்தைய-அரேபியாவில் (Pre-Mohammedan Arabia / Pre-Islamic Arabia) இருந்தன என்று எழுதப்படுகிறது. 11ம் நூற்றாண்டின் பாரசீக குறும்சித்திரத்தில் காபா-வளாகத்தில் இருந்த 360 விக்கிரங்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பதனை விளக்குகிறது அதாவது சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியை இச்சித்திரம் விவரிக்கிறது. இச்சித்திரம் பைபிளியோதெக் நேஷனல், பாரிஸ். (the Bibliotheque Nationale, Paris) என்ற ஆவணக்காப்பகத்தில் உள்ளது.

காபாவில் இருந்த 360 விக்கிரங்கள் உடைத்து அழிக்கப் பட்டது: அச்சித்திரம் இடது பக்கமேல் மூலையைக் காட்டுவதாக உள்ளது. மூலையிலிருது இருபக்கமும் ஆறு விக்கிரங்கள் இருப்பதாக உள்ளது. தலையில் கிரீடம், இரு கைகள் உயர்த்தப்பட்ட நிலையில் அவற்றில் ஆயுதங்கள் இருப்பது போல உள்ளன. பீடத்தின் மேலே பத்மாஷணத்தில் உட்கார்ந்திருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போதே அவையெல்லாம் இந்துக்களின் விக்கிரங்கள் என்று பார்ப்பவர் யாராக இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று படிப்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளன:

  1. நூற்றுக்கணக்கான வீரர்கள் கைகளில் தடி, கடப்பாரைப் போன்ற கருவிகளுடன் விக்கிரங்களை நெருங்கி வருகிறார்கள்.
  2. நபியின் ஆணைப்படி, உடைக்கிறார்கள், நபி ஒரு வெள்ளைக் குதிரையின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
  3. மூலைப்பகுதியில் 13 சந்நிதானங்களில், 13 விக்கிரங்கள் உள்ளன. உடைந்த நான்கு விக்கிரங்கள், தரையில் வீழ்ந்து கிடக்கின்றன.
  4. பீடத்தில் இருந்த விக்கிரகம் தலைகீழாகப் புரட்டப் பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.
  5. இன்னொன்று பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்டு, தலை, கால்கள் முதலியவை துண்டு-துண்டாக உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
  6. ஒரு விக்கிரகத்தில் உள்ள கடவுள் / தேவதை, அஒயப்பன் போன்றே கால்களை வௌத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது.
  7. ஒரு விக்கிரத்தின் முண்டம் கீழே தரையில் காணப்படுகிறது. அருகில் தலையுள்ளது.
  8. இன்னொரு உடைந்த விக்கிரத்தின் மீது, ஒருவன் நின்றுக் கொண்டிருக்கிறான்.

629 CEல் நபி மெக்காவிற்கு வந்தபோது, மணிஃப் (Manif) என்ற விக்கிரத்தை உடைத்து தனது கால்களின் கீழ் போட்டு மிதித்தார்[16]. அவர்களைப் பின்பற்றியவர்களும், இப்படி விக்கிரங்களை அழிப்பது, நபியின் வழி என்று பின்பற்றினர். இதனால், உலகில் பல ஆதாரங்கள் அழிந்தன. அரேபியர் ரோம் மற்றும் பாரசீக நாகரிகங்களை அழித்தனர்.

ஹிந்த் உம் சல்மா,  ஹிந்த் முதலிய இந்தியப் பெண்மணிகள்: அபு சுபியாவின் மனைவி ஹிந்த் என்பவள் ஓத்பா என்ற குரேஷியின பெண்ணின் மகள், என்று குறிப்பிடப்பட்டது. அதேபோல முகமது நபியின் மனைவிகளில் ஒருத்தியின் பெயர் ஹிந்த் உம் சல்மா என்பதாகும்[17]. இங்கு “ஹிந்த்” என்றால் ஹிந்து மற்றும் இந்தியப் பெண்மணி என்று பொருள்படும். ஹிந்த் = இந்தியாவிலிருந்து; ஹிந்தஸா = இந்திய எண்கள், இந்தியாவிலிருந்து வந்தவை; சிந்த்-ஹிந்த் = சித்தாந்த் = இந்திய வானியல் நூல்களைக் குறிக்கும். எனவே ஹிந்தியாவின் தாக்கம் அதிகமாகவேயுள்ளது. பர்தௌஸ்-உல்-ஹிகமத்[18]  என்ற புத்தகம் இந்திய மருத்துவத்தை (ஆயுர்வேதம்) அதிகமாகவே விளக்கியுள்ளது. ஆகவே முகமதுவிற்குப் பிறகு, இஸ்லாம் தோன்றிய பிறகு 11ம் நூற்றாண்டு வரை, பாரதத்துடன் நல்லுறவை அரேபியர்கள் வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் 712 CEல் சிந்துவின் மீது அரேபியர் எப்படி படையெடுத்துவந்து நாசப்படுத்தினர் என்று தெரியவில்லை. ஆகவே, தீவிரவாத இஸ்லாம் பிரிவுகள், மிதவாதப் பிரிவுகளை விஞ்சியது என்று தெரிகிறது. பிறகு வந்தவர்கள் மதவெறியுடன் செயல்பட்டபோது, காந்தாரம், சிந்து முதலிய வடமேற்கில் இருந்த பாரதத்தின் பகுதிகள் பாதிக்கப்பட்டன. பௌத்தர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டனர், அல்லது மதம் மாற்றப்பட்டனர், தப்பித்தவர்கள், சீனா, திபெத் நாடுகளுக்கு ஓடினர். வேதமதத்தினருக்கும் அதேகதிதான் ஏற்பட்டது.

வேதமதம் மாற்றப்பட்டது, மாறியது, திரிந்தது: ஆதிசங்கரர் தனது காலத்தில் இருந்த நூற்றுக்கணக்கான நம்பிக்கையாளர்களை ஒன்றிணைக்கக் கடும்பாடு பட்டாகவேண்டியிருந்தது. வேதங்களை அறிவுபூர்வமாக மட்டுமல்லாது, செயல்படுத்துவதிலும் மக்கள் பல மாற்றுமுறைகளைக் கையாளத்தொடங்கினர். ஜைன-பௌத்தர்களின் மந்திர-தந்திர-யந்திர முறைகள் பலக்குழுக்களால் பின்பற்றப்பட்டு வந்தமையால், முன்னமே எடுத்துக் காட்டியபடி, பற்பல மாற்றங்கள், திரிபுகள், துஷ்பிரயோகங்கள் ஏற்பட்டன. இதனால் வேதமதத்தினரும், போட்டியாக புதியமுறைகளை புகுத்த ஆரம்பித்தனர். யாகங்களை தமது இச்சைகளுக்காக நடத்த ஆரம்பித்தனர். மந்திரப்புருஷர்களை தத்தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஏவலிட ஆரம்பித்தனர். அதர்வணவேதம் வெறும் பில்லி, சூன்னியம், ஏவல் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால்தான் ஆசாரமிக்க வேதமதத்தினர் அவர்களை ஒதுக்கி வைத்தது. அதனால் அக்கால அரேபிய மக்கள், கிரேக்கர்களைப் போன்றே பிராமணர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர். இதனால்தான் அதர்வணவேதம் “சதுர்வேதங்களில்” சேர்க்கப்படாமல் “திரிவேதங்களாக” இருந்தன.  “திரிவேத-சதுர்வேத” பிரச்சினைகள் இதனால் தான் வந்தது.

ஆதிசங்கரரின் அரேபிய விஜயம் (509-477 BCE / 788-820 CE): சங்கர திக்விஜயத்தில், ஆதிசங்கரர் பற்பல நாடுகளுக்குச் சென்றபோது, வடமேற்கிலுள்ள பஹ்லிக[19], காந்தாரம், பாரசீகம் மூலமாக அரேபியாவிற்குச் சென்றதாக[20] குறிப்புள்ளது[21]. அக்காலத்தில் காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் வாமச்சாரியம் என்ற கொடுமையான மந்திர-தந்திர-யந்திர முறைகளை அவர்கள் கடைப்பிடித்து, மக்களைத் துன்புறுத்த உபயோகப்படுத்தி வந்தனர். மேலும் அக்குழுக்கள் தங்களுக்குள் தங்களுடைய தேவதை-கடவுள் தான் பெரியது, சக்திவாய்ந்தது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால், ஆதிசங்கரர் தர்க்கரீதியில் மற்றுமல்லாது (அத்தி.10), மற்றமுறைகளிலும் மற்றவர்களை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. இதனால், –

  1. அவர் உடல் விட்டு உடல் மாறுதல் (அத்தி.9-10),
  2. மந்திர-தந்திர-யந்திர முறைகளை மூலம் அதர்வண வேதத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களை அடக்குதல்,
  3. நரசிம்ஹ மந்திரத்தை ஜெபித்து காபாலிகனைக் கொல்லுதல் (அத்தி.11),
  4. ஆகாயத்தில் பறந்து அரேபியாவிற்குச் சென்று அங்குள்ளவர்களை அடக்குதல்,
  5. ஜைன-பௌத்தர்களை வெல்லுதல் (அத்தி.15), போன்ற செயல்களைச் செய்துள்ளதாக திவ் மந்திர-தந்திர-யந்திர முறைகளை திக்விஜயங்கள் கூறுகின்றன.
  6. தனக்கே கொடிய வியாதியை கொடுத்தபோது, சிவனை ஜெபித்து, அஸ்வினிகுமாரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை செய்து குணமானதாக விவரங்கள் உள்ளன (அத்தி.16).

பிறகு அவர்களுக்கு வேதாந்தத் தத்துவத்தை போதித்தார். இதனால் அவர்கள் பற்பல தெய்வங்களை வழிபட்டு, பின்பற்றி வந்தவர்கள், சிலவற்றை நம்பி வழிபாடு செய்யும் முறைக்களுக்குள் வந்தனர். இன்றும் அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் கிடைக்கும் அகழ்வாய்வு பொருட்கள் இந்திய நாகரிகத்தைப் பொன்றேயுள்ளன. இருப்பினும் அவர்கள் உலகமெங்கும் உள்ள மக்கள் அவற்றை அறிந்து கொள்ளாதவாறு அமைதி காக்கின்றனர்.

சங்கர திக்விஜயத்தில் மருத்துவர்களைப் பற்றிய குறிப்புகள்: அபிநவகுதன் என்பவன் மந்திரத்தால், ஏவல் செய்து ஆதிசங்கருக்குக் கொடிய நோயை உண்டாக்குகிறான். அந்நிலையில், முதலில் தனது நோயைக் குணப்படுத்த மருத்துவர்களின் சிகிச்சையை மறுத்தாலும், பிறகு ஒப்புக் கொள்கிறார். அப்பொழுது, கீழ்கண்ட விவரங்கள் தரப்படுகின்றன:

  1. நோய் என்பது முந்தைய ஜென்பங்களில் செய்த காரியங்களின் பலன் (இப்பொழுது ஜீன்கள் தாம் காரணம் என்று கூறுகின்றனர்). ஆகையால் இஜ்ஜென்மத்தில் அனுபவிக்கவேண்டிய நோய்களை தவித்தால், அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டியிருக்கும் (16-9).
  2. நோய்முறைகளை அறிந்தவர்கள் கூறுவதாவது, நோய் இரண்டுமுறைகளில் வருகின்றன.

i.      பழைய காரியங்கள், ஒருவர் கடந்த காலத்தில் செய்த காரியங்கள்.

ii.      எந்திரியங்களின் கட்டுப்பாட்டை மீறி செய்த காரியங்கள்.

முன்னதை கடந்த காரியங்களின் விளைவுகள் அழித்துதான் குணப்படுத்த முடியும், பின்னதை மருந்து மூலம் குணப்படுத்தலாம் (16-10).

  1. எனக்கு வந்துள்ள நோயை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும். அதனால் நான் எந்தவிதமான சிகிச்சையும் பெறவிரும்பவில்லை. இதனால் நான் இறந்தாலும் பரவாயில்லை (16-11).
  2. இந்த நாட்டில் மருத்துவர்கள் அதிகமாக இல்லை. ஆனால் நோயாளிகளோ அதிகமாக உள்ளார்கள். அதனால் நோய்களைப் போக்க அவர்கள் உங்களைத் தேடி அலையும் போது, நீங்கள் அங்குபோக வேண்டும்”, என்று மருத்துவர்களுக்கு அறிவுருத்துகின்றார் (16-24).
  3. நோயாளிகள் நோய்களை உண்டாக்கிக் கொண்டதற்குக் காரணமாக இருந்தாலும், அவர்களைக் காக்கவேண்டிய பொறுப்பு மருத்தவர்களுக்குள்ளது. அது அவர்களுக்குக் கடமையாகிறது. மருத்துவர்கள் அத்தகையவராக இல்லாவிட்டால், அவர்கள் மருத்துவர்களாக இருப்பதே பிரயோஜனமில்லை, அவர்கள் பிறந்ததும் வீணே. ஏனெனில் மருத்துவர், விஷ்ணுவைப் போலாகிறார், அதாவது அவர் எல்லோரையும் காக்கிறார்” (16-25).

இவையெல்லாம் இக்கால மருத்துவ ஒழுங்குமுறை, வைத்திய-நீதிமுறை, கட்டுப்பாடு, தரநிர்ணயம் போன்ற விதிகளைப் போன்றுள்ளன.

ஆதிசங்கரர் அரேபியாவிற்கு எப்பொழுது சென்றிருப்பார்?: சங்கர விஜயத்தின்படி, ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு போதித்தாக உள்ளது.  ஆனால், அவருக்கு இரண்டு தேதிகள் கொடுக்கப்படுகின்றன –

  1. 509-477 BCE காலம்.
  2. 788-820 CE காலம்.

இதிலும் 1200 வருடங்கள் வித்தியாசம் வருவதைப் பார்க்கலாம். சரித்திர ஆசிரியர்கள் 788-820 CE தேதியைப் பரவலாக ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படியென்றால் இக்காலத்தில் அவர் அரேபியாவிற்கு சென்றிருக்கவே முடியாது. ஏனெனில், இஸ்லாம் அப்பொழுதுதான் உச்சக்கட்டத்தில், பலநாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. முகமதியர்கள் தங்களது படைகளுடன், மற்ற நாகரிகங்கள் மீது படையெடுத்துச் சென்று அழித்து வந்தனர். எனவே அக்காலத்தில் அவர் அங்கு சென்றால் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. எனவே, 509-477 BCE காலத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால், அத்தகைய வாய்ப்புள்ளது. ஏனெனில், அப்பொழுது, மற்ற மதத்தலைவர்கள், ஞானிகள், தத்துவஞானிகள் முதலியோர், மற்ற நாடுகளுக்குச் சென்று வந்ததாக உள்ளது. பைதாகோரஸ் போன்றோர் இந்தியாவிற்கு வந்துள்ளபோது, ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்றதில் ஒன்றும் வியப்பில்லை. மேலும், அங்கிருந்த இந்துக்கள், விக்கிர ஆராதனையாளர்கள், காஃபிர்கள் அவரை வரவேற்று உபசரித்திருப்பர். அப்பாஸித் காலத்தில் சமஸ்கிருத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டார்கள் என்பதனை நினைவு கூரத்தக்கது. அதாவது 500 BCEலிருந்து 700 CE வரை – 1200 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால், அதற்குப் பிறகு, முகமதியர் இந்துக்களுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

23-09-2012


[1] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.lxiv.

Hered and sixty idols,  were ranged the three hundred idols, one of each day, round the great god Hobal, carved of red agate, two ghazalas, gazelles of gold and silver,and the imageof Abraham nd of his son. Here the tribes came, year after year, “to kiss the black stone which had fallen from heaven in the primeval days of Adam, and to make the seven circuits of the temple naked.”.

[2] 600ல் வெள்ளத்தினால் காபா அழிக்கப்பட்டதால், திரும்பவும் குரேஷி மக்கள் கட்டினர். 605ல் இது புனர்நிர்மாணம் செய்து கட்டப்பட்டது என்றும் உள்ளது.

[3] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.108.

[4] Muhammad Alshareef,  A Woman’s Guide To Hajj full article can be read or downloaded from here:
http://www.performhajj.com/women_guide_to_hajj.php

[5] Muhammad Alshareef,  A Woman’s Guide To Hajj full article can be read or downloaded from here:
http://www.performhajj.com/women_guide_to_hajj.php

[6] எட்டாவது நூற்றாண்டில் அரேபியர் சிந்துமாகாணத்தை வெற்றிக் கொண்டு, 12ம் நூற்றாண்டில் தில்லி வரை நுழைந்தனர். 16ம் நூற்றாண்டில் வடவிந்தியா முழுவதையும் ஆதிக்கத்தில் கொண்டு வந்து 18ம் நூற்றாண்டுகளில் (1707ல் ஔரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு) தென்னகத்தில் அவர்களுடைய பிரதிநிதிகள் என்றமுறையில் நவாப்புகளின் ஆட்சி ஏற்படுத்தப் பட்டது.

[7] Journal of Royal Asiartic Society, 1904, p.209.

[8] R. C. Majumdar, The Age of Imperial Unity, Bharatiya Vidhya Bhawan, Bombay, p.633.

[9] W. H. Siddiqi, India’s Conribution to Arab World, in India’s Contribution to World Thought, Vivekananda Kendra, Madras, 1970, pp.577-588.

[10] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, pp.498-497.

[11] சிந்துபாத், ஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகள் எல்லாம் இந்தியக்கதைகளைத் தழுவி, மாற்றி இக்காலத்தில்தான் எழுதப்பட்டன.

[12] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.32; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.

O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.73.

[13] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.33; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.

O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.74.

[14] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.41; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.

O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.75.

[15] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, pp.70-71.

[16] H. G. Wells, The Outline of History, Cassel & Co., U.K, 1932, p.603.

[17] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.235.

[18] Firdaus-ul Hikamat of Ali B. Rabban-al-Tabari, B.D.M.H, 1963, 1, 1, p.26.

[19] K. V. Subbaratnam (Trans.), Madhaviya SrimacCankaradhikviya, Akhila Bharata Sankara Seva Samiti, Vani Vilas Press, Sri Rangam, 1972,  Chapter.XV, verses.142-143.

[20] K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Sri Vani Vilas Press, Sri Rangam, 1987, p.24.

Based on “Vimarsa”, in which it has been mentioned that Sankara visited Arabia through sky and stood poised in the sky for 64 days and taught threefold Vedic Wisdom of Karma, Upasana and Jnana to the yogins who lived there that these instructions were given in the Arabic language and recorded verbatim by the disciples yogins and that these records form the Holy Quran!

[21] ஸ்ரீவித்யாரண்யர், ஸ்ரீமச்சங்கராதிக்விஜயஹ (ஸ்ரீமாத்வீய ஸ்ரீமச்சங்கராதிக்விஜயஹ), அகிலபாரத சங்கர சேவா சமிதி, ஸ்ரீவாணிவிலாச முத்ரரலய, ஸ்ரீரங்கம், 1972.

Posted in அஜப், அரபஸ்தான், அரபி, அரபு, அரப், அரவர், அரவவாடு, அரவஸ்தான், அரேபியம், அரேபியா, அல்-ரப், அல்லா, அஸ்வினி, அஸ்வினி குமாரர், ஆயுள், இந்திரன், இந்த்ரசீல், இஸ்லாம், உடல், உயிர், காஃபிர், காபத்துல்லா, காபிரிஸ்தான், காபிர், குதிரை, சத்ரபி, சல், சாத்தான், சித்தாந்த், சிந்து, சிந்த், சிந்த்-ஹிந்த், சூபி, சூபித்துவம், துருக்கர், துருக்சாஸ், துருக்ஸாஸ், துலுக்கர், நசாத்தியா, நபி, நூரிஸ்தான், நூர், பலூச்சிஸ்தான், போகாஸ்கோய், மக்பி, மணி, மிட்டானி, மிட்டானியர், மித்திரன், மித்ரசீல், முகமது, முஸ்லீம், ரப், ரப்பா, ரப்பி, ராவுத்தன், லப்பை, வருணன், வருணாசீல், ஸல், ஹஜ், ஹஜ் பயணம், ஹலால், ஹிட்டைட், ஹிட்டைட்டவர், ஹிந்தானி, ஹிந்த், ஹிந்த்-சிந்த், ஹிந்த்ஸா, ஹீரத் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 Comments »

இஸ்லாமிற்கு–நபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

இஸ்லாமிற்குநபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

இந்தியசரித்திரத்தைப்புரட்டிஅல்லதுதவறாகஎழுதிமற்றநாட்டுசரித்திரங்களைஅறிந்துகொள்ளமுடியாது: கிரேக்கர்களுக்கு முன்பு (c.1800 – 327 BCE) – பின்பு (326 – 100 BCE) எப்படி இந்திய சரித்திரம், மேனாட்டவர்களால் புரட்டப்பட்டதோ, அதாவது இந்திய சரித்திர உண்மைகளைத் திரித்து மேனாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சரித்திரத்தை எழுதிகொண்டார்களோ, அதேபோல, அரேபியர்களுக்கு முன்பு (100- 712 CE) -பின்பு (712 – 1707 CE) என்றும் இந்திய சரித்திரம் புரட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது[1]. முஹமது நபிக்கு (570-632 CE) முன்பிருந்த அரேபிய சரித்திரத்தை மறைத்து உண்மைகளை அறியமுடியாது. இந்தியாவிற்கும், அரேபியாவிற்கு அல்லது அரபிஸ்தானத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்தால் தான் ஆன்மீகரீதியில், மருத்துவரீதியில், விஞ்ஞானரீதியில் உண்மைகளை அறியமுடியும். அரேபியாவில் இருந்த சித்தர்களை அறியவேண்டுமானால், இஸ்லாம் பிறப்பதற்கு முந்தியுள்ள – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கிரேக்கமருத்துவர்களால்அலெக்சாந்தரைஏன்காப்பாற்றமுடியவில்லை?: இந்தியாவின் சரித்திரமே 327-326 BCEலிருந்துதான் ஆரம்பிக்கிறது, அதுதான் இந்திய சரித்திரத்தின் உறுதியான, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பகாலம் என்றனர்[2]. ஆனால் 327-326 BCE என்பது அலெக்சாந்தர் பாரதத்தின்மீது படையெடுத்துத் தோற்று, கிரேக்கத்திற்கு திரும்பச் செல்லாமலே வழியிலேயே 323 BCEல் பாபிலோனியாவில் இறந்து போன காலத்தைக் குறிக்கிறது[3]. அதாவது ஈட்டிக் குத்தி காயப்பட்டு, ரத்தப்பெருக்கு ஏற்பட்ட அலெக்சாந்தரை, தலைசிறந்த கிரேக்க மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் 10 நிர்வாண சாமியார்களைப் பிடித்தபோது, ஒரு சாமியார் பூமியின்மீது தனது காலை உதைத்து சைகை செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது, அவனது கிரேக்க அறிவுரையாளர்கள்[4], “நீங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவாய்”, என்று உருவகமாகக் கூறுவதாக விளக்கம் அளித்தபோது, கோபம் கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன[5]. அதாவது இந்தியத் துறவிகளை அந்த அளவிற்குத் துன்புறுத்தியுள்ளான். ஞானத்தை அறியவேண்டுமானால், ஞானிகளிடம் பணிவாக இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதிகாரத்தினால், ஆணவத்தினால், பனத்தினால் ஞானத்தைப் பெறமுடியாது. அவற்றால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், சீக்கிரமாகவே அத்தகைய வசதிகள் அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

சுமார் 1450 BCEயில்அரேபியாவிற்குவடமேற்கில்வேதமதம்இருந்தது: சித்தர்களைத் தேடும் முயற்சியில், கிரேக்கத்திற்குப் பிறகு அரேபியாவிலும் தேடவேண்டியுள்ளது. கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் தரைவழியாக போக்குவரத்து துருக்கி, மெசபடோமியா (இராக்), பாரசீகம் (இரான்), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), சிந்து (பலுச்சிஸ்தான், பாகிஸ்தான்) முதலிய நாடுகளின் வழியாக இருந்து வந்தது. துருக்கி-மெசபடோமியா பகுதிகளுக்குக் கீழ் அரேபியா-அரேபியதீபகற்பம் உள்ளது. அங்குள்ள மக்களும் அங்கிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தங்களது வாழ்க்கையினை தவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். போகோஸ்காய் (Bogazkoi, Turkey) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, மிட்டானிய (Mittanians) மற்றும் ஹிட்டைட் (Hittites) மக்கள் “இந்திரசீல்மித்ரசீல்வருணசீல்நசாத்யா” என்ற கடவுளர்களை தமக்குள் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு சாட்சிகளாக இருக்குமாறு விளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற கடவுளர்களான தேஷுப் (Teshup) மற்றும் ஹெபா (Hepa) என்கின்றவர்களையும் சேர்த்து வேண்டுகிறார்கள்[6]. அதாவது அக்காலத்தில், அந்த இடத்தில் அத்தகைய சமரசம் மிட்டடனிய-ஹிட்டை மக்களிடம் இருந்துள்ளது. இக்கல்வெட்டு சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாய்வு நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அக்கடவுளர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.

அரேபியாவின்வடக்கில்இரானில்இருந்தமக்கள் (சுமார். 2500-2000 BCE): இதைத்தவிர, இந்ததஸு, இந்தபீபி, இந்தத்து, ஹிந்தியன், எனபல் பெயர்கள் இப்பழமையான நாகரிகங்களில், அரசர்களுக்கு, படைத்தளபதிகளுக்கு, நதிகளுக்கு, இடங்களுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர்[7]:

  1. இந்ததஸு/இந்தாஸு – ஊர்- III காலத்தைச் சேர்ந்த அரசன்[8].
  2. ஷிருக்-து, இந்தாஸு வரையில் வெற்றிக் கொள்ள விரும்பினான்[9].
  3. ஷாமஸ்-ஷும்-உகின் என்ற அரசனை இந்த்பீபி என்ற தளபதி வென்றான்[10].
  4. ஷுதுர்-நஹுந்தே, இந்தததாவின் மைந்தன்[11].
  5. இந்தத்து – இஷின் என்ற நநட்டின் அரசன்[12].
  6. ஹிந்தியன்– மெசபடோமியயவில் பபயும் ஐந்து நதிகளில் ஒன்று, இதன் மறுபெயர் ஜுரேஹ்[13].
  7. ஹிந்தாரு – சர்கோன் என்பவன், கம்புலு மக்களின் இடங்களை வென்றான். அவற்றுள் ஒரு இடத்தின்பெயர்[14].

எனவே, அரேபியாவிற்கு வடக்கில் அத்தகைய வேதமதத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லது வேதமதக் கடவுளர்களை அறிந்தவர்கள் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஜைனர்கள் அப்பகுதிகளில் சென்ற தேதியை ஒத்துள்ளது.

அரேபியாவின்வடக்கிழக்கில்சுமார் 3000 BCEல்மருந்துமூலத்திரவியத்தொகுப்பு (Phamacopoeia): சுமேரிய நாகரிகத்தை ஆய்ந்தவர்கள், சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உண்டாக்கப்பட்டது, என்கிறார்கள்[15].  ஆனால், சிந்துசமவெளி மருத்துவத்தைப் பற்றி அடக்கி வாசிக்கிறர்கள். கேட்டால் அவர்கள் சரித்திர-ககலத்திற்கு முந்தையவர்கள் என்கிறார்கள்[16]. கியூனிபாம் எழுத்துகளின் (Cuniform tablet) மண்பலகைகள் கிடைத்திலிருந்து, அவற்றைப் படித்து, அவர்கள் இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர். அவை முழுமையாக இல்லாததினால், முழுவிவரங்களை பெறமுடியவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்மருத்துவத்தின் தேவதை பௌ (Bau), நினிசின்னா (Ninisinna) மற்றும் குலா (Gula) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அம்மருந்து தயாரிப்பில் உபயோகப்படும் ரசாயனப் பொருட்கள் – உப்பு (Sodium Chloride), வெடியுப்பு (Salt peter – Poataasium nitrate).  மற்றவையெல்லாம் மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் முதலியன. பொட்டாசியம் நைட்ரேட் பெறும் முறை எகிப்தியர் மற்றும் இந்தியர்களுக்குத் தெரியும் என்று அவர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்[17]. அப்படியென்றால், சிந்துசமவெளி மருத்துவத்திற்குண்டான மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) இருந்ததா, இல்லை காணாமல் போயிற்றா, இல்லை கண்டெடுக்கப்பட்டும் மறைக்கப் பட்டதா?

மேற்கே எழுத-படிக்கத் தெரிந்த ஆரியர்கள் பாரத்ததிற்கு வந்ததும் படிக்கத்தெரியாமல் போய்விட்டார்களா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விஷயங்களை ஆராயவேண்டியுள்ளது.

  1. சுமார் 1450 BCEயில் அரேபியாவிற்கு வடக்கில் வேதமதம் இருந்தது.
  2. இரானில் இருந்த மக்கள் (சுமார். 2500-2000 BCE)
  3. சுமார் 3000 BCEல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia)

அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 1450 BCEயில் வேதமதம் இருந்து, சுமார். 2500-2000 BCEல் அவர்கள் பெயர்கள் மட்டும் இருந்து, சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உருவாகிறது எனும்போது, அதிலுள்ள காலக்கணக்கியல் உறுத்துகிறது, உதைக்கிறது மற்றும் முரண்பபடாகத் தோன்ருகிறது. ஏனெனில், ஆரியர்கள், இந்தோ-ஆரியர்கள் போன்றோர், மேற்கிலிருந்து, கிழக்கில் வந்து இந்தியாவில் புகுந்தனர் என்றால், அத்தேதிகள் எப்படி 1450 BCE – சுமார். 2500-2000 BCE – சுமார் 3000 BCE என்றிருக்கும்? இந்தியாவில் நுழைந்த ஆரியர்களின் காலம் 1500-1000 BCEல் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அக்காலக்கணக்கீடு BCE – சுமார் 3000 BCE – சுமார். 2500-2000 – 1450 BCE என்றுதான் இருக்கவேண்டும் அப்பொழுது இந்தியாவில் நுழைந்த காலம் 1500-1000 BCEயுடன் ஒத்துப்போகின்றது. இல்லையென்றால், ஆரியர்கள் இந்தியயவிலிருந்து வெளியே சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களின் காலம் சுமார் 3000 BCEற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். அதாவது, கிழக்கில் படிக்கத் தெரியாதவர்களாக இருந்து, மேற்கே செல்ல-செல்ல அவர்களுக்கு படிப்பறிவு வருகிறது என்றால், அது எந்த சித்து வேலை என்று தெரியவில்லை. இதே முறைதான், அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்தான் என்ற கதையிலும் வருகிறது.

எந்த மக்களின் நநகரிகம் தொடர்ந்து “வாழ்ந்து வரும் நாகரிகமாக” இருக்க முடியும்?: மக்களின் நீண்ட ஆயுள்காலம், ஆரோக்கியம், வளமான வாழ்வு, முதலியவைதாம் ஒரு நாகரிகம் எத்தகைய தாக்குதல்களில் சிக்குண்டாலும், எதிர்த்து மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாகரிகமாக இருக்க முடியும். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாகரிகம் இந்திய நாகரிகம் தான்[18]. இந்தியாவைவிட உயர்ந்தவை, இந்தியா அவற்றிடமிருந்து காப்பியடித்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சிறந்தது என்ற் மேனாட்டவர் பெருமை பேசி, இந்தியாவை சிறுமைப் படுத்தி வந்தாலும், அந்நாகரிகங்கள் ஏன் அப்படி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன என்று அவர்கள் விளக்குவதில்லை. ஆகவே, மேனனட்டவர்கள் எப்படி சரித்திரத்தைப் புரட்டியிருக்கிறார்கள்-தலைகீழாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரேபியர்கள் முகபதியர்கள் ஆனவுடன், அதேபோல பழைய பழக்க-வழக்கங்களை மமர்ரியமைத்திருக்கிறார்கள்.

பாலியல், ரசவாதம், ஆயுள்நீட்டிப்பு: கிரேக்கமதம் இந்துமதத்தை ஒத்திருந்தாலும், ஜைனர்களால் அது பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, உருமாற ஆரம்பித்தது. பைதாகோரஸ் போன்றோர் உண்மையான ஞானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும், மற்ற கிரேக்க சாமியார்கள் பலவித முறைகளைக் கையாண்டார்கள்.

  • எபிகுயூரியன் (342-270 BCE) என்பவரின் போதனைகள் வாழ்க்கை வாழ்வதற்கே, சந்தோஷத்திற்கே, அனுவவி ராஜா அனுபவி போன்ற கொள்கைகளில் (Hedonism[19]) இருந்தது.
  • சிம்போஸியத்தில் கிரேக்கர்கள் நிர்வாணமாகப் பங்கு கொண்டார்கள் என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.
  • 4 நுற்றாண்டில் BCE பெண்-நிர்வாணமும் மறுக்கப்படவில்லை.
  • ஓரினப்புணர்ச்சி கிரேக்கர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. சோடோமி (Sodomy) என்பது ஆண்களுக்கிடையிலுள்ள ஓரினப்புணர்ச்சி[20].
  • இதைத்தவிர ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்றுள்ள அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களும் இருந்தார்கள்[21]. ஆண்களுக்கு பெண்களின் உறுப்புகளும், பெண்களுக்கு ஆண்களின் உருப்புகளும் உள்ள மனிதர்கள் அப்ரோடைட் எனப்பட்டார்கள்.
  • ஹெர்மாபுரோடிடோஸ் அல்லது ஹெர்மாபுரோடிடஸ் (Hermaphroditos or Hermaphroditus) ஹெர்மாபுரோடைட்டுகளின் ஆண்-தேவதை. இவன் ஹெர்மிஸ் (Hermes) மற்றும் அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களுக்குப் பிறந்தவன். எரோட்டுகள் (Erotes) என்ற தேவதைகளுள் சேர்க்கப்பட்டுள்ளான்.
  • பெரும்பாலான காமம், கொக்கோகம், பாலியல் முதலியவாற்றில் உபயோகப்படுத்தப்படும் சொற்கள் கிரேக்கத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளன – ஈராஸ் = Eros (Love), ஆசை / காமம் (Himeros =Desire), பெருங்காமம் (Pothos =Passion), காமவெறி (Voluptas = sez-raged.
  • வீனஸ் என்ற தேவத்தையிலிருந்து பெறப்படும் இச்சொற்கள் காதல், உடலுறவு, பாலியல், பாலியல் நோய்கள், மருந்துகள் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன[22].
  • அரிஸ்டாடில் ஆலிவ் எண்ணையை கர்ப்பத்தைத் தடுக்கும் களிம்பாக உபயோகப்படுத்தலாம் என்று 4 BCEயில் கூறினார்.
  • ஹெர்மிஸ் (Hermes) என்பவன் தான் ரகசிய சித்தாந்தங்கள், ரசவாதம் முதலியவற்றிற்கு தேவன்[23]. அதாவது கிரேக்கர்களைப் பொறுத்தவரைக்கும், காமம் ரசவாதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • ஓவிட் (Ovid) மற்றும் லூசியன் (Lucian) போன்றோரது கொக்கோக-காமக்களியாட்ட இலக்கியங்கள், அவர்களது கிரக்கத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.
  • இதைத்தவிர பாலியல், உடலுறவு செய்முறை நூல்களும் பெருகின[24].

மேலே குறிப்பிட்ட ஒன்றொன்றிற்கும் அக்கால சிற்பங்கள், ஓவியங்கள், உலோக விக்கிரங்கள் முதலியவை உலக பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களில், அருங்காட்சியகங்களில் உள்ளன. கிரேக்கர்களைப் பின்பற்றி வந்த ரோமானியர்களில் இவ்விஷயங்களில் சளைத்தர்கள் அல்லர்[25]. அதிக உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும்; அதிக பெண்களிடம் உடலுறவு கொண்டால் ஆயுள் பெருகும்;  கன்னிகளுடன் உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும், என்று தவறான பல கருத்துகள் உருவானதால், அத்தகைய தீய இலக்கியங்கள் உருவாகின, சமூகமும் சீரழிந்தது. கிரேக்க ரசவாதம் இப்படி பாலியில் உருமாறி, உருக்குலைந்ததற்குக் காரணம் அவர்கள் ஜைனர்களின் முறைகளை துஷ்பிரயோகம் செய்தது தான். இதனால் மந்திர-தந்திர-யந்திர போன்ற சடங்குகள் அங்கும் கடைபிடிக்கப்பட்டன என்று தெரிகிறது. ஆனால், அவை பாலிய ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் பலவித பாலியல் திரிபுகள் ஏற்பட்டன.

வெள்ளையாடைஅணிந்தமற்றசாமியார்கள் / சந்நியாசிகள்: வெள்ளையாடையை அணிந்த எஸ்ஸென்ஸ் (Essences), ஞாஸ்டிக் (Gnostic), மணிக்கியர் (Manichaeans) போன்றோர் பிரமச்சரியம், ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிவற்றைப் பின்பற்றினர். பின்னர் வந்த மணி (216-276 CE) என்பவரோ, இல்வாழ்க்கை வேண்டாம், திருமணம் வேண்டாம் என்றெல்லாம் போதித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், மணி பாரசீகத்தில் துறவரம் கடைப்பிடித்த ஆசாரமான யூதகுடும்பத்தில் பிறந்தவர். பன்னிரெண்டு வயதில் ஞானம் பெற்று, போதிக்க ஆரம்பித்தார். கிழக்கில் பாரதம் வரையில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு மத்திய ஆசியா சென்று மெடபடோமியா, சிரியா, இஸ்ரேல் வழியாக அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். ஆனால் இவரது போதனைகள் ஒவ்வாததனால், அங்கிருந்த பஹ்ரம் – I (Bahram – I 273-276) இவரை 276ல் தூக்கிலிட்டான். இருப்பினும், மணியுடைய பிரமச்சரியக் கொள்கைகள் மேற்கில் எகிப்து, ரோம், இங்கிலாந்து மற்றும் கிழக்கில் சைனா வரை பரவியது[26].

300-500 காலத்தில் இதன் தாக்கம் இருந்தது. கிரேக்க-ஜைனர்களில் அளவிற்கு மீறிய பாலியல் தீமைகள், கொடுமைகள் மற்றும் குற்றங்கள், இவற்றை எதிர்த்து, திருத்தத்தான், இம்மதம் மக்களிடம் வேகமாகப் பரவியது எனலாம். இதேபோல ஞாஸ்திக மதத்தின் (Gnosticism) தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இதன் மூலங்களை மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரியாது அல்லது ஒருக்கின்ற யூதமதத்திலிருந்துதான் தோன்றியது என்று வாதிட்டாலும், ஜைனர்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. அதாவது, 1450 BCEல் இருந்த வேதமதத்தை மறந்துவிட முடியாது.

அரேபியாவியாவைச்சுற்றியிருந்தவேதமதம்: அரேபியைச் சுற்றியிருந்த வேதமதம் அரேபியாவிற்குள் நுழையவில்லை என்றாகாது. இஸ்லாம் வரும்வரை அங்கிருந்த மக்கள் அநாகரிகமாக, பாகன்களைப் போலிருந்தார்கள் (Pagans, Barbarians) என்று சொல்வது சரித்திரப் பொய்யாகும். 1450 BCEலிருந்து 650 CE வரை அப்படியே இருந்தார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய பொய் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலேயுள்ள வரைப்படத்திலிருந்து சுமார் 1400 BCE காலத்தில் கானான், அமுறு, நுஹாஷே, மிட்டானி, ஹஸ்ஸுக்கன்னி, அசூர் (அசீரியா), தூர்-குரிகள்ஜு, கேசைட் (பாபிலோனியா) முதலிய மக்கள், அரேபியாவின் வடமேற்கு-வடக்கு-வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர். மேற்குறிப்பிட்ட பகுதிகள் இப்பொழுது, இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், சிரியா, இராக், இரான் என்ற நாடுகளாக உள்ளன. அவர்களது சிற்பங்களை பார்த்தால், அவை பாரதநாட்டவருடையது என்று எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது[27]. அவ்விடங்களின் பெயர்கள் – ஏயில்காயா, நிஸந்தா, அம்பர்லிகாயா, புயுக்காயா, ஹத்துஸா, போகாஜ்கோய் என்றுள்ளன. ஆகவே, அரேபியர் தனித்து வேறு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு கொண்ட மக்களாக இருந்திருக்க முடியாது. அரேபியாவில் கிடைத்துள்ள அகழ்வாய்வுப் பொருட்கள், சிற்பங்கள், பாத்திரங்கள் முதலியனவும் மேற்குறிப்பிட்ட மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுக் காரணிகளுடன் ஒத்துப் போகின்றன. ஆகவே, அங்கு சக்தி-சிவன், சிவ-சக்தி, மும்மூர்த்தி, மூன்றுதேவதைகள் முதலியவர்களின் வழிபாடு இருந்துள்ளது வியப்பாக இல்லை.

இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் ஒவ்வொன்றாக வளர்ந்து வரும் போது பழைய நாகரிகங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. 670 BCEல் அசீரியர் எகிப்தை வென்றனர்.  356-323 BCE காலத்தில் எகிப்தை அலெக்சாந்தர் வென்று, தனது தளபதி டாலமியை அரசனாக்கினான். 30 CE காலத்தில் ரோமர்களால், கிரேக்கம் மற்றும் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டன. இப்படி அம்மக்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதால், பாபிலோனியர் (Babylonians), அசீரியர் (Assyrians), சால்டியர் (Chaldeans), அராமியர் (Araamaeans), போனீஷியர் (Phoenecians), முதலியோரது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியன அம்மக்களோடு மறைந்து வெறும் கதைகளாகி விட்டன. இருப்பினும், அங்கிருக்கும் மக்கள் சில பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள் முதலியற்ரைத் தொடர்ந்து நடத்திவருவதால், அவற்றிலிருந்து அந்த பழைய கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

© வேதபிரகாஷ்

21-09-2012


[1] வின்சென்ட் ஸ்மித், ஜான் பிளீட் போன்றோர்அலெக்சாந்தர் பாரத்தத்தின்மீது படையெடுத்த 327-326 BCE காலத்திலிருந்து தான் இந்திய சரித்திரம் ஆரம்பிக்கிறது, அதற்கு முன்னர் இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை என்ற அடிப்படையில் எழுதி வைத்த சரித்திரத்தைத் தான், இப்பொழுதும் இந்தியர்கள் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கின்றனர். அலெக்சாந்தர் காலத்தில் பாரத்தை ஆண்டது குப்தர் வம்சத்தின் சந்திரகுப்தர் இல்லை, மௌரியர் வம்சத்தின் சந்திரகுப்தர் என்று திரித்ததால் 1200 வருட இந்திய சரித்திரம் சுருக்கப்பட்டது. இதனால் தான் இந்திய சரித்திரத்தில் பல புதிர்கள் உண்டாயின. புரிந்து கொள்ளாதோர் புதிய விளக்கங்கள் கொடுத்து, உள்ள சரித்திரத்தையே புரட்டிவிட்டு, அதற்கும் ஒரு முறையை உண்டாக்கி குழப்பியுள்ளனர்.

[2] The British history writers arbitaratily declared that “The Alexander’s invasion is is the sheet anchor of Indian history”, without any authority.

[3] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and their Influence on India, www.hinduwebsite.com

[4] Arrian.viii, 1.5 ff.

[5] McCrindle, The Invasion of India by Alexander the Great as described by Arrian, Quitus Curtius, Diodorus, Plutarch and Justin, London, 1896.

[6] George Roux, Ancient Iraq, Penguin Books, U.K, 1980, p.218.

[7] D. T. Potts, The Archaeology of Elam – Formation and Transformaton of an Ancient Indian Iranian state, Cambridge University Press, UK, 1999, p.

[8] Indassu – name of an ensi of Zabshali in the Ur III eriod, p.168.

[9] Shiruk-tuh wanted to conquer upto Indassu, p.141.

[10] Indabibi – name of a general who overthrown Shamash-shum-ukin, p.282

[11] Shutur-Nahhunte, son of Indada, p.303.

[12] Indattu – king of Isin, p.148.

[13] Hindian – one of the five rivers flowing in Mesopotomia, otherwise mentioned as Zuhreh, p.15.

[14] Hindaru – a place conquered by Sargon, of the Gambulu tribe.

[15] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.60-64.

[16] இப்பொழுது புரோட்டோ ஹிஸ்டரி (Protohistory) என்ற சொல்லை உபயோகித்ததலும், மனங்களில் பிரி-ஹிஸ்டரி (pre-history) என்ற கருத்தை வைத்துக் கொண்டுதான் படிப்பறிவு இல்லாத ஹரப்பன்கள் (Illiterate Harappans) என்று அந்த மேனனட்டு அறிவுஜீவிகள் கூறிவருகின்றன. நமது திராவிட கூட்டங்களும் அடிவருடிக் கொண்டு, பட்டங்கள் கொடுத்து பபராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கின்றன.

[17] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.62-63

[18] சீன நாகரிகமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த இரு நாகரிகங்கள் தாம் தொடர்ந்து இருந்து வருகின்றன, மற்றவை மறைந்து விட்டன.

[19] Hedone was the spirit (daimona) of pleasure, enjoyment and delight. As a daughter of Eros (Love) she was associated more specifically with sensual pleasure. Her opposite numbers were the Algea (Pains). The Romans named her Voluptas.

[20] Sodomy, sodomites inhabitants of Sodom. Male homosex.

[21] Hermaphroditism = human being having both man and animal characteristic, nymph Solmacts

[22] Aphrodite = Aphrodiastic venereal, drug producing venereal disease,

Aphrodiasiac, aphrodisios, aphrodite = derived from Venus, the goddess of love etc.

[23] Hermes = author of mysterious doctrines, ecrets of alchemy

[24] Twleve Arts of the Actions of Love, Ovid’s Arts Amatoria etc are covered under “Classical literature”.

[25] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982.

[26] Richard Foltz, Religions of the Silk Road, St. Martin’s Press, New York 1999.

[27] கூகுள் தேடலில் – Yazilkaya, Nisantas, Ambarlikaya, Mihraplikaya, Büyükkaya, Hattusha, Boğazköy – என்ற வார்த்தைகளை தட்டெச்சு செய்தால் அச்சிற்பங்களைப் பார்க்கலாம்.

Posted in அப்ரோடைட், அரேபியா, ஆகாயம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், இந்தியவிரோதிகள், இந்தியா, உடல், உயிர், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், கஜகிஸ்தான், கண், கத்தி, கனிமம், கம்பளி, கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காபாலிக, காமாக்கியா, காயம், காற்று, கிர்கிஸ்தான், கை, சக்தி, சடங்குகள், சட்டைமுனி, சம்பிரதாயங்கள், சஹஜயான, சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சுத்தம், சூபி, சைனா, சைவம், ஞானம், ஞானி, தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், துர்க்மேனிஸ்தான், துறந்தவர், துறவி, நாகரிகம், நாட்டு மருத்துவம், நாத்திகம், நிம்மதி, நிர்வாணம், நீர், நுண்ணிய அறிவு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை வைத்தியர், பாதரசம், பாரதம், பாரம்பரியம், பாலியல், பித்து, போகோஸ்காய், மத்திய ஆசியா, மந்திரம், மனச்சிதைவு, மனம், மருந்து, முஹம்மது கஜினி, யோகா, விழாக்கள், வேதம், ஹெர்மாபுரோடிடோஸ், ஹெர்மிஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

இடைக்காலத்தில் தோன்றிய சைவசித்தாந்தத்திலும், சித்து, சித்தி முதலிய வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கும் இந்த சித்தர்களும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவஞான சித்தியாரை, “சித்தர்” என்றோ, “”சித்த மருத்துவர் யாரும் கூறவில்லை. ஆகவே, சித்தியாரை சித்தராக்க முடியாது. சித்தாந்தத்தில் உள்ள சித்தி, இங்குள்ள சித்தியோடு ஒப்பிட முடியாது. பஞ்சபூதத் தத்துவம், திரிதோஷம், ஆறு சக்கரங்கள், பிரணாயாமம், யோகா முதலிவற்றை ஏற்காமல் இருந்தால், அவை சைவசித்தாந்தத்தில் இருக்க முடியாது. வேதத்தின் அந்தத்தை, முடிவை பெறும் முயற்சி போல, சித்தாந்தி – சித்தின் முடிவை – ஞானத்தின் முடிவை அறிய விரும்பினார்கள். சிவனை மறுக்கும் சித்தாந்தம் இருக்க முடியாது, அதுபோலவே சித்தர்களும் இருக்கமுடியாது. ஆகவே, “கடவுளை எதிர்க்கும், மறுக்கும் நாத்திகவாதிகள் சித்தர்கள்” என்பது பொய்யான வாதமாகிறது. திருமூலரே ஆத்திகவாதியாக இருந்து, வேத-புராணங்களை ஏற்றுக் கொண்டு, சிவபக்தராக இருந்தும், மும்மூர்த்திகளின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு, மந்திரம்-யந்திரம்-தந்திரம் முறைகளை தகவமைத்துக் கொண்டுதான் சித்தராக இருந்தார். அப்பொழுது, திருமூலரின் சித்தாந்தத்தை மறுத்து, சைவ சித்தாந்தத்தையும் வெறுத்து “சித்தர்கள்” இருக்க முடியுமா? அவர்கள் “சித்தர்கள்” ஆவார்களா?

சித்தமருத்துவ நூல்கள் தமிழ் சித்தர்களால் எழுதப்பட்டவையா?: சித்தர்களின் பெயர்களில் பற்பல மருத்துவ நூல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்தர் பெயரின் பின்னால் சாத்திரம், காண்டம், வைத்தியம், தந்திரம், சூத்திரம் என்றும், எண்கள் – 10, 20, 50, 100, 1000 என்றும் சேர்த்துக் கொண்டு பல நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் குறைவாகவே கிடைக்கப் பெற்றுள்ளன. தாதுக்கள், உப்புக்கள், கனிமங்கள் முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும் போது அவையெல்லாம் 19 அல்லது 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று நன்றாகத் தெரிகிறது. ஏனெனில் அதற்கு முன்பு, அவற்றிற்கு அத்தகைய சொல் பிரயோகங்கள் இல்லை.

அகத்தியர் ஐந்து சாத்திரம்,
அகத்தியர் கிரியை நூல்,
அகத்தியர் அட்டமாசித்து, ,
வைத்திய ரத்னாகரம்,
வைத்தியக் கண்ணாடி,
வைத்தியம் 1500,
வைத்தியம் 4600,
செந்தூரன் 300,
மணி 400,
வைத்திய சிந்தாமணி,
கரிசில்பச்யம்,
நாடி சாஸ்திரப் பசானி,
பஸ்மம்200,
கர்மவியாபகம்,
அகத்தியர் சூத்திரம் 30,
அகத்தியர் ஞானம்
திருமூலர் சல்லியம் – 1000
திருமூலர் வைத்திய காவியம் – 1000
திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
திருமூலர் தீட்சை விதி – 18
திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
திருமூலர் ஆறாதாரம் – 64
திருமூலர் பச்சை நூல் – 24
திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100.
போகர் – 12,000
சப்த காண்டம் – 7000
போகர் நிகண்டு – 1700
போகர் வைத்தியம் – 1000
போகர் சரக்கு வைப்பு – 800
போகர் ஜெனன சாகரம் – 550
போகர் கற்பம் – 360
போகர் உபதேசம் – 150
போகர் இரண விகடம் – 100
போகர் ஞானசாராம்சம் – 100
போகர் கற்ப சூத்திரம் – 54
போகர் வைத்திய சூத்திரம் – 77
போகர் மூப்பு சூத்திரம் – 51
போகர் ஞான சூத்திரம் – 37போகர் அட்டாங்க யோகம் – 24
கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500
கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 3
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21,
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9

சித்தர்களே மருத்துவ நூல்களை இயற்றினார்களா அல்லது பிறகு தயாரிக்கப்பட்ட நூல்களுக்கு, அதிகாரம், ஏற்பு மற்றும் பிரபலம் முதலிய காரணங்களுக்காக சித்தர்கள் பெயர்கள் தலைப்பாக சேர்த்திடப்பட்டனவா என்று யோசிக்கவேண்டியுள்ளது.

சைவம் வடக்கிலிருந்து தெற்கில் வந்துள்ளது என்பது வீரசைவ நூல்களினின்று தெரிய வருகின்றது. அதற்கான கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் மௌரிய காலத்திற்கு முன்னாக இருந்தால் தான், இந்த வாதத்தை மறுக்க முடியும். அதாவது, உள்ள பல்லவர்காலத்து கொகைக்கோவில்கள் முதலியன அக்காலத்திற்கு முன்பாக இருந்திருந்தால், சைவத்தின் தொன்மை சங்ககாலத்திற்கு முன்பாக இருந்ததாகிறது. உண்மையில் உள்ள கல்வெட்டு, கட்டிட, சிற்பங்கள் முதலியவை நேரிடையாக தேதியிடப்படவில்லை. ஒப்பீட்டுமுறையில் தேதியிடப்பட்டுள்ளது. அந்நிலையில் சைவசித்தாஅந்தம் தோன்றிய பிறகுதான் “சித்தர்” வழக்கு வந்திருக்க வேண்டும் என்றால், அது வடவிந்திய நாதமரபிற்குப் பின்னர்தான் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இவை சித்தமருத்தப் பாடல்களா, அவற்றின் காலத்தை நிர்ணயிப்பது எப்படி?: கீழே சித்த வைத்தியர் ஒருவரால் எழுதப்பட்ட சிலபாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனையே நாதாக்க ளெல்லோருஞ் சொன்னா ரிகத்தெவர்க்கு

மிதனையே சொன்னாரியேசு கிறிஸ்து வெமதிறைவ

னிதந்தரு நாமத்தை வீணாக வுச்சரிக் கேலெனவும்

பதந்தரு நற்பரி சுத்தாவி ஞானம் படிகெனவே (297)

 

\எனவுரைத் தேவ நாமமெம்போது மியம்புகவென்றுங்

கனமுறு மிந்தனற் சத்திய வேதக் கலையுணர்ந்தோ

ரினம்பிற வாரென்றிசைத்தார் முகம்ம தெனுநபிநம்

மினமெலாம் வேதங்கீ ழாக்கி யிறந்தோ மெதிர்மறையே (298)

 

எதிராகச் செய்யு மறையோர்க் கினிப்பிறப்பில்லையென்றா

ரிதினுண்மை யெல்லா மறந்தார்கள் நூலோரெனும் பெயரின்

வதிவோ ரெலாம்பஞ்சை யானார்கள் பார்ப்பெனு மண்ணவரோ

முதிய கிழமா யிருந்திறக் கின்றார் முறையழிந்தே (299)

 

அழிந்து கெடுகின் றனர்சைவப் பேரோ ரதிகொலைசெய்

தழித்துத்தன் னான்மாவைக் சூத்திரப் பேரோரவரிடத்து

மொழியுநற் சூத்திர மில்லை கிறிஸ்தவர் முன்னுரைத்த

அழியாத தேவனன் நாம மெதுவென் றறிகிலரே (300)

 

அறிகிலட் நற்பரிசுத்தமாம் ஆவி யதுநபிமுன்

னறி வ்த்த நேர்யதி ராம்மறை யீதென் றறிதலற்று

முறையெதி ரான தவறுகள் செய்து முகம்மதியர்

நிறையற் றனருல கோரிவ் விதமென் னியாயமென்னோ (301)

 

மேலேயுள்ள பாடல்கள் எல்லாம் சித்தர்களுடைய பாடல்கள் என்று படிப்பவர்களுக்த் தோன்றலாம். ஆனால், இவை தேவக்கோட்டையைச் சேர்ந்த “வைத்தியமணி” சித.வே.ஷண்முகநாத பிள்ளை எழுதியுள்ள மீனாமிர்தம்[1] என்ற நூலில் உள்ளவை. 1887ல் பிறந்த இவர் 1947ல் இப்புத்தகத்தை வெளியிடுகிறார். அப்பொழுதே முகம்மது, ஏசு, பரிசுத்த ஆவி என்றெல்லாம் சேர்த்து எழுதியுள்ளார். இந்நூல் சித்தவைத்தியர்கள் எல்லோருக்கும், வைத்தியக் கல்லூரிகளுக்கும், பொதுவாக பூத பௌதிக தத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்தரத்தக்க சிறந்த நூல்களாக இருக்கின்றன என்று வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆகவே தமிழ் பண்டிதர்கள் அவ்வாறு எழுதக்கூடும் என்று தெரிகிறது. கிருத்துவப் பாதிரியார்கள் எப்படி தமிழ்பண்டிதர்களை வைத்துக் கொண்டு, அவ்வாறான முறையைக் கையாண்டார்களோ, அதேமுறையை “சித்தர் பாடல்கள்” உருவாக்கக் கையாண்டிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

03-09-2012


[1] சித. வே. ஷண்முகநாத பிள்ளை, உயிர் நிலைக்கலை என்னும் மீனாமிர்தம் (அருமருந்துக் கோவை சேர்ந்தது), இலக்கியப் பதிப்பகம், காரைக்குடி, 1947.

[2] சித்த வைத்திய சங்கத்தின் 13-10-1946 தேதியிட்ட கடிதத்தின்படி. சித்த வைத்திய சங்கம் (ரிஜிஸ்டர்டு), அருப்புக்கோட்டை ரோடு, மதுரை.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தந்திரம், தமிழகம், தமிழ், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, முஹம்மது கஜினி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

சித்தர்கள் பதினெட்டு என்றால் அவர்கள் பட்டியல் ஏன் வேறுபடுகிறது?: “பதினென் சித்தர்கள்” என்ற கணக்கீடு பிரபலமாக சித்தமருத்துவர்கள், சித்த-எழுத்தாளர்கள் மற்றும் சித்த-ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து வருகிறார்கள். ஆனால், அத்தகைய கணக்கீட்டிற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கும் போது, பல பட்டியல்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு பிரபலமாக மற்ற சித்த எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பட்டியல்கள் சில கீழே கொடுக்கப்படுகின்றன:

கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து நிஜானந்த போதம் அபிதான சிந்தாமணி ஏ. சண்முகவேலன்
1. கும்ப முனி
2. நந்தி முனி
3. கோரக்கர்
4. புலிப்பாணி
5. புசுண்டரிஷி
6. திருமுலர்
7. தேரையர்
8. யூகி முனி
9. மச்சமுனி
10.புண்ணாக்கீசர்
11. இடைக்காடர்
12. பூனைக் கண்ணர்
13. சிவவாக்கியர்
14.சண்டிகேசர்
15. உரோமருஷி
16. சட்டநாதர்
17. காலாங்கி
18. போகர்
1. அகத்தியர்
2. போகர்
3. நந்தீசர்
4. புண்ணாக்கீசர்
5. கருவூரார்
6. சுந்தரானந்தர்
7. ஆனந்தர்
8. கொங்கணர்
9. பிரம்மமுனி
10.உரோமமுனி
11. வாசமுனி
12. அமலமுனி
13. கமலமுனி
14. கோரக்கர்,
15.சட்டைமுனி
16. மச்சமுனி,
17. இடைக்காடர்
18. பிரம்மமுனி
1. அகத்தியர்
2. போகர்

3.கோரக்கர்

4.  கைலாசநாதர்
5. சட்டைமுனி
6.திருமுலர்
7. நந்தி
8. கூன் கண்ணர்
9. கொங்கணர்
10. மச்சமுனி
11.வாசமுனி
12. கூர்மமுனி
13. கமலமுனி
14. இடைக்காடர்
15. உரோமருஷி
16.புண்ணாக்கீசர்
17. சுந்தரனானந்தர்
18. பிரம்மமுனி

  1. நந்தி
  2. திருமூலர்
  3. அகத்தியர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8.   போகர்
  9. புலிக்கையீசர்
  10. கொங்கணர்
  11. அழுகணி
  12. கருவூரார்
  13. காலாங்கி
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை கா.சு. பிள்ளை, சி. பாலசுப்ரமணியம் ஏ.வி.சுப்ரமணியன் அரு.ராமநாதன்
  1. நந்தி
  2. சனகர்
  3. சனாதர்
  4. சனந்தர்
  5. சனற்குமார்
  6. திருமூலர்
  7. பதஞ்சலி
  8. அகத்தியர்
  9. புலத்தியர்
  10. புசுண்டர்
  11. காலாங்கி
  12. போகர்
  13. கொங்கணர்
  14. கருவூரார்
  15. தன்வந்திரி
  16. சட்டைஉனி
  17. தேரையர்
  18. யூகிமுனி
  1. அகத்தியர்
  2. புலத்தியர்
  3. புசுண்டர்
  4. நந்தி
  5. திருமூலர்
  6. காலாங்கிநாதர்
  7. போகர்
  8. கொங்கணர்
  9. சட்டைமுனி
  10. ரோமமுனி
  11. மச்சமுனி
  12. கருவூரார்.
  13. தன்வந்திரி.
  14. புண்ணாகீசர்
  15. கோரக்கர்
  16. யூகிமுனி
  17. தேரரயர்
  18. இடைக்காடர்
  1. அகத்தியர்
  2. திருமூலர்
  3. போகர்
  4. கோரக்கர்
  5. சட்டைமுனி
  6. நந்தி
  7. கொங்கணர்
  8. கமலமுனி
  9. இடைக்ககடர்
  10. சுந்தரானந்தர்
  11. ரோமமுனி
  12. பிரம்மமுனி
  13. மச்சமுனி
  14. வராஹமுனி
  15. கூர்மமுனி
  16. புண்ணாகீசர்
  17. கைலலசநாதர்
  18. கூன்கண்ணர்
  1. நந்தி
  2. அகத்தியர்
  3. மூலர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8. போகர்
  9. புலிக்கையீசர்
  10. கருவூரார்
  11. கொங்கணன்
  12. காலாங்கி
  13. எழுகண்ணர்
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்

இத்தகைய எண்ணிக்கைகள் எவ்வாறு வந்துள்ளன என்று இனி மூலங்களைப் பார்ப்போம்.

நந்தி யருள் பெற்ற நாதரை நாடினின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்ற தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மருமே

(திருமந்திரம்.68)

  1. நந்தி
  2. சனகர்
  3. சனந்தர்
  4. சனாதர்
  5. சனற்குமாரர்
  6. பதஞ்சலி
  7. வியாக்ரமர்
  8. திருமூலர்

இப்பாடலை வைத்துக் கொண்டுப் பார்த்தால் – எண்மர் என்று வருகிறது. அவருடைய சீடர்கள் என அவரே குறிப்பிடுவது:

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரம்மன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ

டிந்த எழுவரும் என் வழியாமே

  1. மாலாங்கன்
  2. இந்திரன்
  3. சோமன்
  4. பிரம்மன்
  5. உருத்திரன்
  6. கந்துருக் காலாங்கி
  7. கஞ்ச மலையன்

ஆக திருமூலர் காலத்தில் 15 பேர் உள்ளனர். ஆனால், திராவிட இனவாதத்தின்படி, ஆரியர்கள் இதில் இருக்கக் கூடாது. ஆகையால் தான் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், உருத்திரன், கந்துருக் காலாங்கி, கஞ்ச மலையன் என்ற பட்டியலில், காலாங்கியை மற்றும் தேர்ந்தெடுத்துள்ளனர். சமரசம் செய்து கொண்டவர்கள் அல்லது சைவ அபிமானிகள் எண்மரை சேர்த்துக் கொண்டுள்ளனர். போகரைப் படித்து குழம்பிப்போனவர்கள் பட்டியலை தமதிச்சைகேற்றாவாறு குழப்பியுள்ளனர்.

போகர் 7000 கொடுக்கும் சித்தர்கள் பட்டியல் ஜாதகம் முதலியன: போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்” என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது. போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம், அவர்கள் விண்வெளியில் பறக்கும் சக்தி கொண்டிருந்தார்களாம். எல்லா சித்தர்களையும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னுக்கு முரணாக எல்லோரையும் இணைக்க முனைந்துள்ளது. தசாவாரம் தெரிந்திருந்தத்தால் அந்த பத்து அவதாரப் பெயர்களை வைத்து பத்து ரிஷிக்களை உண்டாக்கியிருக்கிறது, பிறகு அவர்களும் சித்தர்கள் ஆகிறார்கள் (6868-6906). இதில் புத்தரைச் சேர்த்துள்ளது நோக்கத்தக்கது. நான்கு யுகங்கள், 1008 தீர்த்தங்கள் முதலியன சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பாடல்களை சாதாரணமாக வாசித்துப் பார்த்தாலே இது ஒரு போலிநூல் என்று தெரிகிறது. அதாவது 19/20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிகிறது.

ஆரிய-திராவிட போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சித்தர்கள்: ஜே. எம். நல்லசுவாமி பிள்ளை (1864-1920) சைவராகயிருந்து, ஆரிய-திராவிட சித்தாந்த்தை ஏற்றுக் கொண்டவர். அதனால், திராவிடம்-சைவ சித்தாந்தம், ஆரியத்தை-வேத-உபநிடதங்களைவிட சிறந்தது என்று வாதிட்டார்[1]. அத்தகைய சைவம், பிராமணர்-அல்லாத இயக்கமாக மாறி, பிராமணர்-எதிர்ப்பு இயக்கமாக உருமாறி, திராவிட மாயைக்குள் சிக்குண்டது. இதனால் சித்தர்-எழுத்தாளர்களும் உருமாற வேண்டியிருந்தது. பகுத்தறிவில் இந்துமதத்தைப் பழிக்க வேண்டிருந்தது; நாத்திகத்தில் சிவனை மறக்கவேண்டியிருந்தது. திராவிட சித்தாந்தத்தில் திருமூலர் மரபையே மறைக்க வேண்டி வந்தது. அதன்படியே, பிறகு வந்தவர்கள் தமக்குக்கிடைத்துள்ள பிரதிகள் அல்லது புத்தகங்களை வைத்துக் கொண்டு, இந்த பட்டியல்களைத் தயாரித்துள்ளனர் என தெரிகிறது. இதைத்தவிர திருமந்திர பாரம்பரியத்தை ஏற்பதா வேண்டாமா என்ற மனசஞ்சலம், குழப்பம் மற்றும் திராவிட சித்தாந்த போராட்டம் 20 நூற்றாண்டு சித்தர் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தது என்பதனையும் இது (இப்பட்டியல்கள்) எடுத்துக் காட்டுகிறது. சாமான்ய மக்களுக்குப் புரியவேண்டும் என்று இவர்கள் பாடல்களை இயற்றினார்கள் எனும் போது, மக்களிடையே பிரபலமாக இருக்கும் பெயர்களைத்தான் “சித்தர்கள்” வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்போலி பாடல்களை உருவாக்கியவர்கள் வைக்க வேண்டும். அதனால்தான், புனைப்பெயர்கள் புராணப் பெயர்களாக, ரிஷிகளின் பெயர்களாக மாற்றப்பட்டன. அப்பொழுது, எதை விடுவது, எதை சேர்ப்பது என்ற குழப்பத்தில், அவரவர் விருப்பத்திற்கேற்றப்படி பட்டியலைத் தயாரித்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது என்பது, அவர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்ற பட்டியல்களே சான்றாக உள்ளன.

சித்தர்கள் எண்ணிக்கை ஒன்பதா பதினெட்டானதா?: நாத-நவநாத சித்தர்களிடமிருந்து தான், இம்மரபு வருகிறது என்றதால், வடவிந்திய நாதசித்தர்களை விட தமிழ்சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று உயர்வாகச் சொல்லிக்கொள்ள ஒன்பதை பதினெட்டாக்கியிருக்கலாம். இதனை மாணிக்கவாசகம், தெற்கில் பதினெண்சித்தர்கள் எனக்குறிப்பது போலவே வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது, என்கிறார். அதாவது அவர்கள் தங்களது பட்டியலைச் சுருக்கிக் கொண்டார்கள் போலும்! 18ல் குழப்பம் உள்ளது போல 9லும் உள்ளது என்பதனை, “பதினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது”, என்று மூன்று பட்டியல்களைக் கொடுக்கிறார்[2].

அபிதான சிந்தாமணி எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை சட்டைமுனி பின்ஞானம் மூன்று
  1. சத்துவநாதர்
  2. சாலோகநாதர்
  3. ஆதிநாதர்
  4. அருளிநாதர்
  5. மதங்கநாதர்
  6. மச்சேந்திரநாதர்
  7. கடயேந்திரநாதர்
  8. கோரக்கநாதர்
  9. குக்குடநாதர்
  1. சத்யநாதர்
  2. சுகோதநாதர்
  3. ஆதிநாதர்
  4. அனாதிநாதர்
  5. வகுளிநாதர்
  6. மதங்கநாதர்
  7. மச்சேந்திரநாதர்
  8. கடயேந்திரநாதர்
  9. கோரக்கநாதர்
  1. திருமூலர்
  2. சண்டிகேசர்
  3. சனகர்
  4. சனந்தர்
  5. சனாதனர்
  6. சனற்குமாரர்
  7. வியாக்கிரபாதர்
  8. பதஞ்சலி
  9. சட்டைமுனி

இப்பெயர்களைப் படிக்கும்போதே, அறிவதாவது, முதல் இரண்டிலும் அதிகமான வேறுபாடில்லை மற்றும் மூன்றாவது திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. பிறகு பௌத்தத்தில் தந்திரமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் “முதல் ஆசிரியர்கள்” 84-சித்தர்கள் ஆவர் என்றுள்ளது. லாமா கோவிந்த என்பவர் இவர்களது பரிபாஷையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதனை எடுத்துக் காட்டுகிறார்[3]. பிறகு திபெத்தியர்களின்  பாரம்பரியத்தில் பூசுகபாதர் என்பவர் எப்பொழுதும் சித்தர் என்றே அவர்களின் பட்டியல்களில் காணப்படுகிறார். அவர் விஞ்ஞான, மத்யாத்மக மற்றும் வேதாந்த சித்தாந்தகளை இணைத்துப் போதிப்பவராகத் தெரிகிறார்[4]. இதையும் விஞ்சவேண்டும் இல்லையா, அதனால் பட்டியலை நீட்ட ஆரம்பித்தனர் ;போலும். இப்படி, நீண்டு கொண்டே போகும் போது, 58, 64, 84, 108 என்றும் சித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தனர்[5]. இதற்கு மேலும் யாதாவது, பிரச்சினை அல்லது குற்ரம் கண்டுபிடித்தால், எல்லாமே இதில் அடக்கம் என்பதுபோல, இன்னொரு “அனைத்தும் இதில் அடங்கும்” என்ற பட்டியல் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

1.     பதினெட்டாம்படிக் கருப்புகள்
2.     நவகோடி சித்தர்கள்
3.     நவநாத சித்தர்கள்
4.     நாத சித்தர்கள்
5.     நாதாந்த சித்தர்கள்
6.     வேத சித்தர்கள்
7.     வேதாந்த சித்தர்கள்
8.     சித்த சித்தர்கள்
9.     சித்தாந்த சித்தர்கள்
10.     தவ சித்தர்கள்
11.     வேள்விச் சித்தர்கள்
12.     ஞான சித்தர்கள்
13.     மறைச் சித்தர்கள்
14.     முறைச் சித்தர்கள்
15.     நெறிச் சித்தர்கள்
16.     மந்திரச் சித்தர்கள்
17.     எந்திரச் சித்தர்கள்
18.     மந்தரச் சித்தர்கள்
19.     மாந்தரச் சித்தர்கள்
20.     மாந்தரீகச் சித்தர்கள்
21.     தந்திரச் சித்தர்கள்
22.     தாந்தரச் சித்தர்கள்
23.     தாந்தரீகச் சித்தர்கள்
24.     நான்மறைச் சித்தர்கள்
25.     நான்முறைச் சித்தர்கள்
26.     நானெறிச் சித்தர்கள்
27.     நான்வேதச் சித்தர்கள்
28.     பத்த சித்தர்கள்
29.     பத்தாந்த சித்தர்கள்
30.     போத்த சித்தர்கள்
31.     போத்தாந்த சித்தர்கள்
32.     புத்த சித்தர்கள்
33.     புத்தாந்த சித்தர்கள்
34.     முத்த சித்தர்கள்
35.     முத்தாந்த சித்தர்கள்
36.     சீவன்முத்த சித்தர்கள்
37.     சீவன்முத்தாந்த சித்தர்கள்
38.     அருவ சித்தர்கள்
39.     அருவுருவ சித்தர்கள்
40.     உருவ சித்தர்கள்

எப்படி கற்பனைக் கொடிகட்டிப் பறந்துள்ளது என்று தெரிகிறது. இவற்றிற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதுபற்றிக் கூட கவலைப்படவில்லை.
© வேதபிரகாஷ்

02-09-2012


[1] J. M. Nallaswami Pillai (trans.), Sivagnana Botham, Madras, 1895, preface, p.iii.

[2] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், ப.139-140.

[3] Lama Anagarika Govinda, Grundlagen Tibetischer Mystick, Zurich, 1957, pp.45-46.

Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.28, 167-168.

[4] Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.29.

[5] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், பெருங்காப்பியச் சிற்றிலக்கியப் பெருந்தமிழ், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1975, ப.127-169. பக்கம்.168ல் 58 சித்தர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள்

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 3, 2012

சித்தர்கள், சித்தமருத்துவம் பற்றிய ஆராய்ச்சி

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும் புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].

ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –

  • பரம்பரை சித்த வைத்தியர்,
  • மூன்று  பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
  • கைராச்சிக்காரர்,
  • தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,

அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய  நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை.  இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].

சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.

ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.

ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.

புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?:  பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்


[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.

[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.

[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.

[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.

[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.

[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.

[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.

[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.

[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.

[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.

[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.

[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.

[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.

[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.

N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், முஹம்மது கஜினி, முஹம்மது பக்தியார் கில்ஜி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »