சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘பல்தேயமொழியோர்’ Category

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

பௌத்த பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதால் பௌத்த சித்தர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றது: பௌத்தமத்தத்தில் வஜ்ரயான தந்த்ர போதனைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தவர்கள் சித்தர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்தியாவில் அவர்கள் ஏழாவது நூற்றாண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு வரை சிறந்திருந்தனர்[1].  முகமதியப் படையெடுப்புகளினால் தக்ஷசிலா (Dhakshasila), நாலாந்தா (Nalanda), விக்ரமசிலா (Vikramasila), ஓடந்தபூர் (Odantapur) போன்ற மிக்கப்பெரிய பல்கலைக்கழகங்கள் / மஹாவிஸ்வவித்யாலயங்கள் முதலியவை தாக்கி அழிக்கப்பட்டதால், பேராசிசியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஞானிகள் முதலியோர் தப்பியோட வேண்டியதாயிற்று. அவர்கள் நாலாப்பக்கங்களிலும் சிதறியோடினர். இதனால் தந்தரமுறைகள் அந்தந்த நாடுகளில் பரவியது[2]. வைரோச்சன என்பவர் பௌத்த தந்திரிகமுறையைத் தோற்றுவித்தவர். குலாச்சார, வாமாசார, சஹஜயான, வஜ்ரயானப் பிரிவுகள் அந்நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஒவ்வொரு ஆண்தேவதைக்கும், ராகினி, லாகினி, சாகினி, ஹாகினி, குபுஜீகா போன்ற பெண்தேவதையும் சேர்க்கப்பட்டது[3].

நாடுகளில் பரவியது

வைரோச்சனின் பெயர் / மாற்றம்

விளக்கம்

மஹாயான பௌத்தம் தியானி புத்தா சிவன் புத்தனைப்போல சித்தரித்துள்ளார்கள். அதனால், ஒரு புத்தருக்குப் பதிலாக ஐந்து புத்தர்கள், ஐந்துதிசைகளில் (சிவனின் ஐந்து முகங்கள் போல) உள்ளனர். பிறகு சக்தியையும் சேர்த்துள்ளனர். ஒன்று மூன்றாகி, ஐந்தாகி, எழாகி, ஒன்பதாகி விட்டன. எட்டு, 84 என்றாகியதைப் போல சித்திகள் சக்திகளுடன் இணைத்து, முறைகளும் புகுத்தப்பட்டன.
நேபாளம் ஆதிபுத்தா
சீனா வஜ்ரசத்வா,நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜப்பான் வஜ்ரசத்வா, நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜாவா முதலிய தென்கிழக்காசிய நாடுகள்

எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: 84 சித்தர்கள் இருந்தார்கள் என்று 1506 ஆண்டு தேதியிட்ட மைதிலி மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆவணம் – “வர்ணரத்னாகர” என்ற நூல் – பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால் 76 பெயர்கள் மட்டும்தான் காணப்படுகிறது[4].

  1. மீனநாத
  2. கோரக்கநாத
  3. சௌரங்கிநாத
  4. சாமரிநாத
  5. தந்திபா
  6. ஹாலிபா
  7. கேதாரிபா
  8. தோங்கபா
  9. தாரிபா
  10. விருபா
  11. கபாலி
  12. கமாரி
  13. காண்ஹ
  14. கனஹல
  15. மேகல
  16. உன்மன
  17. காந்தலி
  18. தோவி
  19. ஜாலந்தரா
  1.   தோங்கி
  2. மவஹா
  3. நாகார்ஜுனா
  4. தௌளி
  5. பிஷாலா
  6. அசிதி
  7. சம்பக
  8. தேந்தச
  9. பூம்பாரி
  10. பாகலி
  11. துஜி
  12. சர்பதி
  13. பாடே
  14. சாந்தனா
  15. காமரி
  16. கரவத்
  17. தர்மபாபதங்க
  18. பத்ரா
  19. பாதலிபத்
  1. பலிஹிஹ
  2. பானு
  3. மீன
  4. நிர்தய
  5. சவர
  6. சாந்தி
  7. பாரதிஹரி
  8. பிஷண
  9. படி
  10. கங்கப
  11. கமார
  12. மேனுரா
  13. குமார
  14. ஜீவன
  15. அகோசாதவ
  16. கிரிவர
  17. சியாரி
  18. நாகவலி
  19. பிபவத்
  1.  சாரங்க
  2. விவிகதஜா
  3. மகரதஜ
  4. அசித
  5. பிசித
  6. நேசக
  7. சாதல
  8. நாசன
  9. பிலோ
  10. பாஹல
  11. பாசல
  12. கமலகங்காரி
  13. சிபில
  14. கோவிந்த
  15. பீம
  16. பைரவ
  17. பத்ர
  18. பமரி
  19. புருக

திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “சதுரசிதி-சித்த-பிரவுருத்தி” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார்[5]. இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன[6]. இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன், அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும், அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.

எண் பெயர் பொருள் விளக்கம்
1 அசிந்த / அசிந்தப பேராசைக் கொண்ட துறவி விறகுவெட்டி, விறகு வியாபாரம்
2 அஜோகி /அயோஜிப ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன் பிணமாக நடித்தவன்
3 அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர அழகான முட்டாள் சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்?
4 ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர் நாகார்ஜுனரின் சீடர் மஹாசித்தர்களில் ஒருவர்
5 பபஹ சுற்றித் திரியும் காதலன்
6 பத்ரப ஜம்பப் பேர்வழி தனியான பிராமணன்
7 பண்டேப பொறாமைப்படும் கடவுள்
8 பிக்ஷனப இரண்டு பற்கள் கொண்ட சித்தன்
9 புஸுகு/புஸுகுபாத சோம்பேரி சந்நியாசி ஜடம்-ஒருவேலையும் செய்யாதவன்
10 சமரிப தெய்வீக சக்கிலியன்
11 சம்பக/சம்பகபாத மலர்களுக்கு அரசன்
12 சர்பரிப/சர்பதி மக்களைக் கல்லாக்கியவன் கல்லாக்குபவன்; கல்லுளி சித்தர்?
13 சத்ரப ராசியுள்ள பிச்சைக்காரன் அதிருஷ்டம் உள்ளவன்
14 சௌரங்கிப அங்கஹீனன் கை-கால்கள் இல்லாதவன்
15 சேலுகப மறுபடியும் வீர்யம் பெற்றக் கொக்கு கொங்கணவன்
16 தரிகப கோவில் விபச்சாரியின் அடிமை அரசன்
17 தேன்கிப பிராமண அடிமை
18 தௌலிப முற்கள் கொண்ட கயிறு திரிப்பவன்
19 தர்மப என்றைக்கும் மாணவன்
20 திலீப சந்தோஷமான வியாபாரி சுகவான்; தேரையர்?
21 தோபின அறிவுள்ள வண்ணான்
22 தோகரிப பாத்திரங்களை சுமப்பவன்
23 தோம்பி ஹெருக புலி சவாரி செய்பவன் புலிப்பாணி?
24 துக்காண்டி பெருக்குபவன், சுத்தம் செய்பவன்
25 கண்டப பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கும் துறவி மணியடிக்கும் துறவி
26 கர்பரி/கர்பரிப துக்கமளிக்கும் பண்டிதன்
27 கோதுரிப/கோரூர பறவைப் பிடிப்பவன்
28 கோரக்ஷ / கோரக்கநாத நிரந்தரமாக மாடு மேய்ப்பவன் பசுக்களைக் காப்பவன் – இவர் கோரக்கரக்கவும் அல்லது திருமூலராகவும் கொள்ளலாம்.
29 இந்திரபூதி திலோபனின் குரு எந்திரியங்களை வென்றவன்
30 ஜலதார தகிணி என்பவரின் சேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் நீரைப்போன்று வேகமாமக செல்லக்கூடியவன்/ ஓடுபவன்
31 ஜெயந்தர காக்கையின் ஆசிரியர் காகபுசசுண்டர்?
32 ஜோகிப சித்தப் பிரயாணி அலைந்து-திரிந்து கொண்டிருப்பவன்
33 கலப அழகான பைத்தியம் சுந்தரானந்தர்?/ குதம்பைச் சித்தர்?
34 கம்பரிப கொல்லன் இரும்பு முதலிய உலோகவேலை செய்பவன்
35 கம்பள கருப்புக் கம்பள யோகி கருப்புக் கம்பளம் போர்த்தியவன்; சட்டைமுனி?
36 கணக்கல முண்டமாமன இரு சகோதரிகளின் இளைய சகோதரன் ஏழுதலையுள்ள சகோதரிகளின் இளைய சகோதரன்
37 கண்ஹ / கணப கருப்புத் தோலன் கருப்பு சித்தர்
38 கங்கண சித்தராஜ சித்தர்களுக்கு அரசன்
39 கங்கரிப காதல் பித்தம் கொண்ட விதவை
40 கந்தாலிப குப்பைப் பொறுக்குபவன் கந்தை தையல்காரன்
41 கபலப கபாலம் கொண்டவன் காபாலிகன்
42 கட்கப திருட்டுராஜா பயமில்லாதத்ன் திருடன்
43 கிலகிலப தள்ளிவைக்கப்பட்ட லொடலொட வாயன் வீண்பேச்சாளிடமரானந்தர் / பிண்ணாகீசர்?
44 கிரபலப வென்று துக்கப்படுபவன்
45 கோகிலப நிம்மதியான ஓவியன் கலைஞானி
46 கோடலிப விவசாயியான குரு  
47 குசிப கழுத்துவீங்கிய யோகி  
48 குக்கிரிப நாய் விரும்பி தத்தாரேயர்?
49 கும்பாரிப பானையன் / பானை செய்வோன் அகத்தியர்?
50 லக்ஷ்மீன்கர பைத்தியமான இளவரசன்
51 லிலப ராஜீய சுகவாசி என்றும் இன்பம் துய்ப்பவன்
52 லுசிகப தப்பித்துக் கொள்பவன் பொறுப்பற்றவன்
53 லுயிப மீன்-குப்பையைத் தின்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
54 மஜிப மிகப்பெரியவன்
55 மணிபத்ர மாதிரி மனைவி இவள்தான் மனைவி என்று போற்றப்படுபவள்
56 மெதினி களைத்த விவசாயி
57 மேகல முண்டமான இரு சகோதரிகளில் மூத்தவள் ஏழு சகோதரிகளில் மூத்தவள்
58 மெகோப முழிக்கும் குரு கண்ணிமைக்காத சித்தன்
59 மீனப மீன் பிடிப்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
60 நாகபோதி சிவப்புக் கொம்புத் திருடன் ஆரியதேவ /  ஒற்றைக்கொம்பன்
61 நாகார்ஜுன யோகி
62 கலினப சுதந்திர இளவரசன் யார் மீதும் ஆதாரமாக இல்லாதவன்
63 நரோப
64 நிர்குணப அறிவான முட்டாள்
65 பச்சரிப மாமிசம் சமைப்பவன் புலத்தியர்?
66 பங்கஜப தாமரையில் பிறந்த பிராமணன் பிரம்மா, கமலமுனி?
67 புதலிப மருந்து பாத்திரம் சுமப்பவன் தன்வந்திரி?
68 ராஹுல இளமைப் பெற்ற பழைய முட்டாள்
69 சரஹ அம்பு செய்பவன்
70 சகர கடலில் செல்பவன்? டமரானந்தர்?
71 சமுதர முத்தெடுப்பவன்
72 சாந்திப மிக்கப்படித்தவன்/அறிவுஜீவி அமைதியான பிரச்சாரி
73 சர்வபக்ஷ வெற்று வயிரன் நன்றாக சாப்பிடுபவன்
74 சவரிப வேட்டைக்காரன்
75 சாலிப நரி யோகி
76 தந்தேப சூதாடி
77 தந்திப முதுமைப் பெற்ற நெசவாளி
78 தகநப தேர்ந்தெடுத்தப் பொய்யன்
79 திலோப
80 உடிலிப பறக்கும் சித்தர் பறவை-மனிதன்டமரானந்தர்?
81 உபான செருப்புத் தைப்பவன்
82 வினப சங்கீதம் விரும்பி பாட்டுப்பாடுபவன்
83 விருப
84 வியலப அரசாங்க ரசவாதி யூகிமுனி?

இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த மஹாசித்தர்கள்: ஹடயோகப்ரதீபிகா[7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது[8].

  1. ஆதிநாத
  2. மச்சேந்திர
  3. சாவர
  4. ஆனந்தபைரவ
  5. சௌரங்கி
  6. மீனநாத
  7. கோரக்கநாத
  8. விருபாக்ஷ
  1. பிலேசயா
  2. மந்தான
  3. பைரவ
  4. சித்திபுத்த
  5. கந்தடி
  6. கோராம்தக
  7. சுரானந்த
  8. சித்தபாத
  1. சர்பதி
  2. கானேரி
  3. பூஜ்யபாத
  4. நித்யானந்த
  5. நிரஞ்சன
  6. கபாலி
  7. பிந்துநாத
  8. காகசண்டீஸ்வர
  1. அல்லாம
  2. பிரபுதேவ
  3. கோட
  4. சோலி
  5. திமிந்தி
  6. பானுகி
  7. நாரதேவ
  8. கண்டகாபாலிக

அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என்னமோ? இல்லை ஜைனர்கள் எப்படி “மஹாசித்தர்கள்” என்று தீர்த்தர்ங்களையும் குறைத்துக் கொண்டார்களோ அவ்வாறிருக்கலாம். பௌத்தம் பொருத்த வரையில், தாந்திரீகத்தை பின்பற்றி சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். பௌத்த சித்தர்கள் அனைவரும் தாந்தீர்கர்களே.

பௌத்த நூல்களைப் பின்பற்றி “திராவிட சித்தர்கள்” கதைகள் உருவானது: பொதுவாக ஜைன-பௌத்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருத நூல்களினின்று பெற்றப்பட்டவைதாம். ஜைனம் மற்றும் பௌத்தம் வேதங்களின் நிலைநிறுத்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக் கொண்டு, பெருமான்மையான மக்களின் நம்பிக்கைகளையும் தகவமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள் தாம்[9]. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கர்மா, பாவம், புண்ணியம், ஆன்மா / ஆத்மா முதலி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டன[10]. எப்படி வேதங்களப் படித்து, அதற்கு எதிராக சில தர்க்கநூல்களை உருவாக்கினார்களோ, அதேபோல இதிகாச-புராணங்களுக்கு மாறாகவும் தயாரித்தார்கள் என்று முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது. “கதா சரித் சாகர” போன்ற கதைகளில் சித்தர்கள் ஏதோ மந்திர-தந்திரங்களில் வல்லவர்கள் போன்று சித்தரிக்கப் பட்டனர். அதேபோல ஆரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக திராவிடர்களை தயாரித்தவர்களே, ஜைன-சித்தர்கள், பௌத்த-சித்தர்கள் போல, திராவிட-சித்தர்களை உருவாக்கியிருக்கின்றனர். கொடுத்துள்ள பெயர்கள், விளக்கம் முதலியவற்றைப் படிக்கும்போதே, தெரிவது என்னவென்றால், நிச்சயமாக இதைப்படித்து, 19-20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் புதியதான “திராவிட சித்தர்களை” உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். மேலும் யாரை சேர்ப்பது-விடுப்பது என்று குழம்பி, பட்டியலை உருவாக்கினதால், “பதினெண் சித்தர்” பட்டியலும் குழம்பிவிட்டது. அகத்தியர் பெயரில் உள்ள நூல்களைப் படித்து, இவற்றையும் படித்தால், எப்படி இக்கதைகளைக் காப்பியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர் ஆதரவுடன் அல்லது உத்தரவுடன் தமிழ் பண்டிதர்கள் உருவாக்கியுள்ளனர்: ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய மிஷனரிகள் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதால், ராபர்டோ டி நொபிலி, சீசன்பால்கு, பெஸ்கி போன்றவர்கள், தமிழ் பண்டிதர்களின் உதவியுடன், அத்தகைய சித்தர் பாடல்களை உருவாக்கியிருக்கலாம். சீசன்பால்கு கணபதி உபாத்யாயாவை மிரட்டி தமிழ் கற்றுக் கொண்டான், நூல்களையும் எழுதவைத்தான் மற்றும் அவரது சாவதற்கும் காரணமாக இருந்தான். ராபர்டோ டி நொபிலி “ஆத்தும நிர்ணயம்”, “புனர் ஜென்ம ஆக்ஷேபம்”, “அக்கியாண நிவாரணம்”, திவ்விய மாதிரிகை, ஞான சஞ்சீவி, அண்ட பிண்ட வியாக்கியானம், உலக பிராமண சாஸ்திரம், பரமசுமாக்ஷபிபிராயம் போன்ற நூல்களை எப்படி தமிழ் பண்டிதர்களை விலைக்கு வாங்கி எழுத வைத்தார்களோ அதேபோலத்தான் எழுதப்பட்டன[11]. ஐரோப்பியர்கள் ஓலைச்சுவடி புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றிருப்பதால், மேலும் பலவற்றிற்கு மூலப்பிரதிகளை எடுத்து, காகித நகல்களை வைத்துச் சென்றுள்ளதால், நிச்சயமாக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்.  உலக மகாயுத்தங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தத்தமது காலனிய நாடுகளினின்று வெளியேற வேண்டும் என்று தெரிந்தபோது, அங்கங்கு இத்தகைய போலி ஆவணங்களை, கட்டுக்கதைகளை, புரட்டு சரித்திரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டனர். மேலும் 19ம் நூற்றாண்டில் இந்திய மருத்துவமுறைகளுக்கு எதிராக ஆங்கிலேயர் அதிக அளவில் அடக்குமுறைகளைமேற்கொண்டு வந்தனர். உள்ள மருத்துவமுறைகளை “நாட்டு மருந்துவம்” (Native medicine), “காட்டு மருந்துவம்” (Tribal medicine), “கிராம மருந்துவம்” (village / folk medicine), “அநாகரிக மருத்துவம்” (Uncivilized / crude medicinal practices), “பில்லி-சூன்ய மருத்துவம்” (Shamanism / Witchcraft), “போலி மருத்துவம்” (Pseudo-medicine), “பேய்-பிசாசுகளை ஓட்டும் முறை” (Exorcism) என்றெல்லாம், பழித்துப்பேசி, இகழ்வாக எழுதி, எதிர்த்துச் சட்டங்களை இயற்றித் தடையும் செய்தனர்.

© வேதபிரகாஷ்

15-09-2012


[1] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.315.

[2] Radhakamal Mukerjee, The March of Tantrika art over the Pacific, in Studies in Asian History, pp.289-296.

[3] Probodh Chandra Bagchi, Studies in the Tantras, Part-I, University of Calcutta, 1975, see under the chapter “On Foreign element in the Tantra”, pp.45-55.

[4] A list of eighty-four Siddhas (though, actually only 76 names are mentioned) is found in a manuscript (manuscript no 48/34 of the Asiatic Society of Bengal) dated Lakshmana Samvat 388 (1506) of a medieval Maithili work, theVarna(na)ratnākara written by Kaviśekharācārya Jyotirīśvara Ṭhākura, the court poet of King Harisimhadeva of Mithila (reigned 1300–1321). An interesting feature of this list is that the names of the most revered Nathas are incorporated in this list along with the Buddhist Siddhacharyas.

[6] Scott Hajicek-Dobberstein, Soma Siddhas and alchemical enlightenment: pasychedelic mushrooms in Buddhist tradition, Journal of Ethnopharmacology, 1995, vol.48, pp.99-118.

[7] Dasgupta, Sashibhusan (1995). Obscure Religious Cults, Firma K.L.M., Calcutta, ISBN 81-7102-020-8, pp.203ff, 204.

[8] Shastri Haraprasad (ed.) (Hajar Bacharer Purano Bangala Bhasay Bauddhagan O Doha (in Bengali), 1916, 3rd edition 2006). Kolkata: Vangiya Sahitya Parishad, pp.xxxv-vi.

[9] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[10] Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

[11] எஸ். ராஜமாணிக்கம் (பதிப்.), ஆத்தும நிர்ணயம், பாளையங்கோட்டை, 1967.

பதிப்பாசிரியரே ராபர்டோ டி நொபிலி பெயரில் உலாவரும் நூற்களில் பெரும்பாலும் அவரால் எழுதப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் பக்கங்கள்.xxii-xxiv. அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – சுவர்க்கம், நரகம், வைகுந்தம், கைலயம்…….பாவம், புண்ணியம்…..போன்ற விஷயங்கள் கிருத்துவத்திற்கு கிஞ்சித்தேனும் சம்பந்தம் இல்லை. ஏதோ ஒரு தமிழ்நூலை, கிருத்துவநூல் என்று சொல்லிக்கொள்வது நன்றாகவே தெரிகிறது.

Posted in அகத்திய, அகத்தியர், அகஸ்தியர், அரேபியா, அறிவு ஜீவி, ஆதிநாத, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், இந்தியவிரோதிகள், ஓடந்தபூர், ஓலை, ஓலைச்சுவடி, கபாலி, கம்பளி, கலாச்சாரம், காபாலிக, குலாச்சார, கௌதம, க்ஷத்திரியர், சட்டைமுனி, சரகர், சல்ய, சல்லிய, சஹஜயான, சாரணர், சிகிச்சை, சிதம்பரம், சிதர், சித்தஞானம், சித்தபாத, சித்தபிரமை, சித்தபுரம், சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தர் பாடல்கள், சித்தாந்திகள், சுவடி, டமரானந்தர், தக்ஷசிலா, தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், துறவி, தேரையர், நரதேவ, நாரதேவ, நாலாந்தா, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பராசர, பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாலியல், புத்தகம், புனிதம், புலஸ்தியர், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, பௌத்தம், மச்சேந்திர, மந்திரம், மயக்கம், மருந்து, யந்திரம், வஜ்ரயான, வாமாசார, விக்ரமசிலா, வீரசைவம், வேதம், வேதாங்கம், வேதாந்தம், வைத்தியர், ஹடயோகப்ரதீபிகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பாரதத்தில் – பழங்கால இந்தியாவில் சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 5, 2012

பாரதத்தில் – பழங்கால இந்தியாவில் சித்தர்கள்

இப்பொழுது இந்திய சித்தர்களின் பாரதம் ஒன்றாகாது: சித்தர்கள் பல சமூகங்களை, இனங்களை, நாடுகளை சேர்ந்தவர்கள் என்றவுடன் அவர்கள் இனம்-மொழி-சாதி முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியா வேறு, பாரதம் வேறு என்றெல்லாம் திராவிடவாதிகள், பிரிவினைவாதிகள், இந்தியவிரோதிகள் எழுதிவருகிறார்கள்[1]. ஆனால், தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள “பாரதம்” பற்றிக்கூட அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையே[2]. 3000, 2000, 1000, 500 வருடங்களுக்கு முந்தைய பாரதமும் இன்றைய இந்தியாவும் ஒன்றல்ல என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அதாவது 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தனர்[3]. சோழர்கள் இந்தியாவின் கிழக்குக்கடற்கரை வழியாக சீனா வரை ஆதிக்கம் செல்லுத்தி வந்தனர். அதும்ட்டுமல்லாது, தென்மேற்குதிசையிலுள்ள நாடுகளை வென்றதால், இந்திய கலாச்சாரம், பண்பாடு, பரம்பரை, நாகரிகம் அங்கும் பரவியிருந்தன[4]. அவர்கள் காலத்திலும் மற்றும் அந்த  3000, 2000 வருட காலங்களிலும் மருத்துவமுறை சிறந்து விளங்கியிருந்தது. கோவில் வளாகங்களில் மருத்துவமனைகள் செயல்பட்டு வந்தன. அவற்றையெல்லாம் மறந்து, பின்னால் வந்த மருத்துவமுறையை, முன்னால் எடுத்துச் செல்வதால், சரித்திர ஆதாரங்கள் எடுத்துக் காட்டிவிடும்.

அப்பொழுது சித்தர்கள் இருக்கும்போது, சங்க இலக்கிய “பல்மொழிதேயத்தோர்” நியதியில் பலமொழிகளைப் பேசியிருப்பர்[5]. பல இடங்களுக்குச் சென்றிருப்பர். ஆனால், மக்களிடையே ஒரு இணைப்பு மொழி ஒன்று இருந்திருக்க வேண்டும்[6]. பிறகு படிப்படியாக இடைக்காலத்திலிருந்து இஸ்லாம், கிருத்துவ மதங்கள் வளர்ந்து பாவ ஆரம்பிக்கும் போது, அந்த பழங்கால பூகோள எல்லைகள் குறைய ஆரம்பித்தன, சுருங்கவும் செய்தன. தனிமைப்படுத்தப்பட்ட பழங்கால இந்தியர்கள் அல்லது இந்துக்கள் அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் மற்ரும் தென்மேற்காசிய நாடுகளில் வாழ நேர்தது. ஆகவே, தனிமைப்படுத்த மற்றும் குறுகிய இடக்கால பாரதத்தில், அதற்கேற்றமுறையில் அவர்கள் பின்பற்றி வந்த மருத்துவமுறைகளும் மாற ஆரம்பித்தன. பரவியிருந்த பாரத மக்களின் முறைகளும் மாற ஆரம்பித்தன. அவ்வாறு ஏன் அப்படி ஒருகாலக்கட்டத்தில் வேறுபடவேண்டும் என்று இக்கால எழுத்தாளர்கள் ஆராய்ச்சி செய்வதில்லை. இருக்கும் நூல்களை முழுமையாகப் படித்துப் பார்த்தால், அவையெல்லாம் குறிப்பிட்ட பொதுவான கலாச்சாரம், பண்பாடு, பரம்பரை, சம்பிரதாயம், மூலங்களை ஏற்றுக் கொள்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பிறகு காலக்கிரமமாக மாறுபடுகின்றன.

பாரத்தத்தின் பண்பாடு, பாரம்பரிய கூறுகள் சித்தர்களின் பண்பாடு, பாரம்பரிய கூறுகள் முதலியவை சரித்திர ரீதியில் வெவ்வேறா?: பாரதம் அல்லது இந்தியா முழுவதும் ஒரு குறிப்பிட்ட மருந்துவமுறை இருந்து வந்துள்ளது. வேத, ஜைன, பௌத்த காலங்களில் சமஸ்கிருதம் போதனாமொழி அல்லது பல்கலைக்கழகங்களில் சிறப்புப் படிப்புகள் படிக்க பொது மொழியாக உபயோகப்படுத்தப் பட்டு வந்துள்ளமையால் தான், மூலநூல்கள் சமஸ்கிருதத்தில் காணப்படுகின்றன. இன்றும் திபெத்திய, சைன மொழிகளில் உள்ள ஆவணங்கள் அத்தகைய உண்மையினைக் காட்டுகின்றன. அவை “சித்தர்கள்” பற்றிய ஆவணங்கள் மற்றும் சித்திரங்கள், சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றையும் வைத்திருக்கின்றனர். இதனால், சமஸ்கிருதத்தை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று சித்தர் நூல்களை படித்தால், சமஸ்கிருத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அறியாமல், அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்று எந்த படிக்கின்ற மாணவன், சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியன் அல்லது ஆராய்ச்சியாளன் எளிதாகத் தெரிந்து கொள்வான். ஆகையினால் சித்தாந்த ரீதியில் அல்லது அரசியல் போக்கில் மொழிரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திக் கொண்டால், உண்மையினை அறிய முடியாது.

சங்ககாலத்தில் இருந்த மருத்துவம் சித்த மருத்துவமா?: சங்ககாலத்தில் மக்கள் வாழ்ந்தபோது, நிச்சயமாக ஆரோக்யமான, நோயற்ற வாழ்விற்கு ஒரு மருத்துவமுறை இருந்துள்ளது[7]. ஆனால், அது “சித்த மருத்துவம்” என்றில்லை. பிறகு ஏன் திராவிடர்கள் “திராவிட மருத்துவம்” பின்பற்றவில்லையென்று, சிந்தித்துப் பகுத்தறிவுவாதிகள் கேட்டுப் பார்க்கவில்லை. “திராவிடர்கள்” சங்ககாலத்தில் இல்லாதபோது, “ஆரியர்கள்” எப்படி இருந்தார்கள் என்றும் அவர்களது நுண்ணறிவு வேலை செய்யவில்லை. அந்த “ஆரியர்கள்” கழைக்கூத்து ஆடினார்கள், கயிற்றின் மேலே நடந்தார்கள்; வித்தைக் காட்டினார்கள்; தெரியாத மொழி பேசினார்கள்; யானைகளுடன் பேசி, யானைகளைப் பிடித்து, வளர்த்தார்கள், முனிவர்களைப் போல இருந்தார்கள் என்றெல்லாம் “திராவிடப் புலவர்கள்” எழுதிவைத்திருப்பதால், அவர்கள் தாம் “சித்தர்கள்” என்று கூறிவிடமுடியுமா? யானைகளுக்கு வைத்தியம் பார்த்தது போல, தமிழர்களுக்கும் வைத்தியம் பார்த்தார்கள் என்று சொல்லமுடியுமா? இல்லை அப்படித்தான் ஆயுர்வேதத்தையும், சமஸ்கிருதத்தையும் நுழைத்தார்களா? உடனே இனமான, வீரதீரசூர “திராவிடர்கள்” ஒன்றும் அறியாமல் ஏற்றுக் கொண்டு விட்டனரா? ஆகவே, எந்த ஒரு மருத்துவமுறையினையும் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது; எந்த ஒரு மதம், சாதி, இனம் முதலியவற்றுடன் தொடர்புப் படுத்திக் காட்டக் கூடாது. எல்லாவற்றையும் படிக்கும் போது நிச்சயமாக, அவற்றில் பொதுவாக இருப்பது, அதேபோல இருப்பது, கண்டுபிடிப்புகளில் முன்னது-பின்னது என்பனவற்றை உன்னிப்பாக, காலக்கிரமத்தில் பார்த்தால் உண்மை விளங்கும்.

சித்தர்கள் “பல்மொழிதெயத்தோர்” வகையில் வருவார்களா?: சங்ககாலத்திற்கு முன்பே ஜைனம்-பௌத்தம் தமிழகத்தில் நுழைந்துள்ளன. அதாவது பாரதத்தில் ஒரு பகுதியில் உள்ளது, மற்றப் பகுதிகளுக்குப் பரவியது. ஜைனர்கள்-பௌத்தர்கள் பாரதத்தில் திடீரென்று உருவாக்கப்படவில்லை. பாரத மக்களிடமிருந்துதான் அவர்கள் மதம் மாறி வளர்ந்துள்ளனர். அவர்களது நூல்களில் “ஆர்ய” என்ற சொல் அதிகமாகவே உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இனவாத ரீதியில் இல்லை. இல்லை ஆகவே, அவர்கள் ஆரியர்களா, திராவிடர்களா என்று சொல்லமுடியாது. ஜைனர்கள்-பௌத்தர்கள் எல்லோருமே கருப்பாக, மூக்குகள் சப்பையாக, குள்ளமாக, தலைமயிர் சுருட்டிக் கொண்ட உருவத்தில் இருந்தார்கள் என்றில்லை. ஏனெனில் அக்காலத்தைய சிற்பங்கள், ஓவியங்கள் அவர்களை அவ்வாறு காட்டவில்லை. பாரதத்தில் இருந்த சித்தர்கள், தமிழகத்திற்கும் வந்திருக்கலாம். ஜைனம்-பௌத்தம் மருத்துவமுறைகளை அவர்கள் மூலம், அதாவது, அவர்களின் சித்தர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், மக்கள் அம்முறைகளை நமது நாட்டு சூழ்நிலைகளுக்கு மாறுபட்ட நிலைகளில் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லது ஜைனம்-பௌத்த சித்தர்கள் / மருத்துவர்கள் இந்தியமுறையையே கையாண்டிருப்பார்கள். 300-250 ஆண்டுகளில் அசோகன் தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், விலங்குகளுக்குக்கூட மருத்துவமனைகள் கட்டியிருக்கிறான். அதாவது, மக்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கும் மருத்துவம் தேவை என்ற உண்மை பாரத மக்களுக்குத் தெரிந்திருந்தது. மேலும் போர்கள், சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், மருத்துவர்களின் அவசியம் தொடர்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, மக்கள் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்கி, சமூகநடப்புகள் நடந்து வந்துள்ள நிலைகளில், அக்காலகட்டத்தில் நிச்சயமாக மக்களுக்கேற்புடைய, செயல்பட்டுவரும் மருத்துவமுறை இருந்துள்ளது. அவர்கள் சித்தர்கள் ஆனாலும், மருத்துவர்கள் ஆனாலும், வைத்தியர்கள் ஆனாலும் மக்களுக்காக “பல்மொழிதேயத்தோர்” மட்டுமல்லது “பல்தேயமொழியோர்” எனவும் இருந்து சேவைசெய்திருப்பர். ஆரியர்கள்-திராவிடர்கள் என்று பிரித்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

04-09-2012


 


[1] ஆயிரக்கணக்கான புத்தகங்கள், குறும்புத்தகங்கள், பிட்-நோட்டீசுகள் முதலியன கம்யூனிஸ, திராவிட, கிருத்துவ, இஸ்லாமிய இயக்கங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், அவர்களே, இந்த நாட்டைக் காப்பவர் போலவும் பிரச்சாரம் செய்வார்கள், போராட்டங்கள் நடத்துவார்கள்.

[2] “பாரதம்” என்ற சொல் பிரயோகம் மணிமேகலையில் காணப்படுகிறது – (பதிகம்.22, 17: 57). இதை கே. வி. இராமகிருஷ்ண ராவ் எடுத்துக் கட்டியுள்ளார். பாடல்சால் சிறப்பிற் பாரதத் தோங்கிய நாடகம் விரும்ப…………………

U. V. Swaminatha Iyer, Manimekhalai mulamum arumpadha uraiyum, Swainatha Iyer Library, Chennai, 1981, p.2 and 191. It had the beautiful benefits wanted i.e, it had all wealths attracted by other nations and thus praised in songs. U. V. Swaminatha Iyer pointed out that it could denote the dance form also, to imply that it was in existence in India long back and not developed recently, as some scholars try to interpret.

K. V. Ramakrishna Rao, A Brief outline of the Siddha understanding of the Body and mind: New Research, a paper presented at the workshop conducted on “Perspectives of different knowledge systems on “The Body and Mind” held at Bangalore on August 24th and 25th 2012.

[3] சிந்து பகுதி யில் 712ல் அரேபியர் படையெடுப்பு நடந்த பிறகும், அரேபியா, மத்திய ஆசியாப்பகுதிகளில் இந்தியர்கள், இந்துக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் வியாபாரம் செய்து வந்தனர். ஏரியல் ஸ்டீயின் போன்றோரின் அகழ்வாய்வு அறிக்கைகள், புத்தகங்கள் முதலியவற்றைப் பார்க்கவும்.

[4] டொனால்ட் ஏ. மெக்கன்ஸி, வாடெல் முதலியோரது புத்தகங்களைப் பார்க்கவும். சிலநூறாண்டுகளுக்கு முன் மற்ற நாடுகளுக்குச் சென்றுவர எந்தவித கட்டுப்பாடும் இல்லை, அதாவது மக்கள் விருப்பம் போல சென்று வந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் அவ்வாறு தீர்த்த யாத்திரை, விழா, மேலா என்ற நிமித்தமாகச் சென்று வந்ததால் அந்நிலை மக்களுக்குத் தெரிந்திருந்தது.

[5] சங்க இலக்கியங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள “பல்மொழிதெயத்தோர்” என்ற சொற்றொடர், தமிழ்ழகத்தின் வடபகுதியிலிருந்து தமிழல்லாத மற்ற மொழிகள் பேசப்பட்டு வந்ததைக் காட்டுகிறது. அன்கு வடுகமொழி – அதாவது தெலுங்கு பேசப்பட்டுவந்தது.

[6] உமணர்களின் உப்பு வண்டிகள் இந்தியா முழுவதும் சென்று வந்தன; பிரம்மி எழுத்து, முத்திரைப் பதிக்கப்பட்ட நாணயங்கள் எல்லாம் பாரதம் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. சாதாரண-பொது மக்களின் ஏற்புடையாமல் இம்முறை இருந்திருக்காது.

[7] மருந்து, மருத்துவன், முதலிய சொற்கள் பிரயோகத்தில் இருந்தன. ஆனால், சித்தர்களை, சித்துகளை, சித்தமருத்துவத்தைக் குறிக்க வார்த்தைகள் இல்லை. எப்படி “திராவிடம்”, திரவிடம், திராவிடர் முதலிய இல்லையோ, இவையும் இல்லை.

Posted in அரேபியா, இந்தியவிரோதிகள், இந்தியா, இமயம், சீனா, சைனா, சோழர், திபெத், திராவிடவாதிகள், பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாரதம், பிரிவினைவாதிகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »