சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம்’ Category

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

நவீனகால சித்தர் பாடல்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

சித்தர்கள் பதினெட்டு என்றால் அவர்கள் பட்டியல் ஏன் வேறுபடுகிறது?: “பதினென் சித்தர்கள்” என்ற கணக்கீடு பிரபலமாக சித்தமருத்துவர்கள், சித்த-எழுத்தாளர்கள் மற்றும் சித்த-ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து வருகிறார்கள். ஆனால், அத்தகைய கணக்கீட்டிற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கும் போது, பல பட்டியல்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு பிரபலமாக மற்ற சித்த எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பட்டியல்கள் சில கீழே கொடுக்கப்படுகின்றன:

கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து நிஜானந்த போதம் அபிதான சிந்தாமணி ஏ. சண்முகவேலன்
1. கும்ப முனி
2. நந்தி முனி
3. கோரக்கர்
4. புலிப்பாணி
5. புசுண்டரிஷி
6. திருமுலர்
7. தேரையர்
8. யூகி முனி
9. மச்சமுனி
10.புண்ணாக்கீசர்
11. இடைக்காடர்
12. பூனைக் கண்ணர்
13. சிவவாக்கியர்
14.சண்டிகேசர்
15. உரோமருஷி
16. சட்டநாதர்
17. காலாங்கி
18. போகர்
1. அகத்தியர்
2. போகர்
3. நந்தீசர்
4. புண்ணாக்கீசர்
5. கருவூரார்
6. சுந்தரானந்தர்
7. ஆனந்தர்
8. கொங்கணர்
9. பிரம்மமுனி
10.உரோமமுனி
11. வாசமுனி
12. அமலமுனி
13. கமலமுனி
14. கோரக்கர்,
15.சட்டைமுனி
16. மச்சமுனி,
17. இடைக்காடர்
18. பிரம்மமுனி
1. அகத்தியர்
2. போகர்

3.கோரக்கர்

4.  கைலாசநாதர்
5. சட்டைமுனி
6.திருமுலர்
7. நந்தி
8. கூன் கண்ணர்
9. கொங்கணர்
10. மச்சமுனி
11.வாசமுனி
12. கூர்மமுனி
13. கமலமுனி
14. இடைக்காடர்
15. உரோமருஷி
16.புண்ணாக்கீசர்
17. சுந்தரனானந்தர்
18. பிரம்மமுனி

  1. நந்தி
  2. திருமூலர்
  3. அகத்தியர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8.   போகர்
  9. புலிக்கையீசர்
  10. கொங்கணர்
  11. அழுகணி
  12. கருவூரார்
  13. காலாங்கி
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்
எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை கா.சு. பிள்ளை, சி. பாலசுப்ரமணியம் ஏ.வி.சுப்ரமணியன் அரு.ராமநாதன்
  1. நந்தி
  2. சனகர்
  3. சனாதர்
  4. சனந்தர்
  5. சனற்குமார்
  6. திருமூலர்
  7. பதஞ்சலி
  8. அகத்தியர்
  9. புலத்தியர்
  10. புசுண்டர்
  11. காலாங்கி
  12. போகர்
  13. கொங்கணர்
  14. கருவூரார்
  15. தன்வந்திரி
  16. சட்டைஉனி
  17. தேரையர்
  18. யூகிமுனி
  1. அகத்தியர்
  2. புலத்தியர்
  3. புசுண்டர்
  4. நந்தி
  5. திருமூலர்
  6. காலாங்கிநாதர்
  7. போகர்
  8. கொங்கணர்
  9. சட்டைமுனி
  10. ரோமமுனி
  11. மச்சமுனி
  12. கருவூரார்.
  13. தன்வந்திரி.
  14. புண்ணாகீசர்
  15. கோரக்கர்
  16. யூகிமுனி
  17. தேரரயர்
  18. இடைக்காடர்
  1. அகத்தியர்
  2. திருமூலர்
  3. போகர்
  4. கோரக்கர்
  5. சட்டைமுனி
  6. நந்தி
  7. கொங்கணர்
  8. கமலமுனி
  9. இடைக்ககடர்
  10. சுந்தரானந்தர்
  11. ரோமமுனி
  12. பிரம்மமுனி
  13. மச்சமுனி
  14. வராஹமுனி
  15. கூர்மமுனி
  16. புண்ணாகீசர்
  17. கைலலசநாதர்
  18. கூன்கண்ணர்
  1. நந்தி
  2. அகத்தியர்
  3. மூலர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக் கண்ணர்
  7. இடைக்காடர்
  8. போகர்
  9. புலிக்கையீசர்
  10. கருவூரார்
  11. கொங்கணன்
  12. காலாங்கி
  13. எழுகண்ணர்
  14. அகப்பேய்
  15. பாம்பாட்டி
  16. தேரையர்
  17. குதம்பை
  18. சட்டைநாதர்

இத்தகைய எண்ணிக்கைகள் எவ்வாறு வந்துள்ளன என்று இனி மூலங்களைப் பார்ப்போம்.

நந்தி யருள் பெற்ற நாதரை நாடினின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்ற தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மருமே

(திருமந்திரம்.68)

  1. நந்தி
  2. சனகர்
  3. சனந்தர்
  4. சனாதர்
  5. சனற்குமாரர்
  6. பதஞ்சலி
  7. வியாக்ரமர்
  8. திருமூலர்

இப்பாடலை வைத்துக் கொண்டுப் பார்த்தால் – எண்மர் என்று வருகிறது. அவருடைய சீடர்கள் என அவரே குறிப்பிடுவது:

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரம்மன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ

டிந்த எழுவரும் என் வழியாமே

  1. மாலாங்கன்
  2. இந்திரன்
  3. சோமன்
  4. பிரம்மன்
  5. உருத்திரன்
  6. கந்துருக் காலாங்கி
  7. கஞ்ச மலையன்

ஆக திருமூலர் காலத்தில் 15 பேர் உள்ளனர். ஆனால், திராவிட இனவாதத்தின்படி, ஆரியர்கள் இதில் இருக்கக் கூடாது. ஆகையால் தான் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், உருத்திரன், கந்துருக் காலாங்கி, கஞ்ச மலையன் என்ற பட்டியலில், காலாங்கியை மற்றும் தேர்ந்தெடுத்துள்ளனர். சமரசம் செய்து கொண்டவர்கள் அல்லது சைவ அபிமானிகள் எண்மரை சேர்த்துக் கொண்டுள்ளனர். போகரைப் படித்து குழம்பிப்போனவர்கள் பட்டியலை தமதிச்சைகேற்றாவாறு குழப்பியுள்ளனர்.

போகர் 7000 கொடுக்கும் சித்தர்கள் பட்டியல் ஜாதகம் முதலியன: போகர் 7000 என்ற நூலில் தான் சித்தர்கள் பற்றிய அதிகமான செய்திகள் உள்ளன, சித்தர்கள் “பதினெண்மர்” என்று குறிப்பிட்டு, 40ற்கும் மேற்பட்ட சித்தர்களின் பிறந்த மாதம், நட்சத்திரம், சாதிகளையும் குறிப்பிடுகின்றது. போகருக்கு 63 சீடர்கள் இருந்தார்களாம், அவர்கள் விண்வெளியில் பறக்கும் சக்தி கொண்டிருந்தார்களாம். எல்லா சித்தர்களையும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. அதனால் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னுக்கு முரணாக எல்லோரையும் இணைக்க முனைந்துள்ளது. தசாவாரம் தெரிந்திருந்தத்தால் அந்த பத்து அவதாரப் பெயர்களை வைத்து பத்து ரிஷிக்களை உண்டாக்கியிருக்கிறது, பிறகு அவர்களும் சித்தர்கள் ஆகிறார்கள் (6868-6906). இதில் புத்தரைச் சேர்த்துள்ளது நோக்கத்தக்கது. நான்கு யுகங்கள், 1008 தீர்த்தங்கள் முதலியன சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பாடல்களை சாதாரணமாக வாசித்துப் பார்த்தாலே இது ஒரு போலிநூல் என்று தெரிகிறது. அதாவது 19/20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று தெரிகிறது.

ஆரிய-திராவிட போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சித்தர்கள்: ஜே. எம். நல்லசுவாமி பிள்ளை (1864-1920) சைவராகயிருந்து, ஆரிய-திராவிட சித்தாந்த்தை ஏற்றுக் கொண்டவர். அதனால், திராவிடம்-சைவ சித்தாந்தம், ஆரியத்தை-வேத-உபநிடதங்களைவிட சிறந்தது என்று வாதிட்டார்[1]. அத்தகைய சைவம், பிராமணர்-அல்லாத இயக்கமாக மாறி, பிராமணர்-எதிர்ப்பு இயக்கமாக உருமாறி, திராவிட மாயைக்குள் சிக்குண்டது. இதனால் சித்தர்-எழுத்தாளர்களும் உருமாற வேண்டியிருந்தது. பகுத்தறிவில் இந்துமதத்தைப் பழிக்க வேண்டிருந்தது; நாத்திகத்தில் சிவனை மறக்கவேண்டியிருந்தது. திராவிட சித்தாந்தத்தில் திருமூலர் மரபையே மறைக்க வேண்டி வந்தது. அதன்படியே, பிறகு வந்தவர்கள் தமக்குக்கிடைத்துள்ள பிரதிகள் அல்லது புத்தகங்களை வைத்துக் கொண்டு, இந்த பட்டியல்களைத் தயாரித்துள்ளனர் என தெரிகிறது. இதைத்தவிர திருமந்திர பாரம்பரியத்தை ஏற்பதா வேண்டாமா என்ற மனசஞ்சலம், குழப்பம் மற்றும் திராவிட சித்தாந்த போராட்டம் 20 நூற்றாண்டு சித்தர் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தது என்பதனையும் இது (இப்பட்டியல்கள்) எடுத்துக் காட்டுகிறது. சாமான்ய மக்களுக்குப் புரியவேண்டும் என்று இவர்கள் பாடல்களை இயற்றினார்கள் எனும் போது, மக்களிடையே பிரபலமாக இருக்கும் பெயர்களைத்தான் “சித்தர்கள்” வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்போலி பாடல்களை உருவாக்கியவர்கள் வைக்க வேண்டும். அதனால்தான், புனைப்பெயர்கள் புராணப் பெயர்களாக, ரிஷிகளின் பெயர்களாக மாற்றப்பட்டன. அப்பொழுது, எதை விடுவது, எதை சேர்ப்பது என்ற குழப்பத்தில், அவரவர் விருப்பத்திற்கேற்றப்படி பட்டியலைத் தயாரித்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது என்பது, அவர்கள் பெயர்களைக் குறிப்பிடுகின்ற பட்டியல்களே சான்றாக உள்ளன.

சித்தர்கள் எண்ணிக்கை ஒன்பதா பதினெட்டானதா?: நாத-நவநாத சித்தர்களிடமிருந்து தான், இம்மரபு வருகிறது என்றதால், வடவிந்திய நாதசித்தர்களை விட தமிழ்சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று உயர்வாகச் சொல்லிக்கொள்ள ஒன்பதை பதினெட்டாக்கியிருக்கலாம். இதனை மாணிக்கவாசகம், தெற்கில் பதினெண்சித்தர்கள் எனக்குறிப்பது போலவே வடக்கே நவநாத சித்தர்கள் எனக்குறிக்கும் மரபு உள்ளது, என்கிறார். அதாவது அவர்கள் தங்களது பட்டியலைச் சுருக்கிக் கொண்டார்கள் போலும்! 18ல் குழப்பம் உள்ளது போல 9லும் உள்ளது என்பதனை, “பதினெண்மர் யாவர் என்பதிலே கருத்து வேறுபாடு இருப்பது போல நவநாத சித்தர் யாவர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது”, என்று மூன்று பட்டியல்களைக் கொடுக்கிறார்[2].

அபிதான சிந்தாமணி எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை சட்டைமுனி பின்ஞானம் மூன்று
  1. சத்துவநாதர்
  2. சாலோகநாதர்
  3. ஆதிநாதர்
  4. அருளிநாதர்
  5. மதங்கநாதர்
  6. மச்சேந்திரநாதர்
  7. கடயேந்திரநாதர்
  8. கோரக்கநாதர்
  9. குக்குடநாதர்
  1. சத்யநாதர்
  2. சுகோதநாதர்
  3. ஆதிநாதர்
  4. அனாதிநாதர்
  5. வகுளிநாதர்
  6. மதங்கநாதர்
  7. மச்சேந்திரநாதர்
  8. கடயேந்திரநாதர்
  9. கோரக்கநாதர்
  1. திருமூலர்
  2. சண்டிகேசர்
  3. சனகர்
  4. சனந்தர்
  5. சனாதனர்
  6. சனற்குமாரர்
  7. வியாக்கிரபாதர்
  8. பதஞ்சலி
  9. சட்டைமுனி

இப்பெயர்களைப் படிக்கும்போதே, அறிவதாவது, முதல் இரண்டிலும் அதிகமான வேறுபாடில்லை மற்றும் மூன்றாவது திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை வைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. பிறகு பௌத்தத்தில் தந்திரமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் “முதல் ஆசிரியர்கள்” 84-சித்தர்கள் ஆவர் என்றுள்ளது. லாமா கோவிந்த என்பவர் இவர்களது பரிபாஷையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதனை எடுத்துக் காட்டுகிறார்[3]. பிறகு திபெத்தியர்களின்  பாரம்பரியத்தில் பூசுகபாதர் என்பவர் எப்பொழுதும் சித்தர் என்றே அவர்களின் பட்டியல்களில் காணப்படுகிறார். அவர் விஞ்ஞான, மத்யாத்மக மற்றும் வேதாந்த சித்தாந்தகளை இணைத்துப் போதிப்பவராகத் தெரிகிறார்[4]. இதையும் விஞ்சவேண்டும் இல்லையா, அதனால் பட்டியலை நீட்ட ஆரம்பித்தனர் ;போலும். இப்படி, நீண்டு கொண்டே போகும் போது, 58, 64, 84, 108 என்றும் சித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தனர்[5]. இதற்கு மேலும் யாதாவது, பிரச்சினை அல்லது குற்ரம் கண்டுபிடித்தால், எல்லாமே இதில் அடக்கம் என்பதுபோல, இன்னொரு “அனைத்தும் இதில் அடங்கும்” என்ற பட்டியல் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

1.     பதினெட்டாம்படிக் கருப்புகள்
2.     நவகோடி சித்தர்கள்
3.     நவநாத சித்தர்கள்
4.     நாத சித்தர்கள்
5.     நாதாந்த சித்தர்கள்
6.     வேத சித்தர்கள்
7.     வேதாந்த சித்தர்கள்
8.     சித்த சித்தர்கள்
9.     சித்தாந்த சித்தர்கள்
10.     தவ சித்தர்கள்
11.     வேள்விச் சித்தர்கள்
12.     ஞான சித்தர்கள்
13.     மறைச் சித்தர்கள்
14.     முறைச் சித்தர்கள்
15.     நெறிச் சித்தர்கள்
16.     மந்திரச் சித்தர்கள்
17.     எந்திரச் சித்தர்கள்
18.     மந்தரச் சித்தர்கள்
19.     மாந்தரச் சித்தர்கள்
20.     மாந்தரீகச் சித்தர்கள்
21.     தந்திரச் சித்தர்கள்
22.     தாந்தரச் சித்தர்கள்
23.     தாந்தரீகச் சித்தர்கள்
24.     நான்மறைச் சித்தர்கள்
25.     நான்முறைச் சித்தர்கள்
26.     நானெறிச் சித்தர்கள்
27.     நான்வேதச் சித்தர்கள்
28.     பத்த சித்தர்கள்
29.     பத்தாந்த சித்தர்கள்
30.     போத்த சித்தர்கள்
31.     போத்தாந்த சித்தர்கள்
32.     புத்த சித்தர்கள்
33.     புத்தாந்த சித்தர்கள்
34.     முத்த சித்தர்கள்
35.     முத்தாந்த சித்தர்கள்
36.     சீவன்முத்த சித்தர்கள்
37.     சீவன்முத்தாந்த சித்தர்கள்
38.     அருவ சித்தர்கள்
39.     அருவுருவ சித்தர்கள்
40.     உருவ சித்தர்கள்

எப்படி கற்பனைக் கொடிகட்டிப் பறந்துள்ளது என்று தெரிகிறது. இவற்றிற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதுபற்றிக் கூட கவலைப்படவில்லை.
© வேதபிரகாஷ்

02-09-2012


[1] J. M. Nallaswami Pillai (trans.), Sivagnana Botham, Madras, 1895, preface, p.iii.

[2] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், ப.139-140.

[3] Lama Anagarika Govinda, Grundlagen Tibetischer Mystick, Zurich, 1957, pp.45-46.

Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.28, 167-168.

[4] Agehananda Bharati, The Tantric Tradition, B. I. Publications, New Delhi,1976, p.29.

[5] இரா. மாணிக்கவாசகம், சித்தர்கள், பெருங்காப்பியச் சிற்றிலக்கியப் பெருந்தமிழ், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1975, ப.127-169. பக்கம்.168ல் 58 சித்தர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள்

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 3, 2012

சித்தர்கள், சித்தமருத்துவம் பற்றிய ஆராய்ச்சி

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும் புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].

ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –

  • பரம்பரை சித்த வைத்தியர்,
  • மூன்று  பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
  • கைராச்சிக்காரர்,
  • தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,

அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய  நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை.  இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].

சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.

ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.

ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.

புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?:  பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்


[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.

[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.

[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.

[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.

[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.

[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.

[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.

[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.

[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.

[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.

[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.

[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.

[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.

[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.

N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், முஹம்மது கஜினி, முஹம்மது பக்தியார் கில்ஜி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »