சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘கன்னிமாரா நூலகம்’ Category

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 3, 2012

சைவ சித்தாந்தமும், சித்தர் பாடல்களும், சித்த மருத்துவமும்

இடைக்காலத்தில் தோன்றிய சைவசித்தாந்தத்திலும், சித்து, சித்தி முதலிய வார்த்தைகள் காணப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கும் இந்த சித்தர்களும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவஞான சித்தியாரை, “சித்தர்” என்றோ, “”சித்த மருத்துவர் யாரும் கூறவில்லை. ஆகவே, சித்தியாரை சித்தராக்க முடியாது. சித்தாந்தத்தில் உள்ள சித்தி, இங்குள்ள சித்தியோடு ஒப்பிட முடியாது. பஞ்சபூதத் தத்துவம், திரிதோஷம், ஆறு சக்கரங்கள், பிரணாயாமம், யோகா முதலிவற்றை ஏற்காமல் இருந்தால், அவை சைவசித்தாந்தத்தில் இருக்க முடியாது. வேதத்தின் அந்தத்தை, முடிவை பெறும் முயற்சி போல, சித்தாந்தி – சித்தின் முடிவை – ஞானத்தின் முடிவை அறிய விரும்பினார்கள். சிவனை மறுக்கும் சித்தாந்தம் இருக்க முடியாது, அதுபோலவே சித்தர்களும் இருக்கமுடியாது. ஆகவே, “கடவுளை எதிர்க்கும், மறுக்கும் நாத்திகவாதிகள் சித்தர்கள்” என்பது பொய்யான வாதமாகிறது. திருமூலரே ஆத்திகவாதியாக இருந்து, வேத-புராணங்களை ஏற்றுக் கொண்டு, சிவபக்தராக இருந்தும், மும்மூர்த்திகளின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு, மந்திரம்-யந்திரம்-தந்திரம் முறைகளை தகவமைத்துக் கொண்டுதான் சித்தராக இருந்தார். அப்பொழுது, திருமூலரின் சித்தாந்தத்தை மறுத்து, சைவ சித்தாந்தத்தையும் வெறுத்து “சித்தர்கள்” இருக்க முடியுமா? அவர்கள் “சித்தர்கள்” ஆவார்களா?

சித்தமருத்துவ நூல்கள் தமிழ் சித்தர்களால் எழுதப்பட்டவையா?: சித்தர்களின் பெயர்களில் பற்பல மருத்துவ நூல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்தர் பெயரின் பின்னால் சாத்திரம், காண்டம், வைத்தியம், தந்திரம், சூத்திரம் என்றும், எண்கள் – 10, 20, 50, 100, 1000 என்றும் சேர்த்துக் கொண்டு பல நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் குறைவாகவே கிடைக்கப் பெற்றுள்ளன. தாதுக்கள், உப்புக்கள், கனிமங்கள் முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும் போது அவையெல்லாம் 19 அல்லது 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று நன்றாகத் தெரிகிறது. ஏனெனில் அதற்கு முன்பு, அவற்றிற்கு அத்தகைய சொல் பிரயோகங்கள் இல்லை.

அகத்தியர் ஐந்து சாத்திரம்,
அகத்தியர் கிரியை நூல்,
அகத்தியர் அட்டமாசித்து, ,
வைத்திய ரத்னாகரம்,
வைத்தியக் கண்ணாடி,
வைத்தியம் 1500,
வைத்தியம் 4600,
செந்தூரன் 300,
மணி 400,
வைத்திய சிந்தாமணி,
கரிசில்பச்யம்,
நாடி சாஸ்திரப் பசானி,
பஸ்மம்200,
கர்மவியாபகம்,
அகத்தியர் சூத்திரம் 30,
அகத்தியர் ஞானம்
திருமூலர் சல்லியம் – 1000
திருமூலர் வைத்திய காவியம் – 1000
திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
திருமூலர் தீட்சை விதி – 18
திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
திருமூலர் ஆறாதாரம் – 64
திருமூலர் பச்சை நூல் – 24
திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100.
போகர் – 12,000
சப்த காண்டம் – 7000
போகர் நிகண்டு – 1700
போகர் வைத்தியம் – 1000
போகர் சரக்கு வைப்பு – 800
போகர் ஜெனன சாகரம் – 550
போகர் கற்பம் – 360
போகர் உபதேசம் – 150
போகர் இரண விகடம் – 100
போகர் ஞானசாராம்சம் – 100
போகர் கற்ப சூத்திரம் – 54
போகர் வைத்திய சூத்திரம் – 77
போகர் மூப்பு சூத்திரம் – 51
போகர் ஞான சூத்திரம் – 37போகர் அட்டாங்க யோகம் – 24
கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500
கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 3
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21,
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9

சித்தர்களே மருத்துவ நூல்களை இயற்றினார்களா அல்லது பிறகு தயாரிக்கப்பட்ட நூல்களுக்கு, அதிகாரம், ஏற்பு மற்றும் பிரபலம் முதலிய காரணங்களுக்காக சித்தர்கள் பெயர்கள் தலைப்பாக சேர்த்திடப்பட்டனவா என்று யோசிக்கவேண்டியுள்ளது.

சைவம் வடக்கிலிருந்து தெற்கில் வந்துள்ளது என்பது வீரசைவ நூல்களினின்று தெரிய வருகின்றது. அதற்கான கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள கல்வெட்டு, கட்டிட, அகழ்வாய்வு ஆதாரங்கள் மௌரிய காலத்திற்கு முன்னாக இருந்தால் தான், இந்த வாதத்தை மறுக்க முடியும். அதாவது, உள்ள பல்லவர்காலத்து கொகைக்கோவில்கள் முதலியன அக்காலத்திற்கு முன்பாக இருந்திருந்தால், சைவத்தின் தொன்மை சங்ககாலத்திற்கு முன்பாக இருந்ததாகிறது. உண்மையில் உள்ள கல்வெட்டு, கட்டிட, சிற்பங்கள் முதலியவை நேரிடையாக தேதியிடப்படவில்லை. ஒப்பீட்டுமுறையில் தேதியிடப்பட்டுள்ளது. அந்நிலையில் சைவசித்தாஅந்தம் தோன்றிய பிறகுதான் “சித்தர்” வழக்கு வந்திருக்க வேண்டும் என்றால், அது வடவிந்திய நாதமரபிற்குப் பின்னர்தான் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இவை சித்தமருத்தப் பாடல்களா, அவற்றின் காலத்தை நிர்ணயிப்பது எப்படி?: கீழே சித்த வைத்தியர் ஒருவரால் எழுதப்பட்ட சிலபாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனையே நாதாக்க ளெல்லோருஞ் சொன்னா ரிகத்தெவர்க்கு

மிதனையே சொன்னாரியேசு கிறிஸ்து வெமதிறைவ

னிதந்தரு நாமத்தை வீணாக வுச்சரிக் கேலெனவும்

பதந்தரு நற்பரி சுத்தாவி ஞானம் படிகெனவே (297)

 

\எனவுரைத் தேவ நாமமெம்போது மியம்புகவென்றுங்

கனமுறு மிந்தனற் சத்திய வேதக் கலையுணர்ந்தோ

ரினம்பிற வாரென்றிசைத்தார் முகம்ம தெனுநபிநம்

மினமெலாம் வேதங்கீ ழாக்கி யிறந்தோ மெதிர்மறையே (298)

 

எதிராகச் செய்யு மறையோர்க் கினிப்பிறப்பில்லையென்றா

ரிதினுண்மை யெல்லா மறந்தார்கள் நூலோரெனும் பெயரின்

வதிவோ ரெலாம்பஞ்சை யானார்கள் பார்ப்பெனு மண்ணவரோ

முதிய கிழமா யிருந்திறக் கின்றார் முறையழிந்தே (299)

 

அழிந்து கெடுகின் றனர்சைவப் பேரோ ரதிகொலைசெய்

தழித்துத்தன் னான்மாவைக் சூத்திரப் பேரோரவரிடத்து

மொழியுநற் சூத்திர மில்லை கிறிஸ்தவர் முன்னுரைத்த

அழியாத தேவனன் நாம மெதுவென் றறிகிலரே (300)

 

அறிகிலட் நற்பரிசுத்தமாம் ஆவி யதுநபிமுன்

னறி வ்த்த நேர்யதி ராம்மறை யீதென் றறிதலற்று

முறையெதி ரான தவறுகள் செய்து முகம்மதியர்

நிறையற் றனருல கோரிவ் விதமென் னியாயமென்னோ (301)

 

மேலேயுள்ள பாடல்கள் எல்லாம் சித்தர்களுடைய பாடல்கள் என்று படிப்பவர்களுக்த் தோன்றலாம். ஆனால், இவை தேவக்கோட்டையைச் சேர்ந்த “வைத்தியமணி” சித.வே.ஷண்முகநாத பிள்ளை எழுதியுள்ள மீனாமிர்தம்[1] என்ற நூலில் உள்ளவை. 1887ல் பிறந்த இவர் 1947ல் இப்புத்தகத்தை வெளியிடுகிறார். அப்பொழுதே முகம்மது, ஏசு, பரிசுத்த ஆவி என்றெல்லாம் சேர்த்து எழுதியுள்ளார். இந்நூல் சித்தவைத்தியர்கள் எல்லோருக்கும், வைத்தியக் கல்லூரிகளுக்கும், பொதுவாக பூத பௌதிக தத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்தரத்தக்க சிறந்த நூல்களாக இருக்கின்றன என்று வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆகவே தமிழ் பண்டிதர்கள் அவ்வாறு எழுதக்கூடும் என்று தெரிகிறது. கிருத்துவப் பாதிரியார்கள் எப்படி தமிழ்பண்டிதர்களை வைத்துக் கொண்டு, அவ்வாறான முறையைக் கையாண்டார்களோ, அதேமுறையை “சித்தர் பாடல்கள்” உருவாக்கக் கையாண்டிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

03-09-2012


[1] சித. வே. ஷண்முகநாத பிள்ளை, உயிர் நிலைக்கலை என்னும் மீனாமிர்தம் (அருமருந்துக் கோவை சேர்ந்தது), இலக்கியப் பதிப்பகம், காரைக்குடி, 1947.

[2] சித்த வைத்திய சங்கத்தின் 13-10-1946 தேதியிட்ட கடிதத்தின்படி. சித்த வைத்திய சங்கம் (ரிஜிஸ்டர்டு), அருப்புக்கோட்டை ரோடு, மதுரை.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தந்திரம், தமிழகம், தமிழ், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, முஹம்மது கஜினி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, யோனி, ராமலிங்கம், லிங்கம், வள்ளலார், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள்

Posted by vedaprakash மேல் ஓகஸ்ட் 3, 2012

சித்தர்கள், சித்தமருத்துவம் பற்றிய ஆராய்ச்சி

சித்தர்களைப் பற்றிய பலவாரானக் கருத்துகள் நிலவி வருகின்றன, ஏனெனில் அத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மூலங்களைப் படிக்காமல் பேசுவதால், எழுதுவதால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. மேலும் “சித்தர் பாடல்கள்” என்று பிரபலமாக வழங்கிவரும் பாடல்கள் சித்த மருத்துவத்துடன், தொடர்பு கொண்டிருந்தாலும், அவை, மருந்துகள் தயாரிக்கும் முறைகளைச் சொல்வதில்லை. இதையறிமால் எழுதுவதால் தான் தமிழ் சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஏராளமாக, தாராளமாக ஆதாரங்களே இல்லாமல் பற்பல செய்திகளாகக் கொடுக்கப் பட்டு வருகின்றன[1]. மூலங்களைப் படிக்காமலே, பிரபலமாக எழுதப் பட்டுவரும் புத்தகங்களை வைத்துக் கொண்டு சமீபத்தில் வரையப் பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள சித்திரங்களை வைத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் அளவில் இணைதளங்களில் வர்ணனைகளை குவித்து வருகிறார்கள்[2]. அவையும் வேகமாகப் பரவி வருகின்றன. ஏதோ எல்லா நோய்களையும் சித்தமருத்துவம் தீர்த்துவிடும் அல்லது சித்தமருத்துவத்தில் இல்லாத தீர்வுகளே இல்லை என்பது போல எழுதி, விளம்பரப்படுத்தி வருகிறார்கள்[3].

ஆதாரங்களைக் கொடுக்காமல் எழுதப் படும் புத்தகங்கள்: சித்தர்களைப் பற்றி சித்தமருத்துவ முறையைப் பற்றி எழுதுபவர்களும் மூலங்களை – முதன்மை அல்லது இரண்டாம் வகை – கொடுப்பதில்லை[4]. எழுதுபவர் தம்மை அல்லது பதிப்பகத்தார் – ஆசிரியர் / வைத்தியர் / மருத்துவர் / சித்தவைத்தியர் / சித்தமருத்துவர் / வைத்தியத் திலகம்/ சித்தர் என்றெல்லாம் கூறிக்கொண்டு –

  • பரம்பரை சித்த வைத்தியர்,
  • மூன்று  பரம்பரையாக சித்தவைத்தியம் பார்த்து வருபவர்,
  • கைராச்சிக்காரர்,
  • தீராத நோய்களைத் தீர்த்து வைத்தவர்,

அறிமுகப்படுத்தப் படுகிறார் அல்லது அறிமுகமாகிறார். ஆனால் அவர்களுடைய  நோயாளிகளைப் பற்றியோ, அவர்கள் எவ்விதமாக சிகிச்சையளிக்கப் பட்டு, எத்தனை நாட்களில் காலத்தில் குணமடைந்தார் என்று குறிப்பிடுவதில்லை.  இருக்கும் மற்றும் புதியதாக தோன்றும் ஒவ்வொரு பதிப்பகமும் சித்தர்களைப் பற்றி, சித்தமருத்துவத்தைப் பற்றி யாதாவது ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தீருவது என்று தீர்மானமாக இருக்கிறது[5]. ஆனால், எழுதுபவரோ, எழுதும் ஆசிரியர் மற்றும் வைத்தியரோ அரைத்த மாவை அரைக்கிறாரே தவிர, புதியதாக எதையும் எழுதுவது கிடையாது. ஏதோ பத்து புத்தகங்களைப் படித்து ஒரு புத்தகம் எழுதுவது போலத்தான் எழுதி வருகிறார்கள். அதிலும் அந்த பத்து புத்தகங்களையும் குறிப்பிடுவதில்லை. உள்ள விஷயங்களை, விவரங்களை, செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கொடுக்கும் போதும் மூலங்களைக் கொடுப்பதில்லை. சில விலக்குகளும் உள்ளன[6].

சித்தர் பாடல்கள் பதிப்புகள், வெளியீடுகள்: பெரிய ஞானக் கோவை என்று சித்தர் பாடல்கள் பெரிய எழுத்துப் புத்தகங்கள் முறையில் வெளியிடப்பட்டு வந்தன. சித்தர் ஞானக் கோவை என்று மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். சமீபகாலத்தில் (1980-90களில்) எஸ்.பி. ராமச்சந்திரன்[7] என்பவர் நூற்றுக்கணக்கான சித்தர்நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆனால் மற்ற பிரதிகளை ஆய்ந்து, சரிபார்த்து, திருத்தி வெளியிடவில்லை. இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளார். பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ்[8], பிரேமா பிரசுரம் போல வெளியிடப்பட்டுள்ளன. வி. பலாரமய்யாவின் புத்தகங்களில் சில கூர்மையான அலசல்கள் உள்ளன[9]. மீ.ப.சோமசுந்தரம்[10] எழுதியுள்ள “சித்தர் இலக்கியம்” ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாகயுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, எழுதப்பட்டுள்ள புத்தகங்களில் இவற்றைக்கூடக் குறிப்பிடுவது கிடையாது. ஒருவேளை அவர்கள் இவற்றையும் பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது படித்திருக்க மாட்டார்கள் போலும்.

ஓலைச்சுவடிகள், நகல்கள், பதிப்பிக்கப்படாதவை: கோபன்ஹேகன் (டென்மார்க்), பாரிஸ் (பிரான்ஸ்), பெர்லின் (ஜெர்மனி), டப்லின் (அயர்லாந்து), ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டெர்டாம் (நெதர்லாந்து), லிஸ்பன் (போர்ச்சுகல்), லண்டன் (இங்கிலாந்து) முதலிய நாடுகளிலுள்ள நூலகங்கள் மற்றும் ஆவணக்காப்பகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள் முதலியவையுள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு எட்டப்படாத நிலையில் உள்ளன. அவற்றைப் பார்க்க, படிக்க, நகல் எடுக்க ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செல்வழிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் செலவிற்கு பயந்து, இரண்டாம்தர மூலங்களை அதாவது பதிக்கப்பட்ட புத்தகங்களை நாடவேண்டியுள்ளது. இவற்றில்தான் பாரபட்சம், விருப்பு-வெறுப்பு, சித்தாந்தம் முதலிய வேறுப்பாடுகள் வருகின்றன. அவற்றினால் உண்மைகளை மறைத்தல், திரித்து / மாற்றி எழுதுதல், வேண்டியவற்றை மட்டும் எடுத்துக் காட்டுதல் – மற்றவற்றை மறைத்தல், தமது கருத்தேற்றி எழுதுதல் முதலியவை வருகின்றன.

ஐரோப்பியர்கள் ஒலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றது: ஐரோப்பியர்களின் ஆட்சி காலங்களில், தென்னிந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்கள், மரப்பட்டை நூல்கள், துணிப் படங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியன அவரவர் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிலுக்கு கையினால் காகிதங்களில் எழுதப் பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டன. ஆனால், எடுத்துச் செல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் நகல்கள் அவ்வாறு எழுதிவைக்கப் படவில்லை. மெக்கன்ஸி சேகரிப்பே அதற்கு ஆதாரம். இருப்பினும் ஆற்றில் ஓலைச்சுவடிகளைப் போட்டார்கள், அதனால், தமிழ் நூல்கள் பல அழிந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. அந்நியர்கள் அவ்வாறு எடுத்துச் செல்லாமல் இருக்க ஆற்றில் போட்டார்களா, பழைய செல்லரித்த ஓலைகளைப் போட்டார்களா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. கடந்த 100-200 ஆண்டுகளில் சித்தர்களின் பெயரில் பற்பல போலி நூல்கள் எழுதப் பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சில குழுமங்கள் ஆவணக் காப்பகங்கள் முதலிய இடங்களினின்றே அத்தகைய போலிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளன. இன்றும் அத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலங்கள், மூலப்பிரதிகள், பிரதிகளின் நிலை: சித்தர் பாடல்களின் அச்சிட்டப் புத்தகங்களைப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலப்பிரதிகள் எங்குள்ளன என்று கீழைத்திசை நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், கன்னிமாரா நூலகம் முதலிவற்றில் சென்று பார்த்தால், பெரும்பாலானவை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளவையாகவே உள்ளன[11]. ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளும் சமீபத்தில் எழுதப்பட்டுள்ளவை என்று, எழுதியுள்ள முறை, உபயோகப்படுத்தப் பட்டுள்ள ஓலை, எழுதுகோலின் கூர்தன்மை முதலியவற்றிலிருந்து தெரிகிறது[12]. இடைக்கால ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழைப் படிப்பது கடினம், வரிகள் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் பிரித்துப் படித்தப் பின்னரே, செய்யுளின் அடிகள், கிரமம் முதலியவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்[13]. ஆனால், இவற்றில் சுலபமாக, புத்தகத்தைப் பார்த்துப் படித்தபைப் போல படித்தறிய முடிகிறது. அதாவது, இப்பொழுதிலிருந்து (2012), கணக்கிட்டால் சுமார் 100-150 ஆண்டு காலத்தில் – 1850-1910 காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாசகாச சிகிச்சை, வாதரோக சிகிச்சை, கர்ப்பிணி பாலரோகம், மாடுகள்-குதிரைகள்-லட்சணம் வைத்தியம், சித்த மருத்துவச் சுடர், கர்ப்பிணி ரக்ஸா, முதலிய நூல்களை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றைப் படித்துப் பார்க்கும் போது, இந்த “சித்தர்” பாடல்களுக்கும், இந்நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கிடைத்துள்ள விவரங்களை பாட்டுபோல் எழுதிவைத்துள்ளனர் என்று தெரிகிறது.

புரட்டு-போலி-மோசடி “சித்தர் பாடல்கள்” என்று உலவி வருவதைத் தடுப்பதெப்படி?:  பி. வே. நமச்சிவாய முதலியார், தமது தமிழ்மொழி அகராதியில் குறிப்பிட்டுள்ளது[14], “இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன. இவர்களால் செய்யப்பட்ட நூல்களென்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்”. இதற்கு பொ. பாண்டித்துரைத்தேவர், பூவை. கலியாணசுந்தரமுதலியார், முதலியோர் சிறப்பித்து அணிந்துரை பாடல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது[15]. அதாவது 1911 காலத்திலேயே, தமிழ் பண்டிதர்கள் அவற்றை “யாவரோ சாமானியர் பாடிய புரட்டு நூல்களேயாம்” என்று தீர்மானித்து ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவற்றை உண்மை நூல்கள் போன்று, திரிபு விளக்கங்கள் கொடுத்து “சித்தர் பாடல்கள்” என்று இன்றளவும் பலர் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையறிந்து செய்கிறார்களா அல்லது வியாபாரத்திற்காகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே, சித்தர் இலக்கியம், சித்தர் பாரம்பரியம், சித்த மருத்துவம் முதலியை காக்கப் படவேண்டுமானால், இத்தகைய புரட்டு நூல்கள் வெளியிடப்படுவதை தடை செய்ய வேண்டும். அத்தகையோர் உண்மையறிந்து, தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் “சித்தர்” என்று அடைமொழியை உபயோகித்துக் கொண்டு அத்தகைய போலி-புரட்டு பேச்சு, எழுத்து, ஆராய்ச்சி செய்பவர்களையும் மற்றவர்கள் அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்


[1] சித்தர் ஆரூடம், சித்தர் ஜோதிடம், சித்தர் நெறி, சித்தர் தத்துவம், சித்த மருத்துவ பச்சிலைகள், சித்தர் பரிபாஷை, சித்தர் கையேடு…..என்று “சித்தர்” மற்ரும் “சித்த மருத்துவ” அடைமொழிகளோடு உருவாக்கபட்ட சொற்றொடர்கள் தலைப்புகளாக் கொண்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடந்த 70 ஆண்டு காலத்தில் தோன்றியுள்ளன.

[2] பல இணைதளங்கள் சித்தர்களைப் பற்றி, சித்தர்மருத்துவத்தைப் பற்றி இணைதளங்களில் அதிகமாகவே விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கம் போல மூலங்களைக் கொடுக்காமல், மற்றவர்களின் எழுத்துகளை, கருத்துகளை, தமது போல வெளியிட்டு வருகிறார்கள்.

[3] Weiss, Richard S, Recipes for Immortality – Medicine, Religion and Community in South India, , Oxford University Press, USA, 2008, pp.3-4.

[4] படிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதனால், அவ்வாறு எழுதுகிறார்களா அல்லது மூலங்களைக் கொடுத்தால், தமது கையாண்ட முறை தெரிந்துவிடும் என்று தயங்குகிறார்களா அல்லது அவை இல்லவேயில்லையா என்ற சந்தேகங்களும் எழவேண்டிய நிலையுள்ளதால், மூலங்களைக் கொடுப்பது நல்லது.

[5] நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அவ்வாறு நூற்களை வெளியிட்டுள்ளதால் அவற்றைக் குறிப்பாக பெயர் சொல்லி எடுத்துக் காட்டவில்லை.

[6] சீ. கல்யாணராமன், பா. கமலக்கண்ணன் எழுதியுள்ள புத்தகங்களில் குறிப்பாக முக்கிய விஷயங்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்கள். வானதி பதிப்பகம் (17, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017) பின்னவருடைய நூல்களை வெளியிட்டுள்ளது. கல்யாணராமன் தானே வெளியிட்டுள்ளார் – 1, 35வது தெரு, நங்கநல்லூர் காலனி, சென்னை – 600 061.

[7] தாமரை நூலகம், 7, என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை – 600 026.

[8] பி. இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ், 25, வெங்கட்ராமர் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை – 600 079.

[9] அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, சஞ்சீவி நகர், அரும்பபக்கம், சென்னை – 600 106.

[10] மீ.ப.சோமசுந்தரம், சித்தர்இலக்கியம்(இரண்டு பகுதிகள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1988.

[11] மெக்கன்சி ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்துச் சென்றான். பிறகு மூன்றில் ஒருபங்குதான் திரும்பக் கொடுக்கப்பட்டது. அவற்றிலும் பல பிரதிகளே. ஆங்கிலேயர் காலட்திலேயே, காகிதத்தில் பிரதியெடுக்கும் வேலை ஆரம்பித்தது.

[12] சாதாரணமாக, முறையாக பதப்படுத்தி, முறையான எழுதுகோல் மூலம், எழுதும் திறமையுடையவர்களால் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரம் ஆண்டு காலம் வரை இருக்கும். ஆனால், புதிய ஓலைச்சுவடிகளில், சமீபத்தில் எழுதியிருந்தால், அதனைத் தொடும்போது, நுகரும்போது காட்டிக் கொடுத்துவிடும். இப்பொழுது பதப்படுத்த ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

[13] இவையெல்லாம் முறையான அத்தகைய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தமிழ் பண்டிதர்கள் முதலியோர்களால் தான் முடியும். எல்லோரும், தமிழ் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லோரும், படித்து அர்த்தமும் தெரிந்து கொள்ளலாம் எனும்போது, அதன் ககலத்தைக் கட்டிக் கொடுத்துவிடுகிறது.

[14] P. V. Namasivaya Mudaliar, The Coronation Tamil Dictionary – A guide indispensable to Tamil Professors and scholars, Madras, 1911, p.626.

[15] இத்தமிழ் அகராதி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு நமச்சிவாய முதலியார் அவர்களால் 1911ல் ஆங்கில அரசன் “இந்திய சக்கவர்த்தியாக” முடிசூட்டிக் கொண்டதன் நினைவாக வெளியிடப்பட்டது. பிறகு ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் என்ற பதிப்பகம், அதனை நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி என்று வெளியிட்டு வருகிறது.

N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi, Asian Educational Srvices, New Delhi, 1992.

Posted in அக்னி, அண்டம், அறிவு ஜீவி, ஆகாயம், ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆரியன், ஆரியம், இதயம், இந்திரியம், உ. வே. சுவாமிநாத ஐயர் நூலகம், உடல், உயிர், ஓலை, ஓலைச்சுவடி, கண், கந்தகம், கனிமம், கன்னிமாரா நூலகம், கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காது, காமாக்கியா, காயம், காற்று, கால், கீழைத்திசை நூலகம், கை, கைராச்சிக்காரர், சக்தி, சத், சிதம்பரம், சிதர், சிதார், சித், சித்தம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்து, சிந்தனை, சுவடி, சூபி, செவி, சோர்வு, தங்கம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், தேவி, நகல், நரம்பு, நாகரிகம், நாடி, நாட்டு மருத்துவம், நாதசித்த மரபு, நாத்திகம், நினைவு, நிம்மதி, நிலம், நீர், நுண்ணிய அறிவு, நெருப்பு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பாதம், பாதரசம், பாரம்பரியம், பிண்டம், பிரதி, பீர், புத்தகம், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, மந்திரம், மனச்சிதைவு, மனப்பாங்கு, மனம், மபப்பாங்கு, மருந்து, மறைமலை அடிகள், முஹம்மது கஜினி, முஹம்மது பக்தியார் கில்ஜி, மூக்கு, மூச்சு, மூலம், மூளை, யோகா, யோசனை, வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 Comments »