சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘திபெத்’ Category

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

ஜைனசித்தர்கள் – ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 9, 2012

ஜைனசித்தர்கள்ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

ஜைனர்காலத்தில்இருந்தமருத்துவமனைகள்: காஷ்மீரத்தை மையமாகக் கொண்டு சுமார் 1800 BCE வாக்கில் ஆட்சி செய்த அசோகன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். ஆனால், அவன் காலத்தில் சைவம் ஓங்கியிருந்தது. இமயமலை சார்ந்த மக்கள் சிவனை வழிப்பட்டு வந்தனர். இதனால் சிவனை ஆதாரமாக மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் பெருகின. அதனால் தான், இமயமலையைச் சுற்றியுள்ள நாடுகளில் கிழக்கே – திபெத், சைனா; தெற்கே நேபாளம், காஷ்மீரம்; மேற்கே ஆப்கானிஸ்தான் (காந்தாரம்), மத்தியாசிய நாடுகள் (துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்[1]), வடக்கே திபெத்-சீனா பகுதிகள்- இங்கெல்லாம் சிவலிங்கங்கள், அதிலும் மூன்றுமுக, நான்குமுக லிங்கங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் மருத்துவமுறைகளில் வளர்ந்தன. மருத்துவமனைகளும் பெருகின. “கபாலிகர்” என்றழைக்கப்பட்ட, இங்கிருந்த மருத்துவர்கள், அறுவைசிகிச்சை வல்லுனர்கள் தலை-மூளை-மனம் சம்பந்தப்பட்ட நோய்கள், வியாதிகள் முதலியவற்றில் சிறந்து விளங்கினர்.

ஜைன-அசோகன் காலத்தைய மருத்துவமனைகள்: மண்டையோடுகளில் ஓட்டைப் போட்டு சிகிச்சை நடத்தினர். இதற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. லோதல், ஹரப்பா, காலிபங்கன், காஷ்மீர் முதலிய இடங்களில் கிடைத்துள்ள சுமார் 4300 YBP / 2300 BCE ஆண்டுகள் காலத்தைய பழங்கற்கால மனிதனின் மண்டையோடுகளில் மிகநுண்ணிய துளைப்போடும் கடைசல் ஊசி மூலம் போடப்பட்ட துளைகள் காணப்படுகின்றன. இதற்கு ட்ரெபினேஷன்[2] (Trepenation) என்று பெயர் அதாவது ஒருவிதமான மண்டையோட்டு (Cranial surgery) ரணச்சிகிச்சை, மூளை அறுவைசிகிச்சை[3] / ஆபரேஷன் ஆகும்[4]. ஆகவே, இத்தகைய அறுவைசிகிச்சை நடத்த மருத்துவமனைகள் இருந்தது திண்ணம். சுமார் 300-250 BCEயில் அசோகர் மிருகங்ளுக்குக்கூட மருத்துவமனைகள் கட்டினான் என்று அவனது கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும்போது, அவருக்கு 2000 வருடங்களுக்கு முன்பு மருத்துவமனைகள் இல்லாமல் இத்தகைய அறுவைசிகிச்சைகள் நடந்தனவா? இல்லை, அவையெல்லாம் “சித்து”வேலையா, சித்தர்கள் மாயையா? தலை-மூளை-மனம் நோய்கள் எல்லாமே மனபாதிப்பு, மனச்சிதைவு போன்ற மனநோய்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளன. சித்தம் பிடித்தவர்கள், சித்தப்பிரமைப் பிடித்தவர்கள், பைத்தியம் அல்லது பித்தம் பிடித்தவர்கள் என்றெல்லாம் அத்தகைய நோயாளிகள் அழைக்கப்படுவர். அதனால்தான் அத்தகைய நோய்களைத் தீர்ப்பவர்கள் “சித்தர்கள்” என்ரு அழைக்கப்பட்டார்களா? கீழே ஜைனமத சித்தர்கள் அத்தகைய சித்த, சித்த-புத்த, புத்த-சித்த போன்ற பெயர்களைக் கொண்டிருந்ததைக் காணவும்.

 

ஜைனமத சித்தர்கள்: ஜைனமரபில் சித்தர்கள் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜைனத்தில் யார் சித்தராக முடியும் என்று சரத்துகளைக் குறிப்பிடுகிறது. அதன்படி ஒரு பட்டியலையும் கொடுக்கிறது[5].

  1. ஜீனசித்தா – ரிஷபதேவ, அஜித்நாத், சாந்திநாத், நேமிநாத், பாஷ்வநாத, மஹாவீர முதலியோர்.
  2. அஜீனசித்த – கௌதமசாமி.
  3. தீர்த்தநாத – பொதுவான பெயர்.
  4. அதீர்த்தநாத – மருதேவமாதா.
  5. கிருஹஸ்தலிங் சித்த – சக்கரவர்த்தி பரத.
  6. அன்யலிங் சித்த – வக்கக்சிரி.
  7. ஸ்வலிங் சித்த – முனி ஸ்ரீ பிரசன்னசந்திர.
  8. புருஷலிங் சித்த – சுதர்மசுவாமி.
  9. ஸ்திரீலிங் சித்த – சந்தன்பால, மிருகவதிஜி,.
  10. நபுசங்க்லிங் சித்த – கன்கேயமுனி.
  11. ப்ரத்யேக் சித்த – கர்கண்ட் முனி.
  12. ஸ்வயம்புத்த சித்த – கபில் கேவலி.
  13. புத்த போதித் சித்த – கௌதம முனி, வாயுபூதி.
  14. ஏக் சித்த – மஹாவீரசுவாமி.
  15. அநேக் சித்த – ரிஷபதேவ முதலியோர்.

இதெல்லாம் ஆண்-பெண்-ஆணல்ல-பெண்ணல்ல-ஆணும்-பெண்ணும் சேர்ந்தது என்ற ரீதியில் உள்ளது. சித்த, புத்த-சித்த போன்ற பெயர்களையும் கவனிக்கவும்.  ஒருவேளை இவர்கள் எல்லோரும் பாலியல் நோய்கள் தீர்க்கும் சித்தர்களா? ஜைன மதத்தில் சம்சார சாகரத்தில் இருந்து விடுபட்டு, கடுமையான நியமங்களைப் பின்பற்றி முக்தி நிலையை முயற்சித்தவர்கள், அடைந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப் பட்டனர். இங்கும் “தீர்த்தங்கரர்” என்ற நிலையடைந்தவரை அவ்வாறு ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் ஜைனவிதிகளைப் பின்பற்றாத, “சித்தபுத்ர” என்பவரைப்பற்றிக் குறிப்பிடும்போது[6], அவர்கள் வெண்ணிற உடையை அணிந்திருக்கவேண்டும், தலையை மழித்து குடுமி வைத்திருக்க வேண்டும், கையில் கொம்பு, பாத்திரம் இல்லாமல் செல்லவேண்டும் என்றும் ஜைனநூல்கள் குறிப்பிடுகின்றன.

மனிதர்கள், சித்தர்கள், சர்வத்த சித்தர்கள்: ஜைனநூல்கள் உயிருள்ள-உயிரற்றவைகளை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. அவற்றில், ஐந்து எந்திரியங்கள் உள்ளவற்றை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. ஆனால் மனிதர்களில் மேம்பட்டவர்களை எந்திரியங்களை வென்றவர்கள் கர்மங்களை அழித்தவர்கள் இந்திரஜித்துகளாகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே – உடலையும் சேர்த்து – தேவையில்லாததாகிறது. காற்றைவிட இலேசாகிறார்கள். அதாவது அவர்கள் எல்லாவற்றையும் இழந்து உயிரற்ற ஜடமாகிறார்கள். உண்மையில் ஜைனர்கள் வடக்கிருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் உடலைவிட்டு இறக்கிறார்கள். பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறார்கள். சாகாநிலையை அடைகிறார்கள். இருப்பினும் தம்முடையத் தனித்தன்மையை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். இறந்தும் (ஜீவன்முக்தர்களாக) இருக்கிறார்கள். அவற்றில் சித்தர்கள் வருகிறார்கள்[7]. அவர்கள் மனிதர்களைப் போலவே இருந்தாலும், எப்படி தமது குணாதசயங்களால் மாறுபட்டுள்ளார்கள் என்றும் விளக்குகின்றன. இப்படித்தான் “அரிஹந்தர்”, சித்தர்கள் ஆகிறார்கள்[8]. “அரிஹந்தர்” சித்தர்களுக்கு மேலே வைக்கப்பட்டாலும், அவர்களையும் விட தங்களுடைய துறவினால் மேனிலையை அடைகிறார்கள். சித்தர்களுள் உயர்வானவர்களை “சர்வத்த சித்தர்” என்றும் குறிப்பிடுகின்றன. அதற்கேற்றாற்போல அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள், பேரண்டவியலில் இடத்தில் வைக்கப்படுகிறார்கள். இத்தகைய நிலை, உடல்-மூச்சு கலைகளினால் அடைவது. ஆனால், இடைக்காலத்தில் மருந்துகளை உட்கொண்டால் இத்தகைய நிலையை அடையலாம் என்று திரித்து எழுதப்பட்டது. அதனால்தான், பொய்யான நிலையேற்ப்பட்டது.

தசாவதாரம், 12 ராசிகள் போன்ற பிரிவுகள்: ஜைனத்தில் இருந்த 24 தீர்த்தங்கரர்களின் குறிப்பு, சமவய என்ற கல்பசூத்திரம் மற்றும் அவஸ்யக நிருக்தி நூல்களில் காணப்படுகின்றன[9]. அவர்களுக்கான அடையாளச் சின்னங்களும் கொடுக்கப்பட்டுள்ளன[10]. அவை பின்வருமாறு:

தீர்த்தங்கரின் பெயர்

அடையாளச் சின்னம்

  1. ரிஷப, இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த, முதல் ஜீனர்.
எருது
  1. அஜிதா, ஜிதாசத்ருவின் மகன்
யானை
  1. சம்பவ, ஜிதரியின் மகன்
குதிரை
  1. அபிநந்தன, சம்பரனின் மகன்
 குரங்கு
  1. சுமதி, மேகவின் மகன்
பறவை
  1. பத்மபிரபா, ஸ்ரீதருடைய மகன்
தாமரை
  1. சுபர்ஸ்வ, ரதிஸ்தவின் மகன்
ஸ்வஸ்திக
  1. சந்திரபிரப, மஹாசேனவின் மகன்
சந்திரன்
  1. புஸ்பானந்தா / புஸ்பானந்தா, சுப்ரியாவின் மகன்
முதலை
  1. சீதல, திருதராஷ்டரனின் மகன்
ஸ்ரீவத்ஸ
  1. ஸ்ரீரேயா / ஸ்ரீயன்ஸா, விஷ்ணும்வின் மகன்
காண்டா மிருகம்
  1. அசுபூஜ்ய, வசுபூஜ்யவின் மகன்
எருமை
  1. விமல, கீர்த்திவர்மணனின் மகன்
கரடி
  1. அனாத/அனாதஜித், சிம்மசேனாவின் மகன்
கழுகு
  1. தர்மா, பானுவின் மகன்
இடி
  1. சந்தி, விஸ்வசேனாவின் மகன்
கலைமான்
  1. குந்து, சூராவின் மகன்
ஆடு
  1. அர, சுதர்ஸனனின் மகன்
நந்தியவர்த
  1. மாலி, கும்பவின் மகன்
ஜாடி
  1. முனிசுவர்தா, சுமித்ராவின் மகன்
ஆமை
  1. நிமி, விஜயாவின் மகன்
நீலத்தாமரை
  1. நேமி/அரிஸ்தநேமி, சௌத்ரஜ்யாவின் மகன்
சங்கு
  1. பார்ஸ்வ/பார்ஸவநாத, அஸ்வசேனனின் மகன்
ஐந்தலை நாகம்
  1. வர்த்தமான/மஹாவீர, கடைசி ஜீனர், சித்தார்த்தரின் மகன்
சிங்கம்

இப்பெயர்கள் மற்றும் அடையாளச்சின்னங்களைக் கூர்ந்து கவனித்தால், தசாவதாரத்தை ஒத்திருப்பதுடன், அவற்றை வானவெளி மண்டலத்தின் 24/12 பிரிவுகள் மற்றும் நாட்காட்டியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த தசாவதாரத்தை காப்பியடித்து, 19-20 நூற்றாண்டு சித்தர்பாடல்களை எழுதியிருப்பதைக் காணலாம்[11].

சைவஜைனபௌத்தப்பிரிவுகள்ஏன்வந்தன?: இந்திய மருத்துவ வல்லுனர்கள் மந்திரம்-தந்திரம்-யந்திரம் என்ற பிரிவுகளில் அவரவர் கடமைகளை, வேலைகளை செய்து வந்தனர். ஆனால், ஜைன-பௌத்த மதங்கள் வளர ஆரம்பித்தபோது, இவை எல்லோரும் பின்பற்றி வரும் நிலை ஏற்பட்டது. வேதகாலத்தில் பெண்கள் வேதங்களை உருவாக்கியதுடன், படித்தும், போதித்தும் வந்தனர். ஆனால் ஜைன-யோகினியர் தந்திரங்களில் ஈடுபட்டபோது, பாலியல் ரீதியல் தவறுகள், பிறழ்ச்சிகள், குழப்பங்கள் ஏற்பட்டன. விஹாரங்களில் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன. இதனால் யோகினி / ஜோகினியர் தனித்து வைக்கப்பட்டனர். அவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. அதாவது சக்திவழிபாட்டு முறைகள் திரித்து விளக்கம் அளித்தமையால் இந்நிலை ஏற்பட்டது. இதனால்தான், 64 / 84 யோகினி / ஜோகினி கோவில்கள் மக்கள் வசிக்கும் இடங்களினின்று தூரத்தில் இருக்கின்றன. பிறகு வந்த புத்தர் இதனால்தான், பெண்களை பிட்சுனிகளாக சங்கத்தில், புத்ததர்மத்தில், விஹாரங்களில் சேர்க்கக்கூடாது என்று ஆணையிட்டார். ஆனால், ஆனந்த என்ற அவருடைய சீடர், வேண்டிக் கொண்டு விலக்குப் பெற்றார். இதனால்தான் இவ்விரு மதங்களும் ஆதிக்கத்தில் இருந்தாலும், மதரீதியில் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளமுடியவில்லை. சந்திரகுப்த மௌரியர் ஜைனராக இருந்தாலும், ஜைனம் வலரவில்லை. அசோகர் புத்தமதத்தை பரப்பினலும், இந்தியாவில் வளரவில்லை. பிறகு இடைக்காலத்தில் ஜைன-பௌத்தர்களால் முஸ்லீம்களையும் எதிர்கொள்ளமுடியவில்லை.

© வேதபிரகாஷ்

08-09-2012


[1] ருஷ்ய கூட்டணி உடைந்த பிறகு, இவையெல்லாம், இப்பொழுது தனி நாடுகளாகியுள்ளன. முன்பு பாரதத்திலிருந்து சைனாவிற்கு இமயமலையை மேற்கு-வடமேற்கு திசைகளில் சுற்றி செல்ல ஏற்படுத்தப் பட்ட பாரம்பரிய வழி “பட்டு வணிகப் பாதை” (Silk Road) என்று சொல்லப்பட்டது. அவ்வழிகளில் இந்நாடுகள் உள்ளன. இங்கு Marc Aurel Stein (1862-1943), A. F. Rudolph Hoernle போன்றோர் பல அகழ்வாய்வு ஆதாரங்கள், அத்தாட்சிகளை கண்டெடுத்துள்ளனர்.

[2] The trepanation, also called trephination or trephining, had been the oldest craniotomic surgical procedure practised by mankind since the Stone Age by way of drilling or cutting through the skull vault of a living or recently deceased person.

[3] A. R. Snnkhyan and G. R. Schug, First evidence of brain surgery in Bronze Age Harappa, CURRENT SCIENCE (scientific correspondence), VOL. 100, NO. 11, 10 JUNE 2011, pp. 1621-1622; http://www.currentscience.ac.in/Volumes/100/11/1621.pdf

[4] Maria Mednikova, Post-mortem Trepenations in Central Asia: Types and Trends, in Kurgans, Ritual sites and Settlements: Eurasian Bronze and Iron Age, pp.269-279.

[6] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Munshiram Manoharlal Publishers, New Delhi,  1984, p.317.

[7] Walther Schubring, The Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, pp.97-98, 246, 279, 329.

[8] Sancheti Asoo and Bhandari Manak Mal, First Steps to Jainismwith Thirty two Plates (Part one), M. Sujan Mal Ugam Kanwar Sancheti Trust, Jodhpur, 1995, p.81.

[9] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Mushiram Manoharlal, New Delhi, 1984, pp.3-4.

[10] Colebrooke’s Essays, Vol.II, p.187; Asiatic Researches, Vol.IX, p.305; Burgess, In Indian Antiqyary, 1873, Vol.I, p.134.

[11] 19-20 நூற்றாண்டு “திராவிட சித்தர்கள்” மட்டுமல்ல, 17-18 நூற்றாண்டு கிருத்துவர்கள், 14-15 நூற்றாண்டு முஸ்லீம்கள் கூட அத்தகைய தசாவதார தத்துவத்தைக் காப்பியடித்து தத்தம் மதங்களில் தகவமைத்துக் கொண்டுள்ளனர். இதெல்லாம் பெரும்பான்மையான இந்துக்களைக் கவர மேற்கொண்ட முயற்சிகள் தாம்.

Posted in அறுவை சிகிச்சை, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், காபாலிகம், கிர்கிஸ்தான், சீனா, சைனா, சைவம், ஜோகினி, ஞானம், ஞானி, தஜிகிஸ்தான், திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், நிர்வாணம், மத்திய ஆசியா, யோகினி, ராஜஸ்தான், வாரணாசி, வீரசைவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பாரதத்தில் – பழங்கால இந்தியாவில் சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 5, 2012

பாரதத்தில் – பழங்கால இந்தியாவில் சித்தர்கள்

இப்பொழுது இந்திய சித்தர்களின் பாரதம் ஒன்றாகாது: சித்தர்கள் பல சமூகங்களை, இனங்களை, நாடுகளை சேர்ந்தவர்கள் என்றவுடன் அவர்கள் இனம்-மொழி-சாதி முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியா வேறு, பாரதம் வேறு என்றெல்லாம் திராவிடவாதிகள், பிரிவினைவாதிகள், இந்தியவிரோதிகள் எழுதிவருகிறார்கள்[1]. ஆனால், தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள “பாரதம்” பற்றிக்கூட அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையே[2]. 3000, 2000, 1000, 500 வருடங்களுக்கு முந்தைய பாரதமும் இன்றைய இந்தியாவும் ஒன்றல்ல என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அதாவது 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தனர்[3]. சோழர்கள் இந்தியாவின் கிழக்குக்கடற்கரை வழியாக சீனா வரை ஆதிக்கம் செல்லுத்தி வந்தனர். அதும்ட்டுமல்லாது, தென்மேற்குதிசையிலுள்ள நாடுகளை வென்றதால், இந்திய கலாச்சாரம், பண்பாடு, பரம்பரை, நாகரிகம் அங்கும் பரவியிருந்தன[4]. அவர்கள் காலத்திலும் மற்றும் அந்த  3000, 2000 வருட காலங்களிலும் மருத்துவமுறை சிறந்து விளங்கியிருந்தது. கோவில் வளாகங்களில் மருத்துவமனைகள் செயல்பட்டு வந்தன. அவற்றையெல்லாம் மறந்து, பின்னால் வந்த மருத்துவமுறையை, முன்னால் எடுத்துச் செல்வதால், சரித்திர ஆதாரங்கள் எடுத்துக் காட்டிவிடும்.

அப்பொழுது சித்தர்கள் இருக்கும்போது, சங்க இலக்கிய “பல்மொழிதேயத்தோர்” நியதியில் பலமொழிகளைப் பேசியிருப்பர்[5]. பல இடங்களுக்குச் சென்றிருப்பர். ஆனால், மக்களிடையே ஒரு இணைப்பு மொழி ஒன்று இருந்திருக்க வேண்டும்[6]. பிறகு படிப்படியாக இடைக்காலத்திலிருந்து இஸ்லாம், கிருத்துவ மதங்கள் வளர்ந்து பாவ ஆரம்பிக்கும் போது, அந்த பழங்கால பூகோள எல்லைகள் குறைய ஆரம்பித்தன, சுருங்கவும் செய்தன. தனிமைப்படுத்தப்பட்ட பழங்கால இந்தியர்கள் அல்லது இந்துக்கள் அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் மற்ரும் தென்மேற்காசிய நாடுகளில் வாழ நேர்தது. ஆகவே, தனிமைப்படுத்த மற்றும் குறுகிய இடக்கால பாரதத்தில், அதற்கேற்றமுறையில் அவர்கள் பின்பற்றி வந்த மருத்துவமுறைகளும் மாற ஆரம்பித்தன. பரவியிருந்த பாரத மக்களின் முறைகளும் மாற ஆரம்பித்தன. அவ்வாறு ஏன் அப்படி ஒருகாலக்கட்டத்தில் வேறுபடவேண்டும் என்று இக்கால எழுத்தாளர்கள் ஆராய்ச்சி செய்வதில்லை. இருக்கும் நூல்களை முழுமையாகப் படித்துப் பார்த்தால், அவையெல்லாம் குறிப்பிட்ட பொதுவான கலாச்சாரம், பண்பாடு, பரம்பரை, சம்பிரதாயம், மூலங்களை ஏற்றுக் கொள்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பிறகு காலக்கிரமமாக மாறுபடுகின்றன.

பாரத்தத்தின் பண்பாடு, பாரம்பரிய கூறுகள் சித்தர்களின் பண்பாடு, பாரம்பரிய கூறுகள் முதலியவை சரித்திர ரீதியில் வெவ்வேறா?: பாரதம் அல்லது இந்தியா முழுவதும் ஒரு குறிப்பிட்ட மருந்துவமுறை இருந்து வந்துள்ளது. வேத, ஜைன, பௌத்த காலங்களில் சமஸ்கிருதம் போதனாமொழி அல்லது பல்கலைக்கழகங்களில் சிறப்புப் படிப்புகள் படிக்க பொது மொழியாக உபயோகப்படுத்தப் பட்டு வந்துள்ளமையால் தான், மூலநூல்கள் சமஸ்கிருதத்தில் காணப்படுகின்றன. இன்றும் திபெத்திய, சைன மொழிகளில் உள்ள ஆவணங்கள் அத்தகைய உண்மையினைக் காட்டுகின்றன. அவை “சித்தர்கள்” பற்றிய ஆவணங்கள் மற்றும் சித்திரங்கள், சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றையும் வைத்திருக்கின்றனர். இதனால், சமஸ்கிருதத்தை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று சித்தர் நூல்களை படித்தால், சமஸ்கிருத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அறியாமல், அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்று எந்த படிக்கின்ற மாணவன், சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியன் அல்லது ஆராய்ச்சியாளன் எளிதாகத் தெரிந்து கொள்வான். ஆகையினால் சித்தாந்த ரீதியில் அல்லது அரசியல் போக்கில் மொழிரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திக் கொண்டால், உண்மையினை அறிய முடியாது.

சங்ககாலத்தில் இருந்த மருத்துவம் சித்த மருத்துவமா?: சங்ககாலத்தில் மக்கள் வாழ்ந்தபோது, நிச்சயமாக ஆரோக்யமான, நோயற்ற வாழ்விற்கு ஒரு மருத்துவமுறை இருந்துள்ளது[7]. ஆனால், அது “சித்த மருத்துவம்” என்றில்லை. பிறகு ஏன் திராவிடர்கள் “திராவிட மருத்துவம்” பின்பற்றவில்லையென்று, சிந்தித்துப் பகுத்தறிவுவாதிகள் கேட்டுப் பார்க்கவில்லை. “திராவிடர்கள்” சங்ககாலத்தில் இல்லாதபோது, “ஆரியர்கள்” எப்படி இருந்தார்கள் என்றும் அவர்களது நுண்ணறிவு வேலை செய்யவில்லை. அந்த “ஆரியர்கள்” கழைக்கூத்து ஆடினார்கள், கயிற்றின் மேலே நடந்தார்கள்; வித்தைக் காட்டினார்கள்; தெரியாத மொழி பேசினார்கள்; யானைகளுடன் பேசி, யானைகளைப் பிடித்து, வளர்த்தார்கள், முனிவர்களைப் போல இருந்தார்கள் என்றெல்லாம் “திராவிடப் புலவர்கள்” எழுதிவைத்திருப்பதால், அவர்கள் தாம் “சித்தர்கள்” என்று கூறிவிடமுடியுமா? யானைகளுக்கு வைத்தியம் பார்த்தது போல, தமிழர்களுக்கும் வைத்தியம் பார்த்தார்கள் என்று சொல்லமுடியுமா? இல்லை அப்படித்தான் ஆயுர்வேதத்தையும், சமஸ்கிருதத்தையும் நுழைத்தார்களா? உடனே இனமான, வீரதீரசூர “திராவிடர்கள்” ஒன்றும் அறியாமல் ஏற்றுக் கொண்டு விட்டனரா? ஆகவே, எந்த ஒரு மருத்துவமுறையினையும் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது; எந்த ஒரு மதம், சாதி, இனம் முதலியவற்றுடன் தொடர்புப் படுத்திக் காட்டக் கூடாது. எல்லாவற்றையும் படிக்கும் போது நிச்சயமாக, அவற்றில் பொதுவாக இருப்பது, அதேபோல இருப்பது, கண்டுபிடிப்புகளில் முன்னது-பின்னது என்பனவற்றை உன்னிப்பாக, காலக்கிரமத்தில் பார்த்தால் உண்மை விளங்கும்.

சித்தர்கள் “பல்மொழிதெயத்தோர்” வகையில் வருவார்களா?: சங்ககாலத்திற்கு முன்பே ஜைனம்-பௌத்தம் தமிழகத்தில் நுழைந்துள்ளன. அதாவது பாரதத்தில் ஒரு பகுதியில் உள்ளது, மற்றப் பகுதிகளுக்குப் பரவியது. ஜைனர்கள்-பௌத்தர்கள் பாரதத்தில் திடீரென்று உருவாக்கப்படவில்லை. பாரத மக்களிடமிருந்துதான் அவர்கள் மதம் மாறி வளர்ந்துள்ளனர். அவர்களது நூல்களில் “ஆர்ய” என்ற சொல் அதிகமாகவே உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இனவாத ரீதியில் இல்லை. இல்லை ஆகவே, அவர்கள் ஆரியர்களா, திராவிடர்களா என்று சொல்லமுடியாது. ஜைனர்கள்-பௌத்தர்கள் எல்லோருமே கருப்பாக, மூக்குகள் சப்பையாக, குள்ளமாக, தலைமயிர் சுருட்டிக் கொண்ட உருவத்தில் இருந்தார்கள் என்றில்லை. ஏனெனில் அக்காலத்தைய சிற்பங்கள், ஓவியங்கள் அவர்களை அவ்வாறு காட்டவில்லை. பாரதத்தில் இருந்த சித்தர்கள், தமிழகத்திற்கும் வந்திருக்கலாம். ஜைனம்-பௌத்தம் மருத்துவமுறைகளை அவர்கள் மூலம், அதாவது, அவர்களின் சித்தர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், மக்கள் அம்முறைகளை நமது நாட்டு சூழ்நிலைகளுக்கு மாறுபட்ட நிலைகளில் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லது ஜைனம்-பௌத்த சித்தர்கள் / மருத்துவர்கள் இந்தியமுறையையே கையாண்டிருப்பார்கள். 300-250 ஆண்டுகளில் அசோகன் தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், விலங்குகளுக்குக்கூட மருத்துவமனைகள் கட்டியிருக்கிறான். அதாவது, மக்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கும் மருத்துவம் தேவை என்ற உண்மை பாரத மக்களுக்குத் தெரிந்திருந்தது. மேலும் போர்கள், சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், மருத்துவர்களின் அவசியம் தொடர்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, மக்கள் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்கி, சமூகநடப்புகள் நடந்து வந்துள்ள நிலைகளில், அக்காலகட்டத்தில் நிச்சயமாக மக்களுக்கேற்புடைய, செயல்பட்டுவரும் மருத்துவமுறை இருந்துள்ளது. அவர்கள் சித்தர்கள் ஆனாலும், மருத்துவர்கள் ஆனாலும், வைத்தியர்கள் ஆனாலும் மக்களுக்காக “பல்மொழிதேயத்தோர்” மட்டுமல்லது “பல்தேயமொழியோர்” எனவும் இருந்து சேவைசெய்திருப்பர். ஆரியர்கள்-திராவிடர்கள் என்று பிரித்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

04-09-2012


 


[1] ஆயிரக்கணக்கான புத்தகங்கள், குறும்புத்தகங்கள், பிட்-நோட்டீசுகள் முதலியன கம்யூனிஸ, திராவிட, கிருத்துவ, இஸ்லாமிய இயக்கங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், அவர்களே, இந்த நாட்டைக் காப்பவர் போலவும் பிரச்சாரம் செய்வார்கள், போராட்டங்கள் நடத்துவார்கள்.

[2] “பாரதம்” என்ற சொல் பிரயோகம் மணிமேகலையில் காணப்படுகிறது – (பதிகம்.22, 17: 57). இதை கே. வி. இராமகிருஷ்ண ராவ் எடுத்துக் கட்டியுள்ளார். பாடல்சால் சிறப்பிற் பாரதத் தோங்கிய நாடகம் விரும்ப…………………

U. V. Swaminatha Iyer, Manimekhalai mulamum arumpadha uraiyum, Swainatha Iyer Library, Chennai, 1981, p.2 and 191. It had the beautiful benefits wanted i.e, it had all wealths attracted by other nations and thus praised in songs. U. V. Swaminatha Iyer pointed out that it could denote the dance form also, to imply that it was in existence in India long back and not developed recently, as some scholars try to interpret.

K. V. Ramakrishna Rao, A Brief outline of the Siddha understanding of the Body and mind: New Research, a paper presented at the workshop conducted on “Perspectives of different knowledge systems on “The Body and Mind” held at Bangalore on August 24th and 25th 2012.

[3] சிந்து பகுதி யில் 712ல் அரேபியர் படையெடுப்பு நடந்த பிறகும், அரேபியா, மத்திய ஆசியாப்பகுதிகளில் இந்தியர்கள், இந்துக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் வியாபாரம் செய்து வந்தனர். ஏரியல் ஸ்டீயின் போன்றோரின் அகழ்வாய்வு அறிக்கைகள், புத்தகங்கள் முதலியவற்றைப் பார்க்கவும்.

[4] டொனால்ட் ஏ. மெக்கன்ஸி, வாடெல் முதலியோரது புத்தகங்களைப் பார்க்கவும். சிலநூறாண்டுகளுக்கு முன் மற்ற நாடுகளுக்குச் சென்றுவர எந்தவித கட்டுப்பாடும் இல்லை, அதாவது மக்கள் விருப்பம் போல சென்று வந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் அவ்வாறு தீர்த்த யாத்திரை, விழா, மேலா என்ற நிமித்தமாகச் சென்று வந்ததால் அந்நிலை மக்களுக்குத் தெரிந்திருந்தது.

[5] சங்க இலக்கியங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள “பல்மொழிதெயத்தோர்” என்ற சொற்றொடர், தமிழ்ழகத்தின் வடபகுதியிலிருந்து தமிழல்லாத மற்ற மொழிகள் பேசப்பட்டு வந்ததைக் காட்டுகிறது. அன்கு வடுகமொழி – அதாவது தெலுங்கு பேசப்பட்டுவந்தது.

[6] உமணர்களின் உப்பு வண்டிகள் இந்தியா முழுவதும் சென்று வந்தன; பிரம்மி எழுத்து, முத்திரைப் பதிக்கப்பட்ட நாணயங்கள் எல்லாம் பாரதம் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. சாதாரண-பொது மக்களின் ஏற்புடையாமல் இம்முறை இருந்திருக்காது.

[7] மருந்து, மருத்துவன், முதலிய சொற்கள் பிரயோகத்தில் இருந்தன. ஆனால், சித்தர்களை, சித்துகளை, சித்தமருத்துவத்தைக் குறிக்க வார்த்தைகள் இல்லை. எப்படி “திராவிடம்”, திரவிடம், திராவிடர் முதலிய இல்லையோ, இவையும் இல்லை.

Posted in அரேபியா, இந்தியவிரோதிகள், இந்தியா, இமயம், சீனா, சைனா, சோழர், திபெத், திராவிடவாதிகள், பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாரதம், பிரிவினைவாதிகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »