சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘சித்த்ஞானம்’ Category

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.

ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].

கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.

முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.

அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.

மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].

பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.

இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.

© வேதபிரகாஷ்

14-09-2012


[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.

http://www.ship.edu/~cgboeree/greeks.html; http://9waysmysteryschool.tripod.com/sacredsoundtools/id13.html

[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.

[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.

E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”

[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.

[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.

[8] Strabo, XV, I, p.59.

[9] Pseudo-Origen, Philosophia, p.24.

[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.

[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.

[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27

[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.

[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Posted in அகத்தியர், அரேபியா, அறிவு ஜீவி, அறுத்தல், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், எலும்பியல், ஓலை, கடைசல் ஊசி, கத்தி, கந்தகம், கரைசல், காபாலிகம், காயம், சக்தி, சல்ய, சல்லிய, சிகிச்சை, சித்தார்த், சித்த்ஞானம், சிந்தனை, சீனா, திகம்பர, திகம்பரம், திரவிடம், திராவிடன், திராவிடம், திருமூலர், நரம்பு, பாதரசம், பாரதம், பிணம், பிண்டம், பித், பித்தம், மந்திரம், மனச்சிதைவு, மூச்சு, மூளை, மேரு, வில்லியம் ஜோன்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

வேதமத அல்லது வேதகாலத்தில் இருந்த சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 7, 2012

வேதமத அல்லது வேதகாலத்தில் இருந்த சித்தர்கள்

வேதமதசித்தர்கள்: வேதமதத்தில் அல்லது வேதகாலத்தில்[1] “சித்தர்கள்” என்பவர்கள் எல்லாவற்றையும் அடைந்தவர், வெற்றிகொண்டவர், முழுமைப்பெற்றவர் என்ற நிலையிலிருந்து எல்லாவற்றையும் செய்ய வல்லவர், சாதிக்கக்கூடியவர், அதற்கான சக்திகளைக் கொண்டவர் என்றுள்ளது. “सिद्ध” = சித்த என்ற வார்த்தைக்கு அவ்விதமாகப் பொருள்கொள்ளப்படுகிறது. அந்நிலையை அடைந்தவர்களை “சித்தி”யடைந்தனர் என்றும் வழங்கப்பட்டது. தெய்வீக, என்றும் நிலையுள்ள, போற்றக்கூடிய, மேன்மையான என்ற அடைமொழிகளிலும்  விளக்கம் உள்ளது. இதனை அடைமொழியாகக் கொண்டு ஆயிரக்கணக்கான வார்த்தைகள் உருவாகியுள்ளது, இதன் மிகவுயர்வான தன்மையைக் காட்டுகிறது. மிகவுயர்வானது, மிகச்சிறந்தது, மிகத்தூய்மையானது, என்ற முறையில் அச்சொற்றொடர்கள் விளக்கம் அளிக்கின்றன[2]. ஆனால் இவர்கள் எல்லோரும் மருத்துவர்கள் அல்லர். ஆயிர்வேதமுறை பின்பற்றவந்தபோது, உடல்-மனம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால், மனம்-உடல்-உயிர்; மூச்சு-ஆயுள்-ஆரோக்யம்; முதலியவற்றை இணைக்கும் யோகா சிறப்பானது. இது எதிர்மறைசிந்தனை-மனச்சிதைவு-மனநோய்; உடலின்பம்-அநாரோக்யம்-நோய் முதலியவற்றை எதிர்க்கும் மருந்தாகப் பயன்பட்டது.

சித்தசித்திசித்தம் முதலிய வார்த்தைகளுக்கு பொருள்: சித் என்ற வார்த்தை, சித்த, சித்தி, சித்தம் என்ற சொற்கூறுகளுக்கு ஆதாரமாகி, “சித்த” என்ற அடைமொழி பல வார்த்தைகளை உண்டாக்கியுள்ளது.

சித்தகல்ப, சித்தகாம, சித்தக்ஷேத்ர, சித்தக்காண்ட, சித்தகங்க, சித்தகிருஹம் சித்தத்துவ, சித்தாந்த, சித்தார்த, சித்தம், சித்ததேவ, சித்த-தர்ஷணம், சித்த-நாகார்ஜுன, சித்தநாத, சித்தபக்ஷ, சித்தப்பாத, சித்தபுத்ர, சித்தபுரி, சித்தபுருஷ, சித்தபுஷ்ப, சித்தபுத்த, சித்தமாதா, சித்தமந்திர, சித்தமனஸ, சித்தய்ந்திர, சித்தயாமல, சித்த்யோக, சித்தரத்ன, சித்தரஸ, சித்தராஜா, சித்தகாமுதி, சித்தோதய…………..என நீண்டுக் கொண்டேயிருக்கிறது.

சித்ததாது, சித்தரச / சித்தரஸ என்ற சொற்றொடர் பாதகரசத்தைக் குறிக்கிறது.

சித்தரச – ரசவாதி / ரஸவாதி

சித்தபக்ஷ / சித்தபட்சம் என்பது குறிப்பிட்ட தத்துவவாதத்தைக் குறிக்கிறது.

சித்த, சித்தயோகின் – சிவன்

சித்தசங்கல்பம் – நினைத்தை முடிப்பவர்

சித்தசேன – கார்த்திகேயன், முருகன்

சித்தஸ்தாலி – கமண்டலம், குடுவை, பாத்திரம்

சித்தநதி, சிந்து – தெய்வீக நதியைக்குறிக்கிறது

சித்தஜலம் – அரிசி கஞ்சி

இதுபோன்ற பல வார்த்தைகளை சமஸ்கிருத அகராதிகளில் காணலாம்[3]. முதல் நூற்றாண்டுகளினின்று இடைக்காலத்தில் வரை அதன் அர்த்தம் மாற ஆரம்பித்தது. அதாவது, பாதரசத்தை உபயோகப்படுத்தியதால், மருத்துவமுறையில் ஏதோ ஒரு மாற்றம் அல்லது குழப்பம் ஏற்பட்டது என்று தெரிகிறது. இது பிற்காலத்தில் யோகம்-பிரானாயாமம் முறையிலிருந்து, காயகல்பம் முறைக்கு மாறியதைக் கட்டுகிறது.

சித்தர் என்ற வார்த்தை புத்தனை, சிவனைக்குறிப்பது பிற்கால வழக்கம்: பொதுவாக “சித்த” என்றால் சிவன் என்றும், பிற்கால சமஸ்கிருத இலக்கியங்களில் புத்தரையும் குறிப்பதாக உள்ளது. ஆனால், எங்குமே அவர்கள் மருத்துவர்கள் அல்லது மருத்துவமுறைகளைப் பின்பற்றியவர்கள் என்றில்லை. நாரதர்கூட திரிலோக சஞ்சாரி = மூன்று உலகங்களிலும் சென்றுவரும் தமைப் பெற்றவர் என்றிருந்தாலும், அவரை என்று சித்தர் என்று சொல்லப்படவில்லை. ஆக கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் கூட இப்பெயரின்  சிறப்பை, மதிப்பை, பெருமையை அறிந்துணர்ந்து உபயோகப்படுத்தினர் என்ப்ச்து தெரிகிறது. அவ்வாறு ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதங்களைப் படித்தபோது, அவர்கள் “பாஷாண்டிகள்” எனப்பட்டனர்.

சித்தர் சித்தியை அஷ்டமாசித்திகளை பெற்றவர்கள்: சித்திகள் எட்டு, அவற்றை அடைந்தவர் சித்தர். மஹாபாரதம், மனுஸ்மிருதி, பஞ்சதஎதிரம் முதலிய நூல்களில் இதற்கு விளக்கம் காணப்படுகிறது.

  1. अणिमा – அணிமா – சிறிய உருவம் பெறும் தன்மை
  2. महिमा – மஹிமா – பெரிய உருவம் பெறும் தன்மை.
  3. गरिमा – கரிமா – அதிக பலம் / எடைக் கொள்ளும் தன்மை
  4. लघिमा – லகிமா – குறைவான எடைக் கொள்லும் தன்மை
  5. प्राप्ति – பிராப்தி – நினைத்ததை நினைத்த மாதிரி பெறும் தன்மை.
  6. प्राकाम्य – பிராக்யாம – அதிக சக்திகளை – வல்லமைகளை, திறமைகளைப் பெறும் தன்மை.
  7. ईशित्व – ஈசித்துவ – கடவுட்தன்மையை அடைவது அல்லது மற்றவர் வணங்கும் நிலையை அடைவது
  8. वशित्व – வசித்துவ – மற்றவரை தமதிச்சைக்கேற்றபடி நடக்கவைக்கும் தன்மை

இவற்றைத்தவிர, ஸ்ரீ கிருஷ்ணர் கீழ்கண்ட பத்து குணாதிசயங்களைக் கொண்டவர் சித்தர் என்று “பகவத் புராணத்தில்” குறிப்பிடுகிறார்.

எண்

சமஸ்கிருதம்

தமிழ்உச்சரிப்பு

விளக்கம்

1 अनूर्मिमत्वम् அனூமிர்மத்துவம் பஞ்சேந்திரியங்களின் விருப்பு-வெறுப்பு-தேவைகளைக் கடந்தத் தன்மை
2 दूरश्रवण தூர்ஷ்ரவண் தூரத்திலிருந்து கேட்கக்கூடிய சக்தி
3 दूरदर्शनम् தூர்தர்ஷணம் தூரத்திலிருந்து பார்க்கக்கூடிய சக்தி
4 मनोजवः மனோஜவம் மனோசக்தி
5 कामरूपम् காமரூபம் விரும்பும் உருவத்தைப் பெறுவது
6 परकायाप्रवेशनम् பிரகாயபிரவேசனம் அடுத்த தேகத்தில் நுழைவது
7 स्वछन्द मृत्युः ஸ்வச்சந்த மிருத்யு உண்மையான நினைக்கும் நேரத்தில் இறப்பைப் பெறுவது, முக்தியடைவது
8 देवानां सह क्रीडा अनुदर्शनम् தேவனாம் சஹ கிரிடா அனுதர்ஷனம் எல்லா இடங்களிலும் நடப்பதைப் பார்க்கக்கூடிய சக்தி
9 यथासंकल्पसंसिद्धिः யதாஸம்கல்பஸம்சித்தி அனைத்தையும் அடைந்து முடியும் சக்தி
10 आज्ञा अप्रतिहता गतिः ஆக்ந்யா அபர்திஹதா கதி ஆணையை மற்றவர்கள் செய்யும் விதம்

பிறகு அவர்களை “सिद्ध पुरुष”, சித்தபுருஷர்கள் – மனிதர்களாக இருந்தும் சித்தர்களைப் போன்ற நிலையை அடைந்தனர் என்றா ரீதியில் – அழைத்தனர்[4].

வேதகால ரிஷிக்கள், முனிவர்கள் மருத்துவ சித்தர்கள் ஆகார்: வேதத்தைக் கற்று, கற்பித்து, வாழ்ந்தவர்கள் ரிஷிக்கள்-முனிக்கள். ஆனால் அவர்கள் “மருத்துவ சித்தர்கள்” இல்லை.  வேதாங்கங்களை போதிப்பர், ஆனால், அதனை பின்பற்றுவோர் வேறுக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள். சுஷ்ருதர், சரகர், வாகபட்ட முதலியோர் தலைசிறந்த அறுவைசிகிச்சை வல்லுனர்கள், பதஞ்சலி யோக விஞ்ஞானி. அவர்கள் “சித்தர்கள்” என்று குறிப்பிடப்படவில்லை. ஆயுர்வேத மருத்துவ நூல்களை எழுதியவர்களும் “சித்தர்கள்” என்று அழைக்கப்படவில்லை. ஏன் ஆயுர்வேதத்தை அளித்தவர், ஆயுர்வேதத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய தகுதியுள்ளவரும் அவ்வாறு கருதப்படவில்லை. ஆனால், நூற்களை எழுதியவர்கள், அத்தொழிலை செய்யவில்லை அல்லது அவர்களுக்குத் தெரியாது என்றாகாது. ஏனெனில் அக்காலத்தில், மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் அவரவர் வேலைகளை, கடமைகளை செய்து வந்தனர். அதாவது ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறந்தவர்கள் (specialists), வல்லுனர்கள் (Experts), விஞ்ஞானிகள் (Scientists) என்றிருப்பர்.

எண்

முறை

அர்த்தம் / பொருள்

விளக்கம்

1 शिक्षा

சிஷா

மந்திரங்களை எப்படி உச்சரிப்பது, மனப்பாடம், நினைவுகொள்வது என்றமுறை ஒரு படிப்பு படிக்கும்போது, அத்துறையில் உள்ள வார்த்தைகளுக்கு முறையான உச்சரிப்பு, பொருள் தெரிந்துகொண்டு படிப்பது.
2 कल्प

கல்ப

மந்திரங்களை எங்கு, எப்பொழுது, ஏன் உபயோகிக்கவேண்டும் என்று விளக்குவது. இதில் மூன்றுசூத்திரங்கள் / பிரிவுகள் உள்ளன. श्रौत सूत्र= சௌர்த்தगृह्य सूत्र = கிருஹधर्मसूत्र = தர்ம
3 व्याकरण

வியாக்ரண

இதில் மந்திரச் சொற்களை எவ்வாறு எந்தமுறையில், மற்றச் சொற்களோடு உபயோகிக்கவேண்டும், அவற்றின் விளைவு இலக்கணம் என்றில்லாமல், நடைமுறையில் கற்றுக் கொள்ளவேண்டிய விவரங்கள்.
4 निरुक्त

நிருக்த

ஒரே மந்திரத்திற்கு, சொல்லுக்கு பற்பல அர்த்தங்கள் இருப்பது, அவற்றின் விளக்கம் உதாரணத்திற்கு நுண்ணுய பொருட்துகள் – அணு, செல், என்று பலவாக உயிருள்ளவை-உயிரற்றவைகளில் உள்ளன.
5 ज्योतिष

ஜோதிஷ

சோதிடம் என்றால் வானவியல், இது, பூகோளம், கிரகங்கள், காலவியல், கணக்கியல் முதலியவற்றைக் கொண்டது. சோதிடம் என்றால் இக்காலத்தையது பொலல்ல. வேதாங்க சோதிடம் என்பது உலகத்திலேயே உள்ள மிகப்பழமையான வானியல் சாத்திரப் புத்தகமாகும்.
6 छन्द

சந்த

மந்திர வார்த்தைகள், சொற்றொடர்கள், வரிகள் முதலியவற்றை அவற்றின் சப்தத்திற்கேற்றபடி, அமைத்து உருக்கொடுத்தல். பிங்கள சந்த சூத்ர இன்று உலகளவில் பிரசித்தியகியிருக்கிறது. ஏனெனில் அது 0 மற்றும் 1 கணக்கீட்டிற்கு முறையைக் கொடுத்துள்ளது.

இதிஹாசபுராணங்களில்சித்தர்கள்: இதிஹாச புராணங்களில் சித்தர்கள் – தேவரிஷிகள், சாரணர், கின்னரர், கந்தர்வர் போன்றவர்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றது[5]. ராமாயணம் சித்தாஷ்ரம் (सिद्धाश्रम) ஒன்றிருந்தத்தைக் குறிப்பிடுகிறது (ஆதிகாண்டம்.29வது சர்க்கம், சுலோகங்கள்.3-6). அந்த மிகச்சிறந்த ஆஷ்ரமம் (ஆதி.5.24) வாமனருக்கு முன்பாகவே இருந்தது. விஷ்ணு இங்கு தவம் செய்து சித்தி பெற்று, வாமன அவதாரம் எடுத்ததால், அப்பெயர் பெற்றது[6]. விஷ்வாமித்திரர், ராமரை இங்கு அழைத்து வந்தார். மஹாபாரத்திலும் அதேப்போன்ற குரிப்புள்ளது[7]. மேரு மலையைச் சுற்றியுள்ள மலைகளின் உச்சிகளில் அவர்கள் வாழ்ந்திருந்தனர்.

மஹாபாரதம்.ஆதிபர்வம்.அத்தி.65.சுலோ.46 – ஒரு தேவகந்தர்வன். கஸ்யபர் மற்றும் பிராதா என்பருக்கும் பிறந்தவன்.

மஹாபாரதம்.ஆதிபர்வம்.அத்தி.70.சுலோ.15 – சித்தர்கள், தேவர்களின் குழுமம். அவர்கள் இமயமலை அடிவாரத்தில் கண்வ முனிவர் ஆசிரமத்திற்கு அருகில் வாந்தனர்.

மஹாபாரதம்.சபாபர்வம்.அத்தி.8.சுலோ.29 – சித்தர்கள் யமனுடைய அரண்மனையில் தங்கி, அவனுக்கு சேவை செய்து வந்தார்கள்.

சித்தகிரஹா – சித்தர்களால் சபிக்கப்பட்ட ஒரு துர்தேவதை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சித்தபிரமைப் பிடித்து பைத்தியமாவார்கள்.

சித்தார்த்த[8] – 1. குரோதவாச என்ற அசுரனின் மறுபிறவி;

2. தசரதருடைய அமைச்சர்களில் ஒருவன்;

3. சுப்ரமணியருடைய வீரர்களில் ஒருவன்;

4. பிறகு புத்தருடைய பெயராகவும் உள்ளது.

விஷ்ணுபுராணத்திலும் (The Vishnu Purana: Book II: Chapter V) அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது[9]. சித்தர் முதலியோர் அனந்தன் என்ற பெரிய நாகத்தைப் போற்றுவதாக உள்ளது. வாயுபுராணம், ஜம்புதீவபத்தின் வடபகுதியில் ஜாருதி மலைப்பகுதியில் பலர் வாழ்ந்திருந்தனர். குறிப்பாக அம்மலைமீது சித்தர்களும், தேவரிஷிகளும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்காக அம்மலையின் நடுப்பகுதி ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆனந்த ஜலம் என்ற மிகத்தூய்மையான நீர் கொண்ட ஏரி ஒன்று இருந்தது. அதில்தான் சித்தர்களும், தேவரிஷிகளும் நீராடுவார்கள் (அத்தி.41:66-73). அதேபோல மேருமலையின் வடக்குப் பக்கத்தில் “ரமணக வர்ஷ” என்ற மலையுள்ளது. அங்கும் சித்தர்கள், சாரணர்கள் வாழ்ந்து வந்தனர். உத்தரகுருவின் தெற்கில் உள்ள மலையிலும் சித்தர்கள், சாரணர்கள் வாழ்ந்து வந்தனர் பிறகு மற்றொரு சுலோகத்தில் சித்தர்கள் தேவர், ராக்ஷஸர், பன்னகர், யக்ஷர், கந்தர்வர், கின்னரர்களுடன் சேர்ந்து வாழ்வதாக கூறுகிறது (அத்தி.39.1). மேலும் இவர்கள் இப்படி தனியாக, தொலைவில் இருப்பது, பொதுமக்களுக்கு உதவுவதாகவோ, அவர்களுக்காக மருத்துவம் செய்வதாகவோ இல்லை.பிறகு வானியல் நூல்களில் உலகில் நான்கு திசைகளில் பூமத்திய ரேகையிலுள்ள நான்கு நகரங்களில்[10] ஒன்று “சித்தபுர” என்றும் அங்கிருப்பவர் “சித்தர்” என்று வழங்கப்பட்டது.  ஆனால் அவர்கள் மருத்துவ அல்லது ஆன்மீக சித்தர்கள் அல்லர்.

இந்திய மருத்து வமுறையின் பண்பாடு: இந்திய மருத்துவம் அல்லது எந்ததுறையிலும், ஒரு பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது, தாம் யாரிடமிருந்து படிப்பை, வித்தையை, ஞானத்தை பெற்றோம் என்பதனை அவர்கள் தவறாமல் தங்களது நூற்களில் குறிப்பிட்டு வந்தார்கள்[11]. ஆனால், மற்ற நாகரிகங்களில் மூலங்களைக் குறிப்பிடும் அத்தகைய பண்பாடு இல்லை. அவர்களே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு அல்லது கண்டுபிடித்து எழுதியதைப் போலக் காட்டிக் கொள்வார்கள். அதனால், அந்த புத்தகங்களே அவர்கள் பெயர்களில் தான் இருக்கும். ஒரே நூலாக இருந்தாலும், பத்து பேர் எழுதினால், அந்த பத்து பேர் பெயரிலும் உலா வரும் வேதங்கள் பற்பல ஆண்-பெண்[12] ரிஷிக்களால் போதிக்கப்பட்டவை, ஆனால், அவை அவரவர் பெயர்களில் வழங்கப்படுவதில்லை. இந்தியமுறைகளில் பாஷ்யங்களுக்குத்தான் (உரைகள்) உரையாசிரியர்களின் பெயரிடப்படும். சாயனருடை உரை, ஆதிசங்கரருடைய பாஷ்யம் என்றிருக்கும். மருத்துவ நூல்கள் எல்லாம் “சம்ஹிதை” என்ற பிரிவில் வரும்[13].

© வேதபிரகாஷ்

06-09-2012


[1] வேதமதம் என்று தனியாக ஒன்றும் இல்லை. உண்மையில் பாரத்தில் இருந்தது அல்லது பாரத நாட்டவர் உலகம் முழுவதும் பரந்திருந்தபோது, பின்பற்றிய மதம் ஒன்றுதான். அது பிற்காலங்களில், வர்த்தமான – தேசகால மாற்றங்களினால், வித்தியாசங்களைப் பெற்றது.

[2] Monier Williams, A Sanskrit-English Dictionary, Motilal Banarasidas, New Delhi, 1996, pp.1215-1216.

[3] V. P. Apte, Sanskrit-English Dictionary, Motilal Banarasdas, New Delhi, 1963.

[4] பிற்காலத்தில் வர்த்தமான மஹாவீரர் “सिद्धार्थ” மற்றும் “சித்தார்த்த” என்றவர் “புத்தர்” ஆனத்தை நோக்கவும். அதாவது, இச்சொல் மிகவும் உயர்வாக மதிப்பக்கப்பட்டது.

[5] M. R. Singh, Geographical Data in the Early Puranas – A Critical study, Punthi Pustak, Calcutta, 1972.

[6] Bimala Churn Law, Historical Geography of Ancient India, Orient Reprint, New Delhi, 1984, p.126.

[7] Kinnaras were mentioned along with other exotic tribes like the Nagas, Uragas, Pannagas, Suparnas, Vidyadharas, Siddhas, Charanas, Valikhilyas, Pisachas, Gandharvas, Apsaras, Kimpurushas, Yakshas, Rakhsasas, Vanaras etc. at various places. (1-18,66), (2-10), (3-82,84,104,108,139,200,223,273) (4-70), (5-12), (7-108,160), (8-11), (9-46), (12- 168,227,231,302,327,334,(13-58,83,87,140), (14-43,44,88,92).

Siddhas were mentioned along with the Kinnaras, Charanas, Gandharvas, , Apsaras and Vanaras. They were seen by the Puru king Dushmantha (Dushyanta) in a forest where his would-be wifSakuntala lived. In that forest on the banks of a river called Malini (Ganges?) he saw the habitations of Kinnaras. He also saw Yotis (Yati in theHimalayas) and the Valikhilyas.

[8] Vettam Mani, Puranic Encyclopedia – A Comprehensive work with special reference to the Epic and Puranic literature, Motilal Banarasidass, New Delhi, 1998, p.716

[9] Gandharbas, Apsarasas, Siddhas, Kinnaras, Uragas, and Chárańas are unequal to hymn his praises, and therefore he is called the infinite (Ananta), the imperishable.

http://www.sacred-texts.com/hin/vp/vp063.htm

[10]லங்க, ரோமக, யவகோடி, சித்தபுர என்ற நான்கு நகரங்கள் இருந்ததாக சூரியசித்தாந்தம் முதலிய வானியல் நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன.,

[11] வேதம், வேதாங்கம், சித்தாந்தம், இதிஹாசம், புராணம் என்ற எந்த படிப்புமுறையாகிலும் தமது முன்னோடிகளை, ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, வணக்கம் செல்லுத்துவிட்டு தான் புத்தகத்தை எழுத ஆரம்பிப்பர். தொல்காப்பியம் இந்த பண்பாட்டைப் பின்பற்றியுள்ளடது.

[12] வேதங்களை பெண்களே இயற்றியிருக்கும் போது, பெண்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று பிறகு ஜைனர்கள்-பௌத்தர்கள் தடைவிதித்தை, இன்று வேறுமாதிரியான விளக்கங்கள் அளித்து வருவதை நோக்கவும்.

[13] ऋग्वे, सामवेद, यजुर्वेद अथर्ववेद சம்ஹிதைகள் மற்றுமில்லாது சரக, சுஷ்ரத சம்ஹிதைகளும் வரும்.

Posted in கந்தருவர், சித்தஜலம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்த்ஞானம், தேவர், விவேகானந்தர், வேதாசலம், வைத்தியர் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »