சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘பிரிவினைவாதிகள்’ Category

பாரதத்தில் – பழங்கால இந்தியாவில் சித்தர்கள்

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 5, 2012

பாரதத்தில் – பழங்கால இந்தியாவில் சித்தர்கள்

இப்பொழுது இந்திய சித்தர்களின் பாரதம் ஒன்றாகாது: சித்தர்கள் பல சமூகங்களை, இனங்களை, நாடுகளை சேர்ந்தவர்கள் என்றவுடன் அவர்கள் இனம்-மொழி-சாதி முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியா வேறு, பாரதம் வேறு என்றெல்லாம் திராவிடவாதிகள், பிரிவினைவாதிகள், இந்தியவிரோதிகள் எழுதிவருகிறார்கள்[1]. ஆனால், தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள “பாரதம்” பற்றிக்கூட அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையே[2]. 3000, 2000, 1000, 500 வருடங்களுக்கு முந்தைய பாரதமும் இன்றைய இந்தியாவும் ஒன்றல்ல என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அதாவது 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தனர்[3]. சோழர்கள் இந்தியாவின் கிழக்குக்கடற்கரை வழியாக சீனா வரை ஆதிக்கம் செல்லுத்தி வந்தனர். அதும்ட்டுமல்லாது, தென்மேற்குதிசையிலுள்ள நாடுகளை வென்றதால், இந்திய கலாச்சாரம், பண்பாடு, பரம்பரை, நாகரிகம் அங்கும் பரவியிருந்தன[4]. அவர்கள் காலத்திலும் மற்றும் அந்த  3000, 2000 வருட காலங்களிலும் மருத்துவமுறை சிறந்து விளங்கியிருந்தது. கோவில் வளாகங்களில் மருத்துவமனைகள் செயல்பட்டு வந்தன. அவற்றையெல்லாம் மறந்து, பின்னால் வந்த மருத்துவமுறையை, முன்னால் எடுத்துச் செல்வதால், சரித்திர ஆதாரங்கள் எடுத்துக் காட்டிவிடும்.

அப்பொழுது சித்தர்கள் இருக்கும்போது, சங்க இலக்கிய “பல்மொழிதேயத்தோர்” நியதியில் பலமொழிகளைப் பேசியிருப்பர்[5]. பல இடங்களுக்குச் சென்றிருப்பர். ஆனால், மக்களிடையே ஒரு இணைப்பு மொழி ஒன்று இருந்திருக்க வேண்டும்[6]. பிறகு படிப்படியாக இடைக்காலத்திலிருந்து இஸ்லாம், கிருத்துவ மதங்கள் வளர்ந்து பாவ ஆரம்பிக்கும் போது, அந்த பழங்கால பூகோள எல்லைகள் குறைய ஆரம்பித்தன, சுருங்கவும் செய்தன. தனிமைப்படுத்தப்பட்ட பழங்கால இந்தியர்கள் அல்லது இந்துக்கள் அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் மற்ரும் தென்மேற்காசிய நாடுகளில் வாழ நேர்தது. ஆகவே, தனிமைப்படுத்த மற்றும் குறுகிய இடக்கால பாரதத்தில், அதற்கேற்றமுறையில் அவர்கள் பின்பற்றி வந்த மருத்துவமுறைகளும் மாற ஆரம்பித்தன. பரவியிருந்த பாரத மக்களின் முறைகளும் மாற ஆரம்பித்தன. அவ்வாறு ஏன் அப்படி ஒருகாலக்கட்டத்தில் வேறுபடவேண்டும் என்று இக்கால எழுத்தாளர்கள் ஆராய்ச்சி செய்வதில்லை. இருக்கும் நூல்களை முழுமையாகப் படித்துப் பார்த்தால், அவையெல்லாம் குறிப்பிட்ட பொதுவான கலாச்சாரம், பண்பாடு, பரம்பரை, சம்பிரதாயம், மூலங்களை ஏற்றுக் கொள்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பிறகு காலக்கிரமமாக மாறுபடுகின்றன.

பாரத்தத்தின் பண்பாடு, பாரம்பரிய கூறுகள் சித்தர்களின் பண்பாடு, பாரம்பரிய கூறுகள் முதலியவை சரித்திர ரீதியில் வெவ்வேறா?: பாரதம் அல்லது இந்தியா முழுவதும் ஒரு குறிப்பிட்ட மருந்துவமுறை இருந்து வந்துள்ளது. வேத, ஜைன, பௌத்த காலங்களில் சமஸ்கிருதம் போதனாமொழி அல்லது பல்கலைக்கழகங்களில் சிறப்புப் படிப்புகள் படிக்க பொது மொழியாக உபயோகப்படுத்தப் பட்டு வந்துள்ளமையால் தான், மூலநூல்கள் சமஸ்கிருதத்தில் காணப்படுகின்றன. இன்றும் திபெத்திய, சைன மொழிகளில் உள்ள ஆவணங்கள் அத்தகைய உண்மையினைக் காட்டுகின்றன. அவை “சித்தர்கள்” பற்றிய ஆவணங்கள் மற்றும் சித்திரங்கள், சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றையும் வைத்திருக்கின்றனர். இதனால், சமஸ்கிருதத்தை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று சித்தர் நூல்களை படித்தால், சமஸ்கிருத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அறியாமல், அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்று எந்த படிக்கின்ற மாணவன், சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியன் அல்லது ஆராய்ச்சியாளன் எளிதாகத் தெரிந்து கொள்வான். ஆகையினால் சித்தாந்த ரீதியில் அல்லது அரசியல் போக்கில் மொழிரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திக் கொண்டால், உண்மையினை அறிய முடியாது.

சங்ககாலத்தில் இருந்த மருத்துவம் சித்த மருத்துவமா?: சங்ககாலத்தில் மக்கள் வாழ்ந்தபோது, நிச்சயமாக ஆரோக்யமான, நோயற்ற வாழ்விற்கு ஒரு மருத்துவமுறை இருந்துள்ளது[7]. ஆனால், அது “சித்த மருத்துவம்” என்றில்லை. பிறகு ஏன் திராவிடர்கள் “திராவிட மருத்துவம்” பின்பற்றவில்லையென்று, சிந்தித்துப் பகுத்தறிவுவாதிகள் கேட்டுப் பார்க்கவில்லை. “திராவிடர்கள்” சங்ககாலத்தில் இல்லாதபோது, “ஆரியர்கள்” எப்படி இருந்தார்கள் என்றும் அவர்களது நுண்ணறிவு வேலை செய்யவில்லை. அந்த “ஆரியர்கள்” கழைக்கூத்து ஆடினார்கள், கயிற்றின் மேலே நடந்தார்கள்; வித்தைக் காட்டினார்கள்; தெரியாத மொழி பேசினார்கள்; யானைகளுடன் பேசி, யானைகளைப் பிடித்து, வளர்த்தார்கள், முனிவர்களைப் போல இருந்தார்கள் என்றெல்லாம் “திராவிடப் புலவர்கள்” எழுதிவைத்திருப்பதால், அவர்கள் தாம் “சித்தர்கள்” என்று கூறிவிடமுடியுமா? யானைகளுக்கு வைத்தியம் பார்த்தது போல, தமிழர்களுக்கும் வைத்தியம் பார்த்தார்கள் என்று சொல்லமுடியுமா? இல்லை அப்படித்தான் ஆயுர்வேதத்தையும், சமஸ்கிருதத்தையும் நுழைத்தார்களா? உடனே இனமான, வீரதீரசூர “திராவிடர்கள்” ஒன்றும் அறியாமல் ஏற்றுக் கொண்டு விட்டனரா? ஆகவே, எந்த ஒரு மருத்துவமுறையினையும் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது; எந்த ஒரு மதம், சாதி, இனம் முதலியவற்றுடன் தொடர்புப் படுத்திக் காட்டக் கூடாது. எல்லாவற்றையும் படிக்கும் போது நிச்சயமாக, அவற்றில் பொதுவாக இருப்பது, அதேபோல இருப்பது, கண்டுபிடிப்புகளில் முன்னது-பின்னது என்பனவற்றை உன்னிப்பாக, காலக்கிரமத்தில் பார்த்தால் உண்மை விளங்கும்.

சித்தர்கள் “பல்மொழிதெயத்தோர்” வகையில் வருவார்களா?: சங்ககாலத்திற்கு முன்பே ஜைனம்-பௌத்தம் தமிழகத்தில் நுழைந்துள்ளன. அதாவது பாரதத்தில் ஒரு பகுதியில் உள்ளது, மற்றப் பகுதிகளுக்குப் பரவியது. ஜைனர்கள்-பௌத்தர்கள் பாரதத்தில் திடீரென்று உருவாக்கப்படவில்லை. பாரத மக்களிடமிருந்துதான் அவர்கள் மதம் மாறி வளர்ந்துள்ளனர். அவர்களது நூல்களில் “ஆர்ய” என்ற சொல் அதிகமாகவே உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இனவாத ரீதியில் இல்லை. இல்லை ஆகவே, அவர்கள் ஆரியர்களா, திராவிடர்களா என்று சொல்லமுடியாது. ஜைனர்கள்-பௌத்தர்கள் எல்லோருமே கருப்பாக, மூக்குகள் சப்பையாக, குள்ளமாக, தலைமயிர் சுருட்டிக் கொண்ட உருவத்தில் இருந்தார்கள் என்றில்லை. ஏனெனில் அக்காலத்தைய சிற்பங்கள், ஓவியங்கள் அவர்களை அவ்வாறு காட்டவில்லை. பாரதத்தில் இருந்த சித்தர்கள், தமிழகத்திற்கும் வந்திருக்கலாம். ஜைனம்-பௌத்தம் மருத்துவமுறைகளை அவர்கள் மூலம், அதாவது, அவர்களின் சித்தர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், மக்கள் அம்முறைகளை நமது நாட்டு சூழ்நிலைகளுக்கு மாறுபட்ட நிலைகளில் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லது ஜைனம்-பௌத்த சித்தர்கள் / மருத்துவர்கள் இந்தியமுறையையே கையாண்டிருப்பார்கள். 300-250 ஆண்டுகளில் அசோகன் தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், விலங்குகளுக்குக்கூட மருத்துவமனைகள் கட்டியிருக்கிறான். அதாவது, மக்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கும் மருத்துவம் தேவை என்ற உண்மை பாரத மக்களுக்குத் தெரிந்திருந்தது. மேலும் போர்கள், சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், மருத்துவர்களின் அவசியம் தொடர்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, மக்கள் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்கி, சமூகநடப்புகள் நடந்து வந்துள்ள நிலைகளில், அக்காலகட்டத்தில் நிச்சயமாக மக்களுக்கேற்புடைய, செயல்பட்டுவரும் மருத்துவமுறை இருந்துள்ளது. அவர்கள் சித்தர்கள் ஆனாலும், மருத்துவர்கள் ஆனாலும், வைத்தியர்கள் ஆனாலும் மக்களுக்காக “பல்மொழிதேயத்தோர்” மட்டுமல்லது “பல்தேயமொழியோர்” எனவும் இருந்து சேவைசெய்திருப்பர். ஆரியர்கள்-திராவிடர்கள் என்று பிரித்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

04-09-2012


 


[1] ஆயிரக்கணக்கான புத்தகங்கள், குறும்புத்தகங்கள், பிட்-நோட்டீசுகள் முதலியன கம்யூனிஸ, திராவிட, கிருத்துவ, இஸ்லாமிய இயக்கங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், அவர்களே, இந்த நாட்டைக் காப்பவர் போலவும் பிரச்சாரம் செய்வார்கள், போராட்டங்கள் நடத்துவார்கள்.

[2] “பாரதம்” என்ற சொல் பிரயோகம் மணிமேகலையில் காணப்படுகிறது – (பதிகம்.22, 17: 57). இதை கே. வி. இராமகிருஷ்ண ராவ் எடுத்துக் கட்டியுள்ளார். பாடல்சால் சிறப்பிற் பாரதத் தோங்கிய நாடகம் விரும்ப…………………

U. V. Swaminatha Iyer, Manimekhalai mulamum arumpadha uraiyum, Swainatha Iyer Library, Chennai, 1981, p.2 and 191. It had the beautiful benefits wanted i.e, it had all wealths attracted by other nations and thus praised in songs. U. V. Swaminatha Iyer pointed out that it could denote the dance form also, to imply that it was in existence in India long back and not developed recently, as some scholars try to interpret.

K. V. Ramakrishna Rao, A Brief outline of the Siddha understanding of the Body and mind: New Research, a paper presented at the workshop conducted on “Perspectives of different knowledge systems on “The Body and Mind” held at Bangalore on August 24th and 25th 2012.

[3] சிந்து பகுதி யில் 712ல் அரேபியர் படையெடுப்பு நடந்த பிறகும், அரேபியா, மத்திய ஆசியாப்பகுதிகளில் இந்தியர்கள், இந்துக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் வியாபாரம் செய்து வந்தனர். ஏரியல் ஸ்டீயின் போன்றோரின் அகழ்வாய்வு அறிக்கைகள், புத்தகங்கள் முதலியவற்றைப் பார்க்கவும்.

[4] டொனால்ட் ஏ. மெக்கன்ஸி, வாடெல் முதலியோரது புத்தகங்களைப் பார்க்கவும். சிலநூறாண்டுகளுக்கு முன் மற்ற நாடுகளுக்குச் சென்றுவர எந்தவித கட்டுப்பாடும் இல்லை, அதாவது மக்கள் விருப்பம் போல சென்று வந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் அவ்வாறு தீர்த்த யாத்திரை, விழா, மேலா என்ற நிமித்தமாகச் சென்று வந்ததால் அந்நிலை மக்களுக்குத் தெரிந்திருந்தது.

[5] சங்க இலக்கியங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள “பல்மொழிதெயத்தோர்” என்ற சொற்றொடர், தமிழ்ழகத்தின் வடபகுதியிலிருந்து தமிழல்லாத மற்ற மொழிகள் பேசப்பட்டு வந்ததைக் காட்டுகிறது. அன்கு வடுகமொழி – அதாவது தெலுங்கு பேசப்பட்டுவந்தது.

[6] உமணர்களின் உப்பு வண்டிகள் இந்தியா முழுவதும் சென்று வந்தன; பிரம்மி எழுத்து, முத்திரைப் பதிக்கப்பட்ட நாணயங்கள் எல்லாம் பாரதம் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. சாதாரண-பொது மக்களின் ஏற்புடையாமல் இம்முறை இருந்திருக்காது.

[7] மருந்து, மருத்துவன், முதலிய சொற்கள் பிரயோகத்தில் இருந்தன. ஆனால், சித்தர்களை, சித்துகளை, சித்தமருத்துவத்தைக் குறிக்க வார்த்தைகள் இல்லை. எப்படி “திராவிடம்”, திரவிடம், திராவிடர் முதலிய இல்லையோ, இவையும் இல்லை.

Posted in அரேபியா, இந்தியவிரோதிகள், இந்தியா, இமயம், சீனா, சைனா, சோழர், திபெத், திராவிடவாதிகள், பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாரதம், பிரிவினைவாதிகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »