சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘கம்பளி’ Category

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].

அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:

  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.

பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.

அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:

  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.

ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].

அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.

சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.

நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.

© வேதபிரகாஷ்

22-09-2012


[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:

K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.

[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.

[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.

[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.

[5] Col. Wilford, Asiatik Researches, Vol.III, p.326.

[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.

[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, opt.cit.

S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.

இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!

[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.

[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.

[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

Posted in அப்ரோடைட், அரேபியா, அல்-அரப்-அல்-அரிபா, அல்-அரப்-அல்-பைதா, அல்-அரப்அல்-மூதா‘அர்ரிபா, ஆதிநாத, ஆத்மா, ஆனந்தம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், ஓடந்தபூர், ஓலை, கத்தி, கம்பளி, காபாலிக, காபாலிகம், கிர்கிஸ்தான், சடங்குகள், சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரி, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சூபி, தஜிகிஸ்தான், தத்துவஞானிகள், தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், துறவி, நிர்வாணம், பாதரசம், பிண்டம், பித், யோகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

இஸ்லாமிற்கு–நபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 23, 2012

இஸ்லாமிற்குநபிக்கு (570-632 CE) முன்புஅரேபியாவில்இருந்தவர்கள் (சித்தர்களைத்தேடி)

இந்தியசரித்திரத்தைப்புரட்டிஅல்லதுதவறாகஎழுதிமற்றநாட்டுசரித்திரங்களைஅறிந்துகொள்ளமுடியாது: கிரேக்கர்களுக்கு முன்பு (c.1800 – 327 BCE) – பின்பு (326 – 100 BCE) எப்படி இந்திய சரித்திரம், மேனாட்டவர்களால் புரட்டப்பட்டதோ, அதாவது இந்திய சரித்திர உண்மைகளைத் திரித்து மேனாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சரித்திரத்தை எழுதிகொண்டார்களோ, அதேபோல, அரேபியர்களுக்கு முன்பு (100- 712 CE) -பின்பு (712 – 1707 CE) என்றும் இந்திய சரித்திரம் புரட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது[1]. முஹமது நபிக்கு (570-632 CE) முன்பிருந்த அரேபிய சரித்திரத்தை மறைத்து உண்மைகளை அறியமுடியாது. இந்தியாவிற்கும், அரேபியாவிற்கு அல்லது அரபிஸ்தானத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்தால் தான் ஆன்மீகரீதியில், மருத்துவரீதியில், விஞ்ஞானரீதியில் உண்மைகளை அறியமுடியும். அரேபியாவில் இருந்த சித்தர்களை அறியவேண்டுமானால், இஸ்லாம் பிறப்பதற்கு முந்தியுள்ள – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கிரேக்கமருத்துவர்களால்அலெக்சாந்தரைஏன்காப்பாற்றமுடியவில்லை?: இந்தியாவின் சரித்திரமே 327-326 BCEலிருந்துதான் ஆரம்பிக்கிறது, அதுதான் இந்திய சரித்திரத்தின் உறுதியான, தீர்மானிக்கப்பட்ட ஆரம்பகாலம் என்றனர்[2]. ஆனால் 327-326 BCE என்பது அலெக்சாந்தர் பாரதத்தின்மீது படையெடுத்துத் தோற்று, கிரேக்கத்திற்கு திரும்பச் செல்லாமலே வழியிலேயே 323 BCEல் பாபிலோனியாவில் இறந்து போன காலத்தைக் குறிக்கிறது[3]. அதாவது ஈட்டிக் குத்தி காயப்பட்டு, ரத்தப்பெருக்கு ஏற்பட்ட அலெக்சாந்தரை, தலைசிறந்த கிரேக்க மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவன் 10 நிர்வாண சாமியார்களைப் பிடித்தபோது, ஒரு சாமியார் பூமியின்மீது தனது காலை உதைத்து சைகை செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டபோது, அவனது கிரேக்க அறிவுரையாளர்கள்[4], “நீங்கள் மண்ணோடு மண்ணாகி விடுவாய்”, என்று உருவகமாகக் கூறுவதாக விளக்கம் அளித்தபோது, கோபம் கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவதாக கிரேக்கக் கதைகள் கூறுகின்றன[5]. அதாவது இந்தியத் துறவிகளை அந்த அளவிற்குத் துன்புறுத்தியுள்ளான். ஞானத்தை அறியவேண்டுமானால், ஞானிகளிடம் பணிவாக இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதிகாரத்தினால், ஆணவத்தினால், பனத்தினால் ஞானத்தைப் பெறமுடியாது. அவற்றால் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், சீக்கிரமாகவே அத்தகைய வசதிகள் அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

சுமார் 1450 BCEயில்அரேபியாவிற்குவடமேற்கில்வேதமதம்இருந்தது: சித்தர்களைத் தேடும் முயற்சியில், கிரேக்கத்திற்குப் பிறகு அரேபியாவிலும் தேடவேண்டியுள்ளது. கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் தரைவழியாக போக்குவரத்து துருக்கி, மெசபடோமியா (இராக்), பாரசீகம் (இரான்), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), சிந்து (பலுச்சிஸ்தான், பாகிஸ்தான்) முதலிய நாடுகளின் வழியாக இருந்து வந்தது. துருக்கி-மெசபடோமியா பகுதிகளுக்குக் கீழ் அரேபியா-அரேபியதீபகற்பம் உள்ளது. அங்குள்ள மக்களும் அங்கிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கேற்ப தங்களது வாழ்க்கையினை தவமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்திருப்பர். போகோஸ்காய் (Bogazkoi, Turkey) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, மிட்டானிய (Mittanians) மற்றும் ஹிட்டைட் (Hittites) மக்கள் “இந்திரசீல்மித்ரசீல்வருணசீல்நசாத்யா” என்ற கடவுளர்களை தமக்குள் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு சாட்சிகளாக இருக்குமாறு விளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற கடவுளர்களான தேஷுப் (Teshup) மற்றும் ஹெபா (Hepa) என்கின்றவர்களையும் சேர்த்து வேண்டுகிறார்கள்[6]. அதாவது அக்காலத்தில், அந்த இடத்தில் அத்தகைய சமரசம் மிட்டடனிய-ஹிட்டை மக்களிடம் இருந்துள்ளது. இக்கல்வெட்டு சுமார் 1450 BCE காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாய்வு நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அக்கடவுளர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அஸ்வினி தேவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தேவதைகளாகக் கருதப்படுகின்றனர்.

அரேபியாவின்வடக்கில்இரானில்இருந்தமக்கள் (சுமார். 2500-2000 BCE): இதைத்தவிர, இந்ததஸு, இந்தபீபி, இந்தத்து, ஹிந்தியன், எனபல் பெயர்கள் இப்பழமையான நாகரிகங்களில், அரசர்களுக்கு, படைத்தளபதிகளுக்கு, நதிகளுக்கு, இடங்களுக்கு உபயோகப்படுத்தியுள்ளனர்[7]:

  1. இந்ததஸு/இந்தாஸு – ஊர்- III காலத்தைச் சேர்ந்த அரசன்[8].
  2. ஷிருக்-து, இந்தாஸு வரையில் வெற்றிக் கொள்ள விரும்பினான்[9].
  3. ஷாமஸ்-ஷும்-உகின் என்ற அரசனை இந்த்பீபி என்ற தளபதி வென்றான்[10].
  4. ஷுதுர்-நஹுந்தே, இந்தததாவின் மைந்தன்[11].
  5. இந்தத்து – இஷின் என்ற நநட்டின் அரசன்[12].
  6. ஹிந்தியன்– மெசபடோமியயவில் பபயும் ஐந்து நதிகளில் ஒன்று, இதன் மறுபெயர் ஜுரேஹ்[13].
  7. ஹிந்தாரு – சர்கோன் என்பவன், கம்புலு மக்களின் இடங்களை வென்றான். அவற்றுள் ஒரு இடத்தின்பெயர்[14].

எனவே, அரேபியாவிற்கு வடக்கில் அத்தகைய வேதமதத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லது வேதமதக் கடவுளர்களை அறிந்தவர்கள் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஜைனர்கள் அப்பகுதிகளில் சென்ற தேதியை ஒத்துள்ளது.

அரேபியாவின்வடக்கிழக்கில்சுமார் 3000 BCEல்மருந்துமூலத்திரவியத்தொகுப்பு (Phamacopoeia): சுமேரிய நாகரிகத்தை ஆய்ந்தவர்கள், சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உண்டாக்கப்பட்டது, என்கிறார்கள்[15].  ஆனால், சிந்துசமவெளி மருத்துவத்தைப் பற்றி அடக்கி வாசிக்கிறர்கள். கேட்டால் அவர்கள் சரித்திர-ககலத்திற்கு முந்தையவர்கள் என்கிறார்கள்[16]. கியூனிபாம் எழுத்துகளின் (Cuniform tablet) மண்பலகைகள் கிடைத்திலிருந்து, அவற்றைப் படித்து, அவர்கள் இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர். அவை முழுமையாக இல்லாததினால், முழுவிவரங்களை பெறமுடியவில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்மருத்துவத்தின் தேவதை பௌ (Bau), நினிசின்னா (Ninisinna) மற்றும் குலா (Gula) என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அம்மருந்து தயாரிப்பில் உபயோகப்படும் ரசாயனப் பொருட்கள் – உப்பு (Sodium Chloride), வெடியுப்பு (Salt peter – Poataasium nitrate).  மற்றவையெல்லாம் மூலிகைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் முதலியன. பொட்டாசியம் நைட்ரேட் பெறும் முறை எகிப்தியர் மற்றும் இந்தியர்களுக்குத் தெரியும் என்று அவர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்[17]. அப்படியென்றால், சிந்துசமவெளி மருத்துவத்திற்குண்டான மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) இருந்ததா, இல்லை காணாமல் போயிற்றா, இல்லை கண்டெடுக்கப்பட்டும் மறைக்கப் பட்டதா?

மேற்கே எழுத-படிக்கத் தெரிந்த ஆரியர்கள் பாரத்ததிற்கு வந்ததும் படிக்கத்தெரியாமல் போய்விட்டார்களா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விஷயங்களை ஆராயவேண்டியுள்ளது.

  1. சுமார் 1450 BCEயில் அரேபியாவிற்கு வடக்கில் வேதமதம் இருந்தது.
  2. இரானில் இருந்த மக்கள் (சுமார். 2500-2000 BCE)
  3. சுமார் 3000 BCEல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia)

அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 1450 BCEயில் வேதமதம் இருந்து, சுமார். 2500-2000 BCEல் அவர்கள் பெயர்கள் மட்டும் இருந்து, சுமார் 3000 BCEல் முதல் மருந்துமூலத் திரவியத் தொகுப்பு (Phamacopoeia) உருவாகிறது எனும்போது, அதிலுள்ள காலக்கணக்கியல் உறுத்துகிறது, உதைக்கிறது மற்றும் முரண்பபடாகத் தோன்ருகிறது. ஏனெனில், ஆரியர்கள், இந்தோ-ஆரியர்கள் போன்றோர், மேற்கிலிருந்து, கிழக்கில் வந்து இந்தியாவில் புகுந்தனர் என்றால், அத்தேதிகள் எப்படி 1450 BCE – சுமார். 2500-2000 BCE – சுமார் 3000 BCE என்றிருக்கும்? இந்தியாவில் நுழைந்த ஆரியர்களின் காலம் 1500-1000 BCEல் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், அக்காலக்கணக்கீடு BCE – சுமார் 3000 BCE – சுமார். 2500-2000 – 1450 BCE என்றுதான் இருக்கவேண்டும் அப்பொழுது இந்தியாவில் நுழைந்த காலம் 1500-1000 BCEயுடன் ஒத்துப்போகின்றது. இல்லையென்றால், ஆரியர்கள் இந்தியயவிலிருந்து வெளியே சென்றிருக்க வேண்டும். அப்படியென்றால் அவர்களின் காலம் சுமார் 3000 BCEற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். அதாவது, கிழக்கில் படிக்கத் தெரியாதவர்களாக இருந்து, மேற்கே செல்ல-செல்ல அவர்களுக்கு படிப்பறிவு வருகிறது என்றால், அது எந்த சித்து வேலை என்று தெரியவில்லை. இதே முறைதான், அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்தான் என்ற கதையிலும் வருகிறது.

எந்த மக்களின் நநகரிகம் தொடர்ந்து “வாழ்ந்து வரும் நாகரிகமாக” இருக்க முடியும்?: மக்களின் நீண்ட ஆயுள்காலம், ஆரோக்கியம், வளமான வாழ்வு, முதலியவைதாம் ஒரு நாகரிகம் எத்தகைய தாக்குதல்களில் சிக்குண்டாலும், எதிர்த்து மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாகரிகமாக இருக்க முடியும். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நாகரிகம் இந்திய நாகரிகம் தான்[18]. இந்தியாவைவிட உயர்ந்தவை, இந்தியா அவற்றிடமிருந்து காப்பியடித்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சிறந்தது என்ற் மேனாட்டவர் பெருமை பேசி, இந்தியாவை சிறுமைப் படுத்தி வந்தாலும், அந்நாகரிகங்கள் ஏன் அப்படி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன என்று அவர்கள் விளக்குவதில்லை. ஆகவே, மேனனட்டவர்கள் எப்படி சரித்திரத்தைப் புரட்டியிருக்கிறார்கள்-தலைகீழாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரேபியர்கள் முகபதியர்கள் ஆனவுடன், அதேபோல பழைய பழக்க-வழக்கங்களை மமர்ரியமைத்திருக்கிறார்கள்.

பாலியல், ரசவாதம், ஆயுள்நீட்டிப்பு: கிரேக்கமதம் இந்துமதத்தை ஒத்திருந்தாலும், ஜைனர்களால் அது பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு, உருமாற ஆரம்பித்தது. பைதாகோரஸ் போன்றோர் உண்மையான ஞானம் போன்றவற்றில் ஈடுபட்டாலும், மற்ற கிரேக்க சாமியார்கள் பலவித முறைகளைக் கையாண்டார்கள்.

  • எபிகுயூரியன் (342-270 BCE) என்பவரின் போதனைகள் வாழ்க்கை வாழ்வதற்கே, சந்தோஷத்திற்கே, அனுவவி ராஜா அனுபவி போன்ற கொள்கைகளில் (Hedonism[19]) இருந்தது.
  • சிம்போஸியத்தில் கிரேக்கர்கள் நிர்வாணமாகப் பங்கு கொண்டார்கள் என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.
  • 4 நுற்றாண்டில் BCE பெண்-நிர்வாணமும் மறுக்கப்படவில்லை.
  • ஓரினப்புணர்ச்சி கிரேக்கர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. சோடோமி (Sodomy) என்பது ஆண்களுக்கிடையிலுள்ள ஓரினப்புணர்ச்சி[20].
  • இதைத்தவிர ஆணுமில்லை-பெண்ணுமில்லை என்றுள்ள அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களும் இருந்தார்கள்[21]. ஆண்களுக்கு பெண்களின் உறுப்புகளும், பெண்களுக்கு ஆண்களின் உருப்புகளும் உள்ள மனிதர்கள் அப்ரோடைட் எனப்பட்டார்கள்.
  • ஹெர்மாபுரோடிடோஸ் அல்லது ஹெர்மாபுரோடிடஸ் (Hermaphroditos or Hermaphroditus) ஹெர்மாபுரோடைட்டுகளின் ஆண்-தேவதை. இவன் ஹெர்மிஸ் (Hermes) மற்றும் அப்ரோடைட் (Aphrodite) என்பவர்களுக்குப் பிறந்தவன். எரோட்டுகள் (Erotes) என்ற தேவதைகளுள் சேர்க்கப்பட்டுள்ளான்.
  • பெரும்பாலான காமம், கொக்கோகம், பாலியல் முதலியவாற்றில் உபயோகப்படுத்தப்படும் சொற்கள் கிரேக்கத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளன – ஈராஸ் = Eros (Love), ஆசை / காமம் (Himeros =Desire), பெருங்காமம் (Pothos =Passion), காமவெறி (Voluptas = sez-raged.
  • வீனஸ் என்ற தேவத்தையிலிருந்து பெறப்படும் இச்சொற்கள் காதல், உடலுறவு, பாலியல், பாலியல் நோய்கள், மருந்துகள் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன[22].
  • அரிஸ்டாடில் ஆலிவ் எண்ணையை கர்ப்பத்தைத் தடுக்கும் களிம்பாக உபயோகப்படுத்தலாம் என்று 4 BCEயில் கூறினார்.
  • ஹெர்மிஸ் (Hermes) என்பவன் தான் ரகசிய சித்தாந்தங்கள், ரசவாதம் முதலியவற்றிற்கு தேவன்[23]. அதாவது கிரேக்கர்களைப் பொறுத்தவரைக்கும், காமம் ரசவாதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • ஓவிட் (Ovid) மற்றும் லூசியன் (Lucian) போன்றோரது கொக்கோக-காமக்களியாட்ட இலக்கியங்கள், அவர்களது கிரக்கத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.
  • இதைத்தவிர பாலியல், உடலுறவு செய்முறை நூல்களும் பெருகின[24].

மேலே குறிப்பிட்ட ஒன்றொன்றிற்கும் அக்கால சிற்பங்கள், ஓவியங்கள், உலோக விக்கிரங்கள் முதலியவை உலக பிரசித்தி பெற்ற கலைக்கூடங்களில், அருங்காட்சியகங்களில் உள்ளன. கிரேக்கர்களைப் பின்பற்றி வந்த ரோமானியர்களில் இவ்விஷயங்களில் சளைத்தர்கள் அல்லர்[25]. அதிக உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும்; அதிக பெண்களிடம் உடலுறவு கொண்டால் ஆயுள் பெருகும்;  கன்னிகளுடன் உடலுறவு கொண்டால், ஆயுள் பெருகும், என்று தவறான பல கருத்துகள் உருவானதால், அத்தகைய தீய இலக்கியங்கள் உருவாகின, சமூகமும் சீரழிந்தது. கிரேக்க ரசவாதம் இப்படி பாலியில் உருமாறி, உருக்குலைந்ததற்குக் காரணம் அவர்கள் ஜைனர்களின் முறைகளை துஷ்பிரயோகம் செய்தது தான். இதனால் மந்திர-தந்திர-யந்திர போன்ற சடங்குகள் அங்கும் கடைபிடிக்கப்பட்டன என்று தெரிகிறது. ஆனால், அவை பாலிய ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் பலவித பாலியல் திரிபுகள் ஏற்பட்டன.

வெள்ளையாடைஅணிந்தமற்றசாமியார்கள் / சந்நியாசிகள்: வெள்ளையாடையை அணிந்த எஸ்ஸென்ஸ் (Essences), ஞாஸ்டிக் (Gnostic), மணிக்கியர் (Manichaeans) போன்றோர் பிரமச்சரியம், ஒழுங்கு, கட்டுப்பாடு முதலிவற்றைப் பின்பற்றினர். பின்னர் வந்த மணி (216-276 CE) என்பவரோ, இல்வாழ்க்கை வேண்டாம், திருமணம் வேண்டாம் என்றெல்லாம் போதித்தார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், மணி பாரசீகத்தில் துறவரம் கடைப்பிடித்த ஆசாரமான யூதகுடும்பத்தில் பிறந்தவர். பன்னிரெண்டு வயதில் ஞானம் பெற்று, போதிக்க ஆரம்பித்தார். கிழக்கில் பாரதம் வரையில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிறகு மத்திய ஆசியா சென்று மெடபடோமியா, சிரியா, இஸ்ரேல் வழியாக அலெக்சாந்திரியாவிற்கு வந்தார். ஆனால் இவரது போதனைகள் ஒவ்வாததனால், அங்கிருந்த பஹ்ரம் – I (Bahram – I 273-276) இவரை 276ல் தூக்கிலிட்டான். இருப்பினும், மணியுடைய பிரமச்சரியக் கொள்கைகள் மேற்கில் எகிப்து, ரோம், இங்கிலாந்து மற்றும் கிழக்கில் சைனா வரை பரவியது[26].

300-500 காலத்தில் இதன் தாக்கம் இருந்தது. கிரேக்க-ஜைனர்களில் அளவிற்கு மீறிய பாலியல் தீமைகள், கொடுமைகள் மற்றும் குற்றங்கள், இவற்றை எதிர்த்து, திருத்தத்தான், இம்மதம் மக்களிடம் வேகமாகப் பரவியது எனலாம். இதேபோல ஞாஸ்திக மதத்தின் (Gnosticism) தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இதன் மூலங்களை மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரியாது அல்லது ஒருக்கின்ற யூதமதத்திலிருந்துதான் தோன்றியது என்று வாதிட்டாலும், ஜைனர்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. அதாவது, 1450 BCEல் இருந்த வேதமதத்தை மறந்துவிட முடியாது.

அரேபியாவியாவைச்சுற்றியிருந்தவேதமதம்: அரேபியைச் சுற்றியிருந்த வேதமதம் அரேபியாவிற்குள் நுழையவில்லை என்றாகாது. இஸ்லாம் வரும்வரை அங்கிருந்த மக்கள் அநாகரிகமாக, பாகன்களைப் போலிருந்தார்கள் (Pagans, Barbarians) என்று சொல்வது சரித்திரப் பொய்யாகும். 1450 BCEலிருந்து 650 CE வரை அப்படியே இருந்தார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய பொய் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலேயுள்ள வரைப்படத்திலிருந்து சுமார் 1400 BCE காலத்தில் கானான், அமுறு, நுஹாஷே, மிட்டானி, ஹஸ்ஸுக்கன்னி, அசூர் (அசீரியா), தூர்-குரிகள்ஜு, கேசைட் (பாபிலோனியா) முதலிய மக்கள், அரேபியாவின் வடமேற்கு-வடக்கு-வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தனர். மேற்குறிப்பிட்ட பகுதிகள் இப்பொழுது, இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், சிரியா, இராக், இரான் என்ற நாடுகளாக உள்ளன. அவர்களது சிற்பங்களை பார்த்தால், அவை பாரதநாட்டவருடையது என்று எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது[27]. அவ்விடங்களின் பெயர்கள் – ஏயில்காயா, நிஸந்தா, அம்பர்லிகாயா, புயுக்காயா, ஹத்துஸா, போகாஜ்கோய் என்றுள்ளன. ஆகவே, அரேபியர் தனித்து வேறு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு கொண்ட மக்களாக இருந்திருக்க முடியாது. அரேபியாவில் கிடைத்துள்ள அகழ்வாய்வுப் பொருட்கள், சிற்பங்கள், பாத்திரங்கள் முதலியனவும் மேற்குறிப்பிட்ட மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டுக் காரணிகளுடன் ஒத்துப் போகின்றன. ஆகவே, அங்கு சக்தி-சிவன், சிவ-சக்தி, மும்மூர்த்தி, மூன்றுதேவதைகள் முதலியவர்களின் வழிபாடு இருந்துள்ளது வியப்பாக இல்லை.

இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் யூதம், கிருத்துவம் மற்றும் முகமதியம் ஒவ்வொன்றாக வளர்ந்து வரும் போது பழைய நாகரிகங்கள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. 670 BCEல் அசீரியர் எகிப்தை வென்றனர்.  356-323 BCE காலத்தில் எகிப்தை அலெக்சாந்தர் வென்று, தனது தளபதி டாலமியை அரசனாக்கினான். 30 CE காலத்தில் ரோமர்களால், கிரேக்கம் மற்றும் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டன. இப்படி அம்மக்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதால், பாபிலோனியர் (Babylonians), அசீரியர் (Assyrians), சால்டியர் (Chaldeans), அராமியர் (Araamaeans), போனீஷியர் (Phoenecians), முதலியோரது நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு முதலியன அம்மக்களோடு மறைந்து வெறும் கதைகளாகி விட்டன. இருப்பினும், அங்கிருக்கும் மக்கள் சில பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள் முதலியற்ரைத் தொடர்ந்து நடத்திவருவதால், அவற்றிலிருந்து அந்த பழைய கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.

© வேதபிரகாஷ்

21-09-2012


[1] வின்சென்ட் ஸ்மித், ஜான் பிளீட் போன்றோர்அலெக்சாந்தர் பாரத்தத்தின்மீது படையெடுத்த 327-326 BCE காலத்திலிருந்து தான் இந்திய சரித்திரம் ஆரம்பிக்கிறது, அதற்கு முன்னர் இந்தியாவிற்கு சரித்திரமே இல்லை என்ற அடிப்படையில் எழுதி வைத்த சரித்திரத்தைத் தான், இப்பொழுதும் இந்தியர்கள் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கின்றனர். அலெக்சாந்தர் காலத்தில் பாரத்தை ஆண்டது குப்தர் வம்சத்தின் சந்திரகுப்தர் இல்லை, மௌரியர் வம்சத்தின் சந்திரகுப்தர் என்று திரித்ததால் 1200 வருட இந்திய சரித்திரம் சுருக்கப்பட்டது. இதனால் தான் இந்திய சரித்திரத்தில் பல புதிர்கள் உண்டாயின. புரிந்து கொள்ளாதோர் புதிய விளக்கங்கள் கொடுத்து, உள்ள சரித்திரத்தையே புரட்டிவிட்டு, அதற்கும் ஒரு முறையை உண்டாக்கி குழப்பியுள்ளனர்.

[2] The British history writers arbitaratily declared that “The Alexander’s invasion is is the sheet anchor of Indian history”, without any authority.

[3] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and their Influence on India, www.hinduwebsite.com

[4] Arrian.viii, 1.5 ff.

[5] McCrindle, The Invasion of India by Alexander the Great as described by Arrian, Quitus Curtius, Diodorus, Plutarch and Justin, London, 1896.

[6] George Roux, Ancient Iraq, Penguin Books, U.K, 1980, p.218.

[7] D. T. Potts, The Archaeology of Elam – Formation and Transformaton of an Ancient Indian Iranian state, Cambridge University Press, UK, 1999, p.

[8] Indassu – name of an ensi of Zabshali in the Ur III eriod, p.168.

[9] Shiruk-tuh wanted to conquer upto Indassu, p.141.

[10] Indabibi – name of a general who overthrown Shamash-shum-ukin, p.282

[11] Shutur-Nahhunte, son of Indada, p.303.

[12] Indattu – king of Isin, p.148.

[13] Hindian – one of the five rivers flowing in Mesopotomia, otherwise mentioned as Zuhreh, p.15.

[14] Hindaru – a place conquered by Sargon, of the Gambulu tribe.

[15] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.60-64.

[16] இப்பொழுது புரோட்டோ ஹிஸ்டரி (Protohistory) என்ற சொல்லை உபயோகித்ததலும், மனங்களில் பிரி-ஹிஸ்டரி (pre-history) என்ற கருத்தை வைத்துக் கொண்டுதான் படிப்பறிவு இல்லாத ஹரப்பன்கள் (Illiterate Harappans) என்று அந்த மேனனட்டு அறிவுஜீவிகள் கூறிவருகின்றன. நமது திராவிட கூட்டங்களும் அடிவருடிக் கொண்டு, பட்டங்கள் கொடுத்து பபராட்டு விழா எடுத்துக் கொண்டிருக்கின்றன.

[17] Samuel Noah Kramer, History Begins at Sumer – Thirty-Nine Firsts in Man’s Recorded History, University of Pennsylvania Press, Phladelphia, USA, 1981, pp.62-63

[18] சீன நாகரிகமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த இரு நாகரிகங்கள் தாம் தொடர்ந்து இருந்து வருகின்றன, மற்றவை மறைந்து விட்டன.

[19] Hedone was the spirit (daimona) of pleasure, enjoyment and delight. As a daughter of Eros (Love) she was associated more specifically with sensual pleasure. Her opposite numbers were the Algea (Pains). The Romans named her Voluptas.

[20] Sodomy, sodomites inhabitants of Sodom. Male homosex.

[21] Hermaphroditism = human being having both man and animal characteristic, nymph Solmacts

[22] Aphrodite = Aphrodiastic venereal, drug producing venereal disease,

Aphrodiasiac, aphrodisios, aphrodite = derived from Venus, the goddess of love etc.

[23] Hermes = author of mysterious doctrines, ecrets of alchemy

[24] Twleve Arts of the Actions of Love, Ovid’s Arts Amatoria etc are covered under “Classical literature”.

[25] David Mountfield, Greek and Roman Erotica, Miller Graphics, Italy, 1982.

[26] Richard Foltz, Religions of the Silk Road, St. Martin’s Press, New York 1999.

[27] கூகுள் தேடலில் – Yazilkaya, Nisantas, Ambarlikaya, Mihraplikaya, Büyükkaya, Hattusha, Boğazköy – என்ற வார்த்தைகளை தட்டெச்சு செய்தால் அச்சிற்பங்களைப் பார்க்கலாம்.

Posted in அப்ரோடைட், அரேபியா, ஆகாயம், ஆன்மா, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், ஆரியம், இந்தியவிரோதிகள், இந்தியா, உடல், உயிர், உஸ்பெகிஸ்தான், எபிகுயூரியன், கஜகிஸ்தான், கண், கத்தி, கனிமம், கம்பளி, கருத்து, கரைசல், கற்பம், கலாச்சாரம், கல்பம், காபாலிக, காமாக்கியா, காயம், காற்று, கிர்கிஸ்தான், கை, சக்தி, சடங்குகள், சட்டைமுனி, சம்பிரதாயங்கள், சஹஜயான, சிகிச்சை, சிதர், சிதார், சித், சித்தகுரு, சித்தஜலம், சித்தஞானம், சித்தபுரம், சித்தபுரி, சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தயோகம், சித்தர், சித்தர் பாடல்கள், சித்தார்த், சித்து, சிந்து, சிந்து சமவெளி நாகரிகம், சீனா, சுத்தம், சூபி, சைனா, சைவம், ஞானம், ஞானி, தந்திரம், திகம்பர, திகம்பரம், திகம்பரர், துர்க்மேனிஸ்தான், துறந்தவர், துறவி, நாகரிகம், நாட்டு மருத்துவம், நாத்திகம், நிம்மதி, நிர்வாணம், நீர், நுண்ணிய அறிவு, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதினென் சித்தர்கள், பரம்பரை வைத்தியர், பாதரசம், பாரதம், பாரம்பரியம், பாலியல், பித்து, போகோஸ்காய், மத்திய ஆசியா, மந்திரம், மனச்சிதைவு, மனம், மருந்து, முஹம்மது கஜினி, யோகா, விழாக்கள், வேதம், ஹெர்மாபுரோடிடோஸ், ஹெர்மிஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 15, 2012

பௌத்த-திபெத்திய சித்தர் பட்டியலிலிருந்து திராவிட சித்தர்களின் பட்டியல் பெறப்பட்டதா?

பௌத்த பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதால் பௌத்த சித்தர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றது: பௌத்தமத்தத்தில் வஜ்ரயான தந்த்ர போதனைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தவர்கள் சித்தர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்தியாவில் அவர்கள் ஏழாவது நூற்றாண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு வரை சிறந்திருந்தனர்[1].  முகமதியப் படையெடுப்புகளினால் தக்ஷசிலா (Dhakshasila), நாலாந்தா (Nalanda), விக்ரமசிலா (Vikramasila), ஓடந்தபூர் (Odantapur) போன்ற மிக்கப்பெரிய பல்கலைக்கழகங்கள் / மஹாவிஸ்வவித்யாலயங்கள் முதலியவை தாக்கி அழிக்கப்பட்டதால், பேராசிசியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஞானிகள் முதலியோர் தப்பியோட வேண்டியதாயிற்று. அவர்கள் நாலாப்பக்கங்களிலும் சிதறியோடினர். இதனால் தந்தரமுறைகள் அந்தந்த நாடுகளில் பரவியது[2]. வைரோச்சன என்பவர் பௌத்த தந்திரிகமுறையைத் தோற்றுவித்தவர். குலாச்சார, வாமாசார, சஹஜயான, வஜ்ரயானப் பிரிவுகள் அந்நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஒவ்வொரு ஆண்தேவதைக்கும், ராகினி, லாகினி, சாகினி, ஹாகினி, குபுஜீகா போன்ற பெண்தேவதையும் சேர்க்கப்பட்டது[3].

நாடுகளில் பரவியது

வைரோச்சனின் பெயர் / மாற்றம்

விளக்கம்

மஹாயான பௌத்தம் தியானி புத்தா சிவன் புத்தனைப்போல சித்தரித்துள்ளார்கள். அதனால், ஒரு புத்தருக்குப் பதிலாக ஐந்து புத்தர்கள், ஐந்துதிசைகளில் (சிவனின் ஐந்து முகங்கள் போல) உள்ளனர். பிறகு சக்தியையும் சேர்த்துள்ளனர். ஒன்று மூன்றாகி, ஐந்தாகி, எழாகி, ஒன்பதாகி விட்டன. எட்டு, 84 என்றாகியதைப் போல சித்திகள் சக்திகளுடன் இணைத்து, முறைகளும் புகுத்தப்பட்டன.
நேபாளம் ஆதிபுத்தா
சீனா வஜ்ரசத்வா,நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜப்பான் வஜ்ரசத்வா, நாகார்ஜுனா, வஜ்ரபோதி, அமோகவவஜ்ர
ஜாவா முதலிய தென்கிழக்காசிய நாடுகள்

எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: 84 சித்தர்கள் இருந்தார்கள் என்று 1506 ஆண்டு தேதியிட்ட மைதிலி மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆவணம் – “வர்ணரத்னாகர” என்ற நூல் – பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால் 76 பெயர்கள் மட்டும்தான் காணப்படுகிறது[4].

  1. மீனநாத
  2. கோரக்கநாத
  3. சௌரங்கிநாத
  4. சாமரிநாத
  5. தந்திபா
  6. ஹாலிபா
  7. கேதாரிபா
  8. தோங்கபா
  9. தாரிபா
  10. விருபா
  11. கபாலி
  12. கமாரி
  13. காண்ஹ
  14. கனஹல
  15. மேகல
  16. உன்மன
  17. காந்தலி
  18. தோவி
  19. ஜாலந்தரா
  1.   தோங்கி
  2. மவஹா
  3. நாகார்ஜுனா
  4. தௌளி
  5. பிஷாலா
  6. அசிதி
  7. சம்பக
  8. தேந்தச
  9. பூம்பாரி
  10. பாகலி
  11. துஜி
  12. சர்பதி
  13. பாடே
  14. சாந்தனா
  15. காமரி
  16. கரவத்
  17. தர்மபாபதங்க
  18. பத்ரா
  19. பாதலிபத்
  1. பலிஹிஹ
  2. பானு
  3. மீன
  4. நிர்தய
  5. சவர
  6. சாந்தி
  7. பாரதிஹரி
  8. பிஷண
  9. படி
  10. கங்கப
  11. கமார
  12. மேனுரா
  13. குமார
  14. ஜீவன
  15. அகோசாதவ
  16. கிரிவர
  17. சியாரி
  18. நாகவலி
  19. பிபவத்
  1.  சாரங்க
  2. விவிகதஜா
  3. மகரதஜ
  4. அசித
  5. பிசித
  6. நேசக
  7. சாதல
  8. நாசன
  9. பிலோ
  10. பாஹல
  11. பாசல
  12. கமலகங்காரி
  13. சிபில
  14. கோவிந்த
  15. பீம
  16. பைரவ
  17. பத்ர
  18. பமரி
  19. புருக

திபெத்திய பாரம்பரியப்படி எண்பத்து நான்கு பௌத்த சித்தர்கள்: திபெத்திய பாரம்பரியத்தில் 84-சித்தர்களின் பெயர்கள் (சதுரசிதிஸ்சித்தர்), “சதுரசிதி-சித்த-பிரவுருத்தி” என்ற நூலில் காணப்படுகிறது, விளக்கம் இவ்வாறுள்ளன. அபயதத்தர் (சுமார். 1100 CE) என்பவர் இந்த விவரங்களைக் கொடுத்துள்ளார்[5]. இந்த ஓலைசுவடிப் புத்தகத்தில் அழகான சித்தர்களின் வண்ணப்படங்களும் உள்ளன[6]. இங்கு “ப” என்பதனை “பாத” என்று வாசிக்க வேண்டும். அஜிந்தபாதன், அஜோகிபாதன், சம்பகபாதன், சௌரங்கிபாதன் என்று பெயர்கள் வரும், அவற்றிலிருந்து அப்பெயர்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.

எண் பெயர் பொருள் விளக்கம்
1 அசிந்த / அசிந்தப பேராசைக் கொண்ட துறவி விறகுவெட்டி, விறகு வியாபாரம்
2 அஜோகி /அயோஜிப ஒதுக்கப்பட்ட பிரயோகமில்லாதவன் பிணமாக நடித்தவன்
3 அனங்கப/அனங்க/அனங்கவஜ்ர அழகான முட்டாள் சுந்தரானந்தர் / குதம்பைச் சித்தர்?
4 ஆர்யதேவ/ஒருகண்ணையுடைவர் நாகார்ஜுனரின் சீடர் மஹாசித்தர்களில் ஒருவர்
5 பபஹ சுற்றித் திரியும் காதலன்
6 பத்ரப ஜம்பப் பேர்வழி தனியான பிராமணன்
7 பண்டேப பொறாமைப்படும் கடவுள்
8 பிக்ஷனப இரண்டு பற்கள் கொண்ட சித்தன்
9 புஸுகு/புஸுகுபாத சோம்பேரி சந்நியாசி ஜடம்-ஒருவேலையும் செய்யாதவன்
10 சமரிப தெய்வீக சக்கிலியன்
11 சம்பக/சம்பகபாத மலர்களுக்கு அரசன்
12 சர்பரிப/சர்பதி மக்களைக் கல்லாக்கியவன் கல்லாக்குபவன்; கல்லுளி சித்தர்?
13 சத்ரப ராசியுள்ள பிச்சைக்காரன் அதிருஷ்டம் உள்ளவன்
14 சௌரங்கிப அங்கஹீனன் கை-கால்கள் இல்லாதவன்
15 சேலுகப மறுபடியும் வீர்யம் பெற்றக் கொக்கு கொங்கணவன்
16 தரிகப கோவில் விபச்சாரியின் அடிமை அரசன்
17 தேன்கிப பிராமண அடிமை
18 தௌலிப முற்கள் கொண்ட கயிறு திரிப்பவன்
19 தர்மப என்றைக்கும் மாணவன்
20 திலீப சந்தோஷமான வியாபாரி சுகவான்; தேரையர்?
21 தோபின அறிவுள்ள வண்ணான்
22 தோகரிப பாத்திரங்களை சுமப்பவன்
23 தோம்பி ஹெருக புலி சவாரி செய்பவன் புலிப்பாணி?
24 துக்காண்டி பெருக்குபவன், சுத்தம் செய்பவன்
25 கண்டப பிரமச்சரியத்தைக் கடைபிடிக்கும் துறவி மணியடிக்கும் துறவி
26 கர்பரி/கர்பரிப துக்கமளிக்கும் பண்டிதன்
27 கோதுரிப/கோரூர பறவைப் பிடிப்பவன்
28 கோரக்ஷ / கோரக்கநாத நிரந்தரமாக மாடு மேய்ப்பவன் பசுக்களைக் காப்பவன் – இவர் கோரக்கரக்கவும் அல்லது திருமூலராகவும் கொள்ளலாம்.
29 இந்திரபூதி திலோபனின் குரு எந்திரியங்களை வென்றவன்
30 ஜலதார தகிணி என்பவரின் சேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் நீரைப்போன்று வேகமாமக செல்லக்கூடியவன்/ ஓடுபவன்
31 ஜெயந்தர காக்கையின் ஆசிரியர் காகபுசசுண்டர்?
32 ஜோகிப சித்தப் பிரயாணி அலைந்து-திரிந்து கொண்டிருப்பவன்
33 கலப அழகான பைத்தியம் சுந்தரானந்தர்?/ குதம்பைச் சித்தர்?
34 கம்பரிப கொல்லன் இரும்பு முதலிய உலோகவேலை செய்பவன்
35 கம்பள கருப்புக் கம்பள யோகி கருப்புக் கம்பளம் போர்த்தியவன்; சட்டைமுனி?
36 கணக்கல முண்டமாமன இரு சகோதரிகளின் இளைய சகோதரன் ஏழுதலையுள்ள சகோதரிகளின் இளைய சகோதரன்
37 கண்ஹ / கணப கருப்புத் தோலன் கருப்பு சித்தர்
38 கங்கண சித்தராஜ சித்தர்களுக்கு அரசன்
39 கங்கரிப காதல் பித்தம் கொண்ட விதவை
40 கந்தாலிப குப்பைப் பொறுக்குபவன் கந்தை தையல்காரன்
41 கபலப கபாலம் கொண்டவன் காபாலிகன்
42 கட்கப திருட்டுராஜா பயமில்லாதத்ன் திருடன்
43 கிலகிலப தள்ளிவைக்கப்பட்ட லொடலொட வாயன் வீண்பேச்சாளிடமரானந்தர் / பிண்ணாகீசர்?
44 கிரபலப வென்று துக்கப்படுபவன்
45 கோகிலப நிம்மதியான ஓவியன் கலைஞானி
46 கோடலிப விவசாயியான குரு  
47 குசிப கழுத்துவீங்கிய யோகி  
48 குக்கிரிப நாய் விரும்பி தத்தாரேயர்?
49 கும்பாரிப பானையன் / பானை செய்வோன் அகத்தியர்?
50 லக்ஷ்மீன்கர பைத்தியமான இளவரசன்
51 லிலப ராஜீய சுகவாசி என்றும் இன்பம் துய்ப்பவன்
52 லுசிகப தப்பித்துக் கொள்பவன் பொறுப்பற்றவன்
53 லுயிப மீன்-குப்பையைத் தின்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
54 மஜிப மிகப்பெரியவன்
55 மணிபத்ர மாதிரி மனைவி இவள்தான் மனைவி என்று போற்றப்படுபவள்
56 மெதினி களைத்த விவசாயி
57 மேகல முண்டமான இரு சகோதரிகளில் மூத்தவள் ஏழு சகோதரிகளில் மூத்தவள்
58 மெகோப முழிக்கும் குரு கண்ணிமைக்காத சித்தன்
59 மீனப மீன் பிடிப்பவன் மச்சேந்திரர் / மச்சமுனி?
60 நாகபோதி சிவப்புக் கொம்புத் திருடன் ஆரியதேவ /  ஒற்றைக்கொம்பன்
61 நாகார்ஜுன யோகி
62 கலினப சுதந்திர இளவரசன் யார் மீதும் ஆதாரமாக இல்லாதவன்
63 நரோப
64 நிர்குணப அறிவான முட்டாள்
65 பச்சரிப மாமிசம் சமைப்பவன் புலத்தியர்?
66 பங்கஜப தாமரையில் பிறந்த பிராமணன் பிரம்மா, கமலமுனி?
67 புதலிப மருந்து பாத்திரம் சுமப்பவன் தன்வந்திரி?
68 ராஹுல இளமைப் பெற்ற பழைய முட்டாள்
69 சரஹ அம்பு செய்பவன்
70 சகர கடலில் செல்பவன்? டமரானந்தர்?
71 சமுதர முத்தெடுப்பவன்
72 சாந்திப மிக்கப்படித்தவன்/அறிவுஜீவி அமைதியான பிரச்சாரி
73 சர்வபக்ஷ வெற்று வயிரன் நன்றாக சாப்பிடுபவன்
74 சவரிப வேட்டைக்காரன்
75 சாலிப நரி யோகி
76 தந்தேப சூதாடி
77 தந்திப முதுமைப் பெற்ற நெசவாளி
78 தகநப தேர்ந்தெடுத்தப் பொய்யன்
79 திலோப
80 உடிலிப பறக்கும் சித்தர் பறவை-மனிதன்டமரானந்தர்?
81 உபான செருப்புத் தைப்பவன்
82 வினப சங்கீதம் விரும்பி பாட்டுப்பாடுபவன்
83 விருப
84 வியலப அரசாங்க ரசவாதி யூகிமுனி?

இந்த பௌத்த சித்தர்களின் கதைகளைப் படித்தால், அவை அப்படியே நமது சித்தர்களின் கதைகளைப் போலவே இருக்கின்றன. நிச்சயமாக இக்கதைகளைப் படித்தறிந்தவர்கள், அவற்றை தமிழகத்திற்கு ஏற்றவாறு, சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கேற்றாவாறு மாற்றியிருக்கிறார்கள். பௌத்த-திபெத்திய பாரம்பரியங்களில் 16ம் நூற்றாண்டு ஆவணத்தில் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த மஹாசித்தர்கள்: ஹடயோகப்ரதீபிகா[7] என்ற 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் 32 மஹாசித்தர்களின் பெயர்களைக் கொடுக்கிறது[8].

  1. ஆதிநாத
  2. மச்சேந்திர
  3. சாவர
  4. ஆனந்தபைரவ
  5. சௌரங்கி
  6. மீனநாத
  7. கோரக்கநாத
  8. விருபாக்ஷ
  1. பிலேசயா
  2. மந்தான
  3. பைரவ
  4. சித்திபுத்த
  5. கந்தடி
  6. கோராம்தக
  7. சுரானந்த
  8. சித்தபாத
  1. சர்பதி
  2. கானேரி
  3. பூஜ்யபாத
  4. நித்யானந்த
  5. நிரஞ்சன
  6. கபாலி
  7. பிந்துநாத
  8. காகசண்டீஸ்வர
  1. அல்லாம
  2. பிரபுதேவ
  3. கோட
  4. சோலி
  5. திமிந்தி
  6. பானுகி
  7. நாரதேவ
  8. கண்டகாபாலிக

அதாவது 84 சித்தர்களில் இந்த 32 சித்தர்கள் அவ்வாறு “மஹா சித்தர்க்ள்” என்று தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை நம்மாட்கள் இதனைப் பார்க்கவில்லையோ என்னமோ? ஒருவேளை, 14 பேர்களை விடுத்து, 18 பேர்களைத் தேர்ந்தெடுத்தனரோ என்னமோ? இல்லை ஜைனர்கள் எப்படி “மஹாசித்தர்கள்” என்று தீர்த்தர்ங்களையும் குறைத்துக் கொண்டார்களோ அவ்வாறிருக்கலாம். பௌத்தம் பொருத்த வரையில், தாந்திரீகத்தை பின்பற்றி சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். பௌத்த சித்தர்கள் அனைவரும் தாந்தீர்கர்களே.

பௌத்த நூல்களைப் பின்பற்றி “திராவிட சித்தர்கள்” கதைகள் உருவானது: பொதுவாக ஜைன-பௌத்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருத நூல்களினின்று பெற்றப்பட்டவைதாம். ஜைனம் மற்றும் பௌத்தம் வேதங்களின் நிலைநிறுத்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக் கொண்டு, பெருமான்மையான மக்களின் நம்பிக்கைகளையும் தகவமைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள் தாம்[9]. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கர்மா, பாவம், புண்ணியம், ஆன்மா / ஆத்மா முதலி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டன[10]. எப்படி வேதங்களப் படித்து, அதற்கு எதிராக சில தர்க்கநூல்களை உருவாக்கினார்களோ, அதேபோல இதிகாச-புராணங்களுக்கு மாறாகவும் தயாரித்தார்கள் என்று முன்னமே எடுத்துக் காட்டப்பட்டது. “கதா சரித் சாகர” போன்ற கதைகளில் சித்தர்கள் ஏதோ மந்திர-தந்திரங்களில் வல்லவர்கள் போன்று சித்தரிக்கப் பட்டனர். அதேபோல ஆரியர்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக திராவிடர்களை தயாரித்தவர்களே, ஜைன-சித்தர்கள், பௌத்த-சித்தர்கள் போல, திராவிட-சித்தர்களை உருவாக்கியிருக்கின்றனர். கொடுத்துள்ள பெயர்கள், விளக்கம் முதலியவற்றைப் படிக்கும்போதே, தெரிவது என்னவென்றால், நிச்சயமாக இதைப்படித்து, 19-20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் புதியதான “திராவிட சித்தர்களை” உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். மேலும் யாரை சேர்ப்பது-விடுப்பது என்று குழம்பி, பட்டியலை உருவாக்கினதால், “பதினெண் சித்தர்” பட்டியலும் குழம்பிவிட்டது. அகத்தியர் பெயரில் உள்ள நூல்களைப் படித்து, இவற்றையும் படித்தால், எப்படி இக்கதைகளைக் காப்பியடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர் ஆதரவுடன் அல்லது உத்தரவுடன் தமிழ் பண்டிதர்கள் உருவாக்கியுள்ளனர்: ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பிய மிஷனரிகள் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளதால், ராபர்டோ டி நொபிலி, சீசன்பால்கு, பெஸ்கி போன்றவர்கள், தமிழ் பண்டிதர்களின் உதவியுடன், அத்தகைய சித்தர் பாடல்களை உருவாக்கியிருக்கலாம். சீசன்பால்கு கணபதி உபாத்யாயாவை மிரட்டி தமிழ் கற்றுக் கொண்டான், நூல்களையும் எழுதவைத்தான் மற்றும் அவரது சாவதற்கும் காரணமாக இருந்தான். ராபர்டோ டி நொபிலி “ஆத்தும நிர்ணயம்”, “புனர் ஜென்ம ஆக்ஷேபம்”, “அக்கியாண நிவாரணம்”, திவ்விய மாதிரிகை, ஞான சஞ்சீவி, அண்ட பிண்ட வியாக்கியானம், உலக பிராமண சாஸ்திரம், பரமசுமாக்ஷபிபிராயம் போன்ற நூல்களை எப்படி தமிழ் பண்டிதர்களை விலைக்கு வாங்கி எழுத வைத்தார்களோ அதேபோலத்தான் எழுதப்பட்டன[11]. ஐரோப்பியர்கள் ஓலைச்சுவடி புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றிருப்பதால், மேலும் பலவற்றிற்கு மூலப்பிரதிகளை எடுத்து, காகித நகல்களை வைத்துச் சென்றுள்ளதால், நிச்சயமாக அவர்கள் இந்த வேலையை செய்திருக்க வேண்டும்.  உலக மகாயுத்தங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தத்தமது காலனிய நாடுகளினின்று வெளியேற வேண்டும் என்று தெரிந்தபோது, அங்கங்கு இத்தகைய போலி ஆவணங்களை, கட்டுக்கதைகளை, புரட்டு சரித்திரங்களை உற்பத்தி செய்து வைத்துவிட்டனர். மேலும் 19ம் நூற்றாண்டில் இந்திய மருத்துவமுறைகளுக்கு எதிராக ஆங்கிலேயர் அதிக அளவில் அடக்குமுறைகளைமேற்கொண்டு வந்தனர். உள்ள மருத்துவமுறைகளை “நாட்டு மருந்துவம்” (Native medicine), “காட்டு மருந்துவம்” (Tribal medicine), “கிராம மருந்துவம்” (village / folk medicine), “அநாகரிக மருத்துவம்” (Uncivilized / crude medicinal practices), “பில்லி-சூன்ய மருத்துவம்” (Shamanism / Witchcraft), “போலி மருத்துவம்” (Pseudo-medicine), “பேய்-பிசாசுகளை ஓட்டும் முறை” (Exorcism) என்றெல்லாம், பழித்துப்பேசி, இகழ்வாக எழுதி, எதிர்த்துச் சட்டங்களை இயற்றித் தடையும் செய்தனர்.

© வேதபிரகாஷ்

15-09-2012


[1] Anagarika Govinda, Tantric Buddhism, in P. V. Bapat (Gen.editor), 2500 Years of Buddhism, Publication Division, Government of India, New Delhi, 1997, p.315.

[2] Radhakamal Mukerjee, The March of Tantrika art over the Pacific, in Studies in Asian History, pp.289-296.

[3] Probodh Chandra Bagchi, Studies in the Tantras, Part-I, University of Calcutta, 1975, see under the chapter “On Foreign element in the Tantra”, pp.45-55.

[4] A list of eighty-four Siddhas (though, actually only 76 names are mentioned) is found in a manuscript (manuscript no 48/34 of the Asiatic Society of Bengal) dated Lakshmana Samvat 388 (1506) of a medieval Maithili work, theVarna(na)ratnākara written by Kaviśekharācārya Jyotirīśvara Ṭhākura, the court poet of King Harisimhadeva of Mithila (reigned 1300–1321). An interesting feature of this list is that the names of the most revered Nathas are incorporated in this list along with the Buddhist Siddhacharyas.

[6] Scott Hajicek-Dobberstein, Soma Siddhas and alchemical enlightenment: pasychedelic mushrooms in Buddhist tradition, Journal of Ethnopharmacology, 1995, vol.48, pp.99-118.

[7] Dasgupta, Sashibhusan (1995). Obscure Religious Cults, Firma K.L.M., Calcutta, ISBN 81-7102-020-8, pp.203ff, 204.

[8] Shastri Haraprasad (ed.) (Hajar Bacharer Purano Bangala Bhasay Bauddhagan O Doha (in Bengali), 1916, 3rd edition 2006). Kolkata: Vangiya Sahitya Parishad, pp.xxxv-vi.

[9] J. G. Jennings, The Vedantic Buddhism of the Buddha, Geoferry Cumerlege, Oxford University Press, London, 1947.

[10] Ananda K. Coomaraswamy, Hinduism and Buddhism, The Wisdom Library, New York.

[11] எஸ். ராஜமாணிக்கம் (பதிப்.), ஆத்தும நிர்ணயம், பாளையங்கோட்டை, 1967.

பதிப்பாசிரியரே ராபர்டோ டி நொபிலி பெயரில் உலாவரும் நூற்களில் பெரும்பாலும் அவரால் எழுதப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் பக்கங்கள்.xxii-xxiv. அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – சுவர்க்கம், நரகம், வைகுந்தம், கைலயம்…….பாவம், புண்ணியம்…..போன்ற விஷயங்கள் கிருத்துவத்திற்கு கிஞ்சித்தேனும் சம்பந்தம் இல்லை. ஏதோ ஒரு தமிழ்நூலை, கிருத்துவநூல் என்று சொல்லிக்கொள்வது நன்றாகவே தெரிகிறது.

Posted in அகத்திய, அகத்தியர், அகஸ்தியர், அரேபியா, அறிவு ஜீவி, ஆதிநாத, ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், ஆரியன், இந்தியவிரோதிகள், ஓடந்தபூர், ஓலை, ஓலைச்சுவடி, கபாலி, கம்பளி, கலாச்சாரம், காபாலிக, குலாச்சார, கௌதம, க்ஷத்திரியர், சட்டைமுனி, சரகர், சல்ய, சல்லிய, சஹஜயான, சாரணர், சிகிச்சை, சிதம்பரம், சிதர், சித்தஞானம், சித்தபாத, சித்தபிரமை, சித்தபுரம், சித்தபுருஷன், சித்தப்பிரமை, சித்தம், சித்தர் பாடல்கள், சித்தாந்திகள், சுவடி, டமரானந்தர், தக்ஷசிலா, தந்திரம், தமிழகம், தமிழ், தமிழ்நாடு, திரவிடம், திராவிடன், துறவி, தேரையர், நரதேவ, நாரதேவ, நாலாந்தா, பகுத்தறிவு, பஞ்சபூதங்கள், பதஞ்சலி, பதினென் சித்தர்கள், பரம்பரை, பரம்பரை வைத்தியர், பராசர, பல்தேயமொழியோர், பல்மொழிதெயத்தோர், பாலியல், புத்தகம், புனிதம், புலஸ்தியர், பூதங்கள், பூர்ணலிங்கம் பிள்ளை, பெரிய ஞானக் கோவை, பௌத்தம், மச்சேந்திர, மந்திரம், மயக்கம், மருந்து, யந்திரம், வஜ்ரயான, வாமாசார, விக்ரமசிலா, வீரசைவம், வேதம், வேதாங்கம், வேதாந்தம், வைத்தியர், ஹடயோகப்ரதீபிகா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »