சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Posts Tagged ‘காபாலிகம்’

ஜைனசித்தர்கள் – ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

Posted by vedaprakash மேல் செப்ரெம்பர் 9, 2012

ஜைனசித்தர்கள்ஜைனகாலத்தைய மருத்துவம், மருத்துவமனைகள் முதலியன

ஜைனர்காலத்தில்இருந்தமருத்துவமனைகள்: காஷ்மீரத்தை மையமாகக் கொண்டு சுமார் 1800 BCE வாக்கில் ஆட்சி செய்த அசோகன் ஜைனமதத்தைச் சேர்ந்தவன். ஆனால், அவன் காலத்தில் சைவம் ஓங்கியிருந்தது. இமயமலை சார்ந்த மக்கள் சிவனை வழிப்பட்டு வந்தனர். இதனால் சிவனை ஆதாரமாக மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் பெருகின. அதனால் தான், இமயமலையைச் சுற்றியுள்ள நாடுகளில் கிழக்கே – திபெத், சைனா; தெற்கே நேபாளம், காஷ்மீரம்; மேற்கே ஆப்கானிஸ்தான் (காந்தாரம்), மத்தியாசிய நாடுகள் (துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்[1]), வடக்கே திபெத்-சீனா பகுதிகள்- இங்கெல்லாம் சிவலிங்கங்கள், அதிலும் மூன்றுமுக, நான்குமுக லிங்கங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. மந்திர-தந்திர-யந்திர வழிபாடுகள் மருத்துவமுறைகளில் வளர்ந்தன. மருத்துவமனைகளும் பெருகின. “கபாலிகர்” என்றழைக்கப்பட்ட, இங்கிருந்த மருத்துவர்கள், அறுவைசிகிச்சை வல்லுனர்கள் தலை-மூளை-மனம் சம்பந்தப்பட்ட நோய்கள், வியாதிகள் முதலியவற்றில் சிறந்து விளங்கினர்.

ஜைன-அசோகன் காலத்தைய மருத்துவமனைகள்: மண்டையோடுகளில் ஓட்டைப் போட்டு சிகிச்சை நடத்தினர். இதற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. லோதல், ஹரப்பா, காலிபங்கன், காஷ்மீர் முதலிய இடங்களில் கிடைத்துள்ள சுமார் 4300 YBP / 2300 BCE ஆண்டுகள் காலத்தைய பழங்கற்கால மனிதனின் மண்டையோடுகளில் மிகநுண்ணிய துளைப்போடும் கடைசல் ஊசி மூலம் போடப்பட்ட துளைகள் காணப்படுகின்றன. இதற்கு ட்ரெபினேஷன்[2] (Trepenation) என்று பெயர் அதாவது ஒருவிதமான மண்டையோட்டு (Cranial surgery) ரணச்சிகிச்சை, மூளை அறுவைசிகிச்சை[3] / ஆபரேஷன் ஆகும்[4]. ஆகவே, இத்தகைய அறுவைசிகிச்சை நடத்த மருத்துவமனைகள் இருந்தது திண்ணம். சுமார் 300-250 BCEயில் அசோகர் மிருகங்ளுக்குக்கூட மருத்துவமனைகள் கட்டினான் என்று அவனது கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும்போது, அவருக்கு 2000 வருடங்களுக்கு முன்பு மருத்துவமனைகள் இல்லாமல் இத்தகைய அறுவைசிகிச்சைகள் நடந்தனவா? இல்லை, அவையெல்லாம் “சித்து”வேலையா, சித்தர்கள் மாயையா? தலை-மூளை-மனம் நோய்கள் எல்லாமே மனபாதிப்பு, மனச்சிதைவு போன்ற மனநோய்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளன. சித்தம் பிடித்தவர்கள், சித்தப்பிரமைப் பிடித்தவர்கள், பைத்தியம் அல்லது பித்தம் பிடித்தவர்கள் என்றெல்லாம் அத்தகைய நோயாளிகள் அழைக்கப்படுவர். அதனால்தான் அத்தகைய நோய்களைத் தீர்ப்பவர்கள் “சித்தர்கள்” என்ரு அழைக்கப்பட்டார்களா? கீழே ஜைனமத சித்தர்கள் அத்தகைய சித்த, சித்த-புத்த, புத்த-சித்த போன்ற பெயர்களைக் கொண்டிருந்ததைக் காணவும்.

 

ஜைனமத சித்தர்கள்: ஜைனமரபில் சித்தர்கள் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜைனத்தில் யார் சித்தராக முடியும் என்று சரத்துகளைக் குறிப்பிடுகிறது. அதன்படி ஒரு பட்டியலையும் கொடுக்கிறது[5].

  1. ஜீனசித்தா – ரிஷபதேவ, அஜித்நாத், சாந்திநாத், நேமிநாத், பாஷ்வநாத, மஹாவீர முதலியோர்.
  2. அஜீனசித்த – கௌதமசாமி.
  3. தீர்த்தநாத – பொதுவான பெயர்.
  4. அதீர்த்தநாத – மருதேவமாதா.
  5. கிருஹஸ்தலிங் சித்த – சக்கரவர்த்தி பரத.
  6. அன்யலிங் சித்த – வக்கக்சிரி.
  7. ஸ்வலிங் சித்த – முனி ஸ்ரீ பிரசன்னசந்திர.
  8. புருஷலிங் சித்த – சுதர்மசுவாமி.
  9. ஸ்திரீலிங் சித்த – சந்தன்பால, மிருகவதிஜி,.
  10. நபுசங்க்லிங் சித்த – கன்கேயமுனி.
  11. ப்ரத்யேக் சித்த – கர்கண்ட் முனி.
  12. ஸ்வயம்புத்த சித்த – கபில் கேவலி.
  13. புத்த போதித் சித்த – கௌதம முனி, வாயுபூதி.
  14. ஏக் சித்த – மஹாவீரசுவாமி.
  15. அநேக் சித்த – ரிஷபதேவ முதலியோர்.

இதெல்லாம் ஆண்-பெண்-ஆணல்ல-பெண்ணல்ல-ஆணும்-பெண்ணும் சேர்ந்தது என்ற ரீதியில் உள்ளது. சித்த, புத்த-சித்த போன்ற பெயர்களையும் கவனிக்கவும்.  ஒருவேளை இவர்கள் எல்லோரும் பாலியல் நோய்கள் தீர்க்கும் சித்தர்களா? ஜைன மதத்தில் சம்சார சாகரத்தில் இருந்து விடுபட்டு, கடுமையான நியமங்களைப் பின்பற்றி முக்தி நிலையை முயற்சித்தவர்கள், அடைந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப் பட்டனர். இங்கும் “தீர்த்தங்கரர்” என்ற நிலையடைந்தவரை அவ்வாறு ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் ஜைனவிதிகளைப் பின்பற்றாத, “சித்தபுத்ர” என்பவரைப்பற்றிக் குறிப்பிடும்போது[6], அவர்கள் வெண்ணிற உடையை அணிந்திருக்கவேண்டும், தலையை மழித்து குடுமி வைத்திருக்க வேண்டும், கையில் கொம்பு, பாத்திரம் இல்லாமல் செல்லவேண்டும் என்றும் ஜைனநூல்கள் குறிப்பிடுகின்றன.

மனிதர்கள், சித்தர்கள், சர்வத்த சித்தர்கள்: ஜைனநூல்கள் உயிருள்ள-உயிரற்றவைகளை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. அவற்றில், ஐந்து எந்திரியங்கள் உள்ளவற்றை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கின்றன. ஆனால் மனிதர்களில் மேம்பட்டவர்களை எந்திரியங்களை வென்றவர்கள் கர்மங்களை அழித்தவர்கள் இந்திரஜித்துகளாகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே – உடலையும் சேர்த்து – தேவையில்லாததாகிறது. காற்றைவிட இலேசாகிறார்கள். அதாவது அவர்கள் எல்லாவற்றையும் இழந்து உயிரற்ற ஜடமாகிறார்கள். உண்மையில் ஜைனர்கள் வடக்கிருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் உடலைவிட்டு இறக்கிறார்கள். பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறார்கள். சாகாநிலையை அடைகிறார்கள். இருப்பினும் தம்முடையத் தனித்தன்மையை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். இறந்தும் (ஜீவன்முக்தர்களாக) இருக்கிறார்கள். அவற்றில் சித்தர்கள் வருகிறார்கள்[7]. அவர்கள் மனிதர்களைப் போலவே இருந்தாலும், எப்படி தமது குணாதசயங்களால் மாறுபட்டுள்ளார்கள் என்றும் விளக்குகின்றன. இப்படித்தான் “அரிஹந்தர்”, சித்தர்கள் ஆகிறார்கள்[8]. “அரிஹந்தர்” சித்தர்களுக்கு மேலே வைக்கப்பட்டாலும், அவர்களையும் விட தங்களுடைய துறவினால் மேனிலையை அடைகிறார்கள். சித்தர்களுள் உயர்வானவர்களை “சர்வத்த சித்தர்” என்றும் குறிப்பிடுகின்றன. அதற்கேற்றாற்போல அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள், பேரண்டவியலில் இடத்தில் வைக்கப்படுகிறார்கள். இத்தகைய நிலை, உடல்-மூச்சு கலைகளினால் அடைவது. ஆனால், இடைக்காலத்தில் மருந்துகளை உட்கொண்டால் இத்தகைய நிலையை அடையலாம் என்று திரித்து எழுதப்பட்டது. அதனால்தான், பொய்யான நிலையேற்ப்பட்டது.

தசாவதாரம், 12 ராசிகள் போன்ற பிரிவுகள்: ஜைனத்தில் இருந்த 24 தீர்த்தங்கரர்களின் குறிப்பு, சமவய என்ற கல்பசூத்திரம் மற்றும் அவஸ்யக நிருக்தி நூல்களில் காணப்படுகின்றன[9]. அவர்களுக்கான அடையாளச் சின்னங்களும் கொடுக்கப்பட்டுள்ளன[10]. அவை பின்வருமாறு:

தீர்த்தங்கரின் பெயர்

அடையாளச் சின்னம்

  1. ரிஷப, இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த, முதல் ஜீனர்.
எருது
  1. அஜிதா, ஜிதாசத்ருவின் மகன்
யானை
  1. சம்பவ, ஜிதரியின் மகன்
குதிரை
  1. அபிநந்தன, சம்பரனின் மகன்
 குரங்கு
  1. சுமதி, மேகவின் மகன்
பறவை
  1. பத்மபிரபா, ஸ்ரீதருடைய மகன்
தாமரை
  1. சுபர்ஸ்வ, ரதிஸ்தவின் மகன்
ஸ்வஸ்திக
  1. சந்திரபிரப, மஹாசேனவின் மகன்
சந்திரன்
  1. புஸ்பானந்தா / புஸ்பானந்தா, சுப்ரியாவின் மகன்
முதலை
  1. சீதல, திருதராஷ்டரனின் மகன்
ஸ்ரீவத்ஸ
  1. ஸ்ரீரேயா / ஸ்ரீயன்ஸா, விஷ்ணும்வின் மகன்
காண்டா மிருகம்
  1. அசுபூஜ்ய, வசுபூஜ்யவின் மகன்
எருமை
  1. விமல, கீர்த்திவர்மணனின் மகன்
கரடி
  1. அனாத/அனாதஜித், சிம்மசேனாவின் மகன்
கழுகு
  1. தர்மா, பானுவின் மகன்
இடி
  1. சந்தி, விஸ்வசேனாவின் மகன்
கலைமான்
  1. குந்து, சூராவின் மகன்
ஆடு
  1. அர, சுதர்ஸனனின் மகன்
நந்தியவர்த
  1. மாலி, கும்பவின் மகன்
ஜாடி
  1. முனிசுவர்தா, சுமித்ராவின் மகன்
ஆமை
  1. நிமி, விஜயாவின் மகன்
நீலத்தாமரை
  1. நேமி/அரிஸ்தநேமி, சௌத்ரஜ்யாவின் மகன்
சங்கு
  1. பார்ஸ்வ/பார்ஸவநாத, அஸ்வசேனனின் மகன்
ஐந்தலை நாகம்
  1. வர்த்தமான/மஹாவீர, கடைசி ஜீனர், சித்தார்த்தரின் மகன்
சிங்கம்

இப்பெயர்கள் மற்றும் அடையாளச்சின்னங்களைக் கூர்ந்து கவனித்தால், தசாவதாரத்தை ஒத்திருப்பதுடன், அவற்றை வானவெளி மண்டலத்தின் 24/12 பிரிவுகள் மற்றும் நாட்காட்டியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த தசாவதாரத்தை காப்பியடித்து, 19-20 நூற்றாண்டு சித்தர்பாடல்களை எழுதியிருப்பதைக் காணலாம்[11].

சைவஜைனபௌத்தப்பிரிவுகள்ஏன்வந்தன?: இந்திய மருத்துவ வல்லுனர்கள் மந்திரம்-தந்திரம்-யந்திரம் என்ற பிரிவுகளில் அவரவர் கடமைகளை, வேலைகளை செய்து வந்தனர். ஆனால், ஜைன-பௌத்த மதங்கள் வளர ஆரம்பித்தபோது, இவை எல்லோரும் பின்பற்றி வரும் நிலை ஏற்பட்டது. வேதகாலத்தில் பெண்கள் வேதங்களை உருவாக்கியதுடன், படித்தும், போதித்தும் வந்தனர். ஆனால் ஜைன-யோகினியர் தந்திரங்களில் ஈடுபட்டபோது, பாலியல் ரீதியல் தவறுகள், பிறழ்ச்சிகள், குழப்பங்கள் ஏற்பட்டன. விஹாரங்களில் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன. இதனால் யோகினி / ஜோகினியர் தனித்து வைக்கப்பட்டனர். அவர்கள் வேதங்களைப் படிக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. அதாவது சக்திவழிபாட்டு முறைகள் திரித்து விளக்கம் அளித்தமையால் இந்நிலை ஏற்பட்டது. இதனால்தான், 64 / 84 யோகினி / ஜோகினி கோவில்கள் மக்கள் வசிக்கும் இடங்களினின்று தூரத்தில் இருக்கின்றன. பிறகு வந்த புத்தர் இதனால்தான், பெண்களை பிட்சுனிகளாக சங்கத்தில், புத்ததர்மத்தில், விஹாரங்களில் சேர்க்கக்கூடாது என்று ஆணையிட்டார். ஆனால், ஆனந்த என்ற அவருடைய சீடர், வேண்டிக் கொண்டு விலக்குப் பெற்றார். இதனால்தான் இவ்விரு மதங்களும் ஆதிக்கத்தில் இருந்தாலும், மதரீதியில் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளமுடியவில்லை. சந்திரகுப்த மௌரியர் ஜைனராக இருந்தாலும், ஜைனம் வலரவில்லை. அசோகர் புத்தமதத்தை பரப்பினலும், இந்தியாவில் வளரவில்லை. பிறகு இடைக்காலத்தில் ஜைன-பௌத்தர்களால் முஸ்லீம்களையும் எதிர்கொள்ளமுடியவில்லை.

© வேதபிரகாஷ்

08-09-2012


[1] ருஷ்ய கூட்டணி உடைந்த பிறகு, இவையெல்லாம், இப்பொழுது தனி நாடுகளாகியுள்ளன. முன்பு பாரதத்திலிருந்து சைனாவிற்கு இமயமலையை மேற்கு-வடமேற்கு திசைகளில் சுற்றி செல்ல ஏற்படுத்தப் பட்ட பாரம்பரிய வழி “பட்டு வணிகப் பாதை” (Silk Road) என்று சொல்லப்பட்டது. அவ்வழிகளில் இந்நாடுகள் உள்ளன. இங்கு Marc Aurel Stein (1862-1943), A. F. Rudolph Hoernle போன்றோர் பல அகழ்வாய்வு ஆதாரங்கள், அத்தாட்சிகளை கண்டெடுத்துள்ளனர்.

[2] The trepanation, also called trephination or trephining, had been the oldest craniotomic surgical procedure practised by mankind since the Stone Age by way of drilling or cutting through the skull vault of a living or recently deceased person.

[3] A. R. Snnkhyan and G. R. Schug, First evidence of brain surgery in Bronze Age Harappa, CURRENT SCIENCE (scientific correspondence), VOL. 100, NO. 11, 10 JUNE 2011, pp. 1621-1622; http://www.currentscience.ac.in/Volumes/100/11/1621.pdf

[4] Maria Mednikova, Post-mortem Trepenations in Central Asia: Types and Trends, in Kurgans, Ritual sites and Settlements: Eurasian Bronze and Iron Age, pp.269-279.

[6] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Munshiram Manoharlal Publishers, New Delhi,  1984, p.317.

[7] Walther Schubring, The Doctrine of the Jains – Described after the Old Sources, Motilal Banarasidas publishers, New Delhi, 2000, pp.97-98, 246, 279, 329.

[8] Sancheti Asoo and Bhandari Manak Mal, First Steps to Jainismwith Thirty two Plates (Part one), M. Sujan Mal Ugam Kanwar Sancheti Trust, Jodhpur, 1995, p.81.

[9] Jagdishchandra Jain, Life in Ancient India as depicted in Jaina Canon and Commentaries, Mushiram Manoharlal, New Delhi, 1984, pp.3-4.

[10] Colebrooke’s Essays, Vol.II, p.187; Asiatic Researches, Vol.IX, p.305; Burgess, In Indian Antiqyary, 1873, Vol.I, p.134.

[11] 19-20 நூற்றாண்டு “திராவிட சித்தர்கள்” மட்டுமல்ல, 17-18 நூற்றாண்டு கிருத்துவர்கள், 14-15 நூற்றாண்டு முஸ்லீம்கள் கூட அத்தகைய தசாவதார தத்துவத்தைக் காப்பியடித்து தத்தம் மதங்களில் தகவமைத்துக் கொண்டுள்ளனர். இதெல்லாம் பெரும்பான்மையான இந்துக்களைக் கவர மேற்கொண்ட முயற்சிகள் தாம்.

Posted in அறுவை சிகிச்சை, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், காபாலிகம், கிர்கிஸ்தான், சீனா, சைனா, சைவம், ஜோகினி, ஞானம், ஞானி, தஜிகிஸ்தான், திகம்பரம், திகம்பரர், திபெத், துர்க்மேனிஸ்தான், நிர்வாணம், மத்திய ஆசியா, யோகினி, ராஜஸ்தான், வாரணாசி, வீரசைவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »